முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

21_ஆம்_நூற்றாண்டின்_ஒப்பற்ற_புதிய_பொருளாதாரத்துவம்!

ஒரு ஊர்ல வருமானத்துக்கு வழியில்லாம ஏழ ஒருத்தன் தவிச்சானாம். பல ஐடியாக்கள முயற்சி பண்ணிப்பாத்தும் முடிலயாம். "யப்பா!, இந்த அண்ணாடங்காய்ச்சி பொழப்புலயும் மண்ணு உளுந்திருச்சே!!"ன்னு ஆதங்கத்தில அளுக அளுகயா வந்ததாம். அளுக பெருசாகி, சோகம் அப்பிக்கிச்சாம். சோகத்தக்கொறைக்க சரக்கடிக்கலாம்னா அதுக்கும் காசில்லயாம். 'சே! என்ன பொழப்புடா இது!' ன்னு... அவனே காச்ச ஆரம்பிச்சிட்டானாம். மிச்சமானத பக்கத்தில உள்ள அளுகாச்சிங்களுக்கு தந்தானாம். சரக்கு, தளும்ப தளும்ப தந்த ஃபீலிங்ஸ்ல அங்க உள்ள காச்சிங்கள்லாம் ஒண்ணா சேந்து மப்புல ஒரு தொழில் தொடங்குனாங்களாம். காச்சுற தொழுலுதான்... தொழில் வளர வளர, ஒரு ஸ்டேஜில நாடாள்கிற ராசாவோட வருமானத்த விட இவிங்க வருமானம் அதிகமானத கண்ட ராசா காண்டாயி, 'இன்னைலேந்து காச்சுகிற வேலய அரசுடைமையாக்குறேன். நானே காச்சிறேன்!'னு வரிஞ்சி கட்டி காச்ச ஆரம்பிச்சாராம். தொழிலு கைய உட்டு போன சோகத்தில அந்த அண்ணாடங்காச்சிங்கள்லாம் க்யூல நின்னு சரக்கு வாங்கி அடிச்சி, உருண்டு பொரண்டு வூடுபோய் சேந்தாங்களாம். ராசாவுக்கு கஜானா நெம்பிகிட்டே இருந்துச்சாம். காச்சிங்களோட பொண்டு பிள்

இந்த தரிசனம், வரம்!

அதிகாலையில் வெளியில் கிளம்பி காரில் ஏறி கதவை மூடும் அந்த சிறிய இடைவெளியில், காற்றில் மிதந்து இலை ஒன்று உள்ளிறங்கியது. "என்ன அழகான நிகழ்வு! இந்த இலைக்கு இன்று free ride வேண்டுமாம்!' என்று மகிழ்வாய் கிளப்ப, இலை அசைந்தது, நகர்ந்தது! "விரல் நக அளவே உள்ள இது என்ன?" என வியந்து கேமரா கண் வழியே பார்த்தேன். பட்டு பச்சையில் நெய்ததுபோலான முதுகு காட்டி, 'அது' ஒரு சப்போட்டா விதையின் மீது ஒண்டியிருந்தது. சற்றே நகர்ந்து மறுபடி ஒண்டியது. முடிந்தவரை கேமராவை அதனருகில் கொண்டு சென்று பல படங்கள் எடுத்தேன், அது நகரவேயில்லை... நாமதான் நல்ல படங்களை தேடித்தேடி பதிவு செய்யும் இனமாயிற்றே என்ற இறுமாப்போடு எனது பேனாவைக்கொண்டு அதை மெல்ல நகர்த்தினேன், ஒரு தேர்ந்த மாடலை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் படமெடுக்க விழையும் கலைஞனின் தாகத்தோடு. பேனாவின் அடிப்பகுதி அதன்மேல் பட்டதுதான் கண்டேன்...அடுத்த நொடியில் என் நகமளவே இருந்த அது, இழுத்து நாண்பூட்டிய வில்லிலிருந்து தெறித்துப்பறக்கும் அம்பு போல ஆறடி உயரம் தாண்டி எகிறிப்பறந்து கட்டாந்தரையில் அமர்ந்து திரும்பி முறைத்தது 'போடா ம**' என்று திட்டியப

