ஊதுகுழலிலிருந்து உதிர்ந்த நொடியில்
காற்றில் அலைந்து வண்ணம்கூட்டி
வண்ணம் கலைத்து வண்ணம்கூட்டி
நடனமிடும் நீர்க்குமிழ் வாழ்வு.
யார் வாழ்விலோ யாரோ எவரோ
கனப்பொழுதில் நீர்க்குமிழாய் கடக்கையிலும்
வண்ணங்கள் கூடிய மிதப்பு,
ஒரு புன்னகையை, ஒரு மகிழ்வை,
ஒரு கடந்துபோன பால்யத்தை
பார்த்தவர் மனதில் பரவசமாய் படரவிட்டு,
பிறவிப்பயன் பெற்றதாய் கரைந்து,
காற்றின் வீச்சில் பனிச்சிதறலாய்..
நீர்க்குமிழி வாழ்வாம்! இருந்துவிட்டுப்போகட்டுமே,
பின் குறிப்பு:
மதிலுகள் போல பெரிதாய் எழுதுவேனோ தெரியாது, தலைப்பிலாவது rhyming ஆ வைப்போமே என்று குமிழிகளை குமிழுகளாக்கிவிட்டேன் :-)
கருத்துகள்
கருத்துரையிடுக