வானம் பார்த்தல்

உல்லாச உலகம் நமக்கே சொந்தம் தையடா தையடா தையடா! கொரோனா வியாதியால் இந்தியாவில் வெகுவேகமாக வளர்ந்துவரும் உயிர்காக்கும் தொழிலில் மிக மலிவானது மாஸ்க் தைக்கும் தொழில். கருணை உணர்வினால் தொடங்கப்பட்ட இந்த சேவை, இன்று மேட்சிங் ப்ளவுஸ் ரேஞ்சுக்கு வளர்ந்திருக்கிறது. வீதிக்கு வீதி நடைபாதைக்கடைகளில் மலிவாய் கிடைக்கிறது. கேரளத்து சேட்டன் ஒருவர் மாஸ்க் மறைக்கும் தன் மீசை தாடியை உலகிற்கு காட்டியே தீருவேன் என மாஸ்க் மீது அது மறைக்கும் தன் முகப்பகுதியின் புகைப்படத்தை பிரிண்ட் செய்து, இப்போது அது ஒரு வல்லிய ரோரிங் பிசினசானு! கூடிய விரைவில் ஐ.எஸ்.ஓ முத்திரையிட்ட உலகத்தரமான மாஸ்க்குகள் அனைத்துக்கடைகளிலும் சானிடரி நாப்கின்போலவே விற்கப்படும். பயன்பாடும் நாப்கின்கள் போலவே வருடக்கணக்கில் தொடரவேண்டியிருக்கும்; அதிகரிக்கும் மகாமாரிகள் ஓரு காரணமாக இருக்கலாம் அல்லது சைனாவிலிருந்து வெளியேறும் உற்பத்தி நிறுவனங்களை இங்கு இழுத்து நம் இயற்கை வளங்கள் ஆலைப்புகையாக மாறிப்போய்... நாம் சுவாசிக்க மாஸ்க் தொடர்ந்து அணியவேண்டி வரலாம். 2020 ஆம் ஆண்டு உலகிற்கே மாஸ்க் போட்ட ஆண்டாக ஆகிப்போனது எதனால் என நாமெல்லாம் சிந்திக்க நேரமின்ற

இப்படி பண்ணீட்டாளேடா முகுந்தா!

நிலாநிழல் என்று சுஜாதா ஒரு நாவல் எழுதியிருந்தார். மிடில் கிளாஸ் முகுந்தனுக்கு கிரிக்கெட்டே சுவாசம். இந்திய அணியின் ஜெர்சி அணிவது அவனது கனவு. பல தடைகளை தாண்டி உயரம் தொட முயன்று, சில வெற்றிகள், பல (அரசியல் கிறுக்கீட்டு) தோல்விகள், இடையில் ஒரு காதல், அதன் பின் அவிழும் துரோகம்... இவையெல்லாவற்றையும் கடந்து... மீண்டும் படிக்கப்போய்விடுவான். அந்தக்கதையில், காதலி அவனது வீட்டுக்கு வந்துசென்றபின்னான அவனது மனநிலை மிக பொயட்டிக்கான ஒன்று. நான் இளையராஜாவின் இசைக்கு பரம ரசிகன். ராஜா அல்லாத இசையமைப்பாளர்களின் இசை எதுவும் நீண்ட காலத்துக்கு மனதை ஏனோ வருடுவதில்லை... தப்பிப்பிழைத்த சில பாடல்களுள் இந்த ஒரு பாடல் மட்டுமே ரிபீட் மோடில் எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை... இந்தப்பாடல் கேட்கும்போதெல்லாம் முகுந்தனது ஏக்கம் என்னிடமும் தொற்றிக்கொள்ளும்... அது பாடகன் பாலுவின் வெற்றி! -------- ஆண் : மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே ஒரு காயமென்னடி என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே ஆண் : மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே ஒரு

காதலே என் காதலே...

ஒரு பாடலை ஒரு பாடகன் பாடுகிறான். பாடும்போதே உடைந்து அழுகிறான். பாடலை கேட்பவர்களின் கண்களிலும் நீர்த்துளி கோர்த்துக்கொள்கிறது. முதல் முறை பாடும்போது மட்டுமல்ல, ஐநூறாவது முறை பாடும்போதும்! முதல்முறை கேட்கும்போது மட்டுமல்ல, ஐநூறாவது முறை கேட்கையிலும்! பாடல் என்னவோ வழக்கமான காதல் பாடல்கள் போலதான்.  தனது கலையை விரும்பிய பெண்ணை இவன் விரும்ப, கலைக்கு சொந்தக்காரன் இவனது சகோதரன் என்று தவறாய் கற்பிதம் செய்துகொண்ட அந்தப்பெண் இவனை உதாசீனம் செய்து இவனது சகோதரனை விரும்ப, ஒரு இயலாமை நேரத்தில் உடைந்துபோய் இந்தக்கலைஞன் பாடும் பாடல் இது. S.P.B என்கிற மகத்தான பாடகன் இந்தப்பாடலில் தன் உயிரை உருக்கி ஊற்றி... என்ன குழைவு, என்ன இயலாமை, என்ன தளும்பல், என்ன குமுறல்... " காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன் கண்களை நீ மூடிகொண்டாய் நான் குலுங்கி குலுங்கி அழுதேன் இது மாற்றமா தடுமாற்றமா என் நெஞ்சிலே பனிமூட்டமா நீ தோழியா இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா " அடுத்தமுறை இந்த வரிகளை இந்தக்கலைஞன் பாடுவதை நீங்கள் கேளுங்கள், கண்களை மூடி, உறக்கம் வரும் புதிய இரவின் முந்தைய நொடிகளில்... அதனோடு பி

ஒரு மயிரின் பயணம்

காலக்கூத்தனின் உதிர்ந்த மயிரொன்று "ஏனிந்த தண்டனை?" என ஈரைந்து மாதமாய் மெய் வருத்தி கடுந்தவம் செய்ய, அவன் எட்டி உதைக்க, வழுக்கி 'விழுந்த' நொடியில், விழுந்த இடத்தில், எங்கெங்கு காணினும் வேசதாரிகள் கூத்தாடும் காட்சி. புதிதாய் சேர்ந்ததுவும் ஆட்டம் பாட்டம் பார்த்து, யாரோ பூசிய வண்ணங்களை தாங்கி வேசமிட்டு ஆட, ஆட்டமான ஆட்டம், பாட்டமான பாட்டம், கொண்டாட்டம். வேசத்தின் வேசம் நொடிக்கு நொடி மாறும் விந்தை, வேதனை, மகிழ்வு, கோபம், பயம், தயக்கம், மயக்கம் உந்தித்தள்ள, வேசந்தாங்கியின் சிந்தை குழம்பி "நான் யார்?" என தட்டுக்கெட்டு சுழல,  தங்கள் ஆட்டத்தில் அபசுரமாய் "இதென்ன புதாட்டம்?" என்று திகைத்த மற்ற வேசங்களும் வேசக்காரர்களும், தம் சுருதியிலிருந்து பிசகி ஆடும் வேசதாரியை பார்த்து சொன்னது இதுவே: "ஒன்று சிவமாயிரு, இல்லை சவமாயிரு. இரண்டுக்கும் இடையில் நீ வேறொன்றாக இருந்தால் எங்களைப்போலே இரு. சுருதிபேதம் ஆடலுக்கு ஆகாது"  சிவமாயிருப்பதும், சவமாயிருப்பதும், இரண்டுக்குமிடையில் காற்று வெளியில் வேசங்கட்டி ஆடும் மயிராயிருப்பதும் அவரவர் விருப்பமல்ல, எட்டி உதைத்ததுவின்

இதுதாண்டா போலீஸ்!

"ரௌத்திரம் பழகு"ன்னு தமிழ்க்கவி பாரதியார் சொன்னத சினிமால யாராச்சும் செய்து காமிப்பாங்களா? ங்கிற என் நெடுநாள் ஏக்கத்தை இவனுங்க ரெண்டு பேரும் 'வச்சி செஞ்சிட்டானுங்க' மலையாளத்தில! அந்த போலீஸ்காரனுக்கு என்னா ரௌத்திரம்! யம்மாடி!! சரக்கு தடை செய்யப்பட்ட பகுதில (முன்னாள்) பட்டாளத்தான் ஒருத்தன் சரக்கோட கார்ல வரச்சொல்லோ search squad ஆண்ட சிக்கிகினான். வனத்துறையும் போலிசும் சேர்ந்து நடத்தும் checkpost search ல மொதல்ல இவன புட்சது வனத்துறை ஆபீசருங்கோ. பட்டாளத்தான் கார் பின் சீட்ல தூங்கிகிறான். பேமிலி ட்ரைவரு ஓட்றாரு. Squad இவங்க வண்டிய நிறுத்தினதும், 'ஓனரு பேக்சீட்ல தூங்கிகினாரு' ன்னு ட்ரைவர் கை காட்ட சொல்லோ, ஒரு ஆபீசரு 'ஆருன்னு பாக்கலாம்'னு கதவ தொர்க்கசொல்லோ, கதவாண்ட சாஞ்சு தூங்கிகினு இர்ந்த பட்டாளத்தான் குன்சா ரோட்ல சரிஞ்சு பில்லோவோட உயுந்து எளும்பி, 'ஆய், இன்னாங்கடா தூங்கிகனு இர்ந்தவன ரோட்ல இஸ்த்து போட்டீங்கோ!' னு மப்புல சலம்பி தள்ளு முள்ளு ஆயி, அவன் ஒரு ஆபீசரு ஜீப்பு லைட்ட எட்டி ஒதைக்கசொல்லோ போலீசு ஆபீசரு அரெஸ்ட்டு பண்ட்டாரு. ஸ்டேசனான்ட இஸ்துகினு போனா,

நாத்தம் தாங்கல Bill Gates! கொஞ்சம் Help பண்ணுங்க சார்!

  ஐயா, குழியைக்காணுமையா! புள்ளைகளெல்லாம் பட்டினியில சாகுதுய்யா!!! உலகம் முழுவதும் உள்ள அனைத்து பெருவணிக நிறுவனங்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாக 24*7 உற்பத்தி செய்துகொண்டிருக்கும் ஒரே உலகத்தரமான பொருள், குப்பை! நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மக்காது உழைக்கும் பொருள் என்றால் உன்னதமான தரம் என்றுதானே பொருள்! இந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்னும் பூமியில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்தார்கள்தானே, அப்படியென்றால் ஏன் அப்போது இந்தமாதிரி 'தரமான' குப்பைகளே இல்லை?! இன்றைய உலகம் மிக அதிகமாக செலவழித்து கையாள முயல்வது அணுக்கழிவுகளல்ல! வணிகக்கழிவுகள் இப்படி கட்டுக்கடங்காமல் பெருகி, நம் வளமான மண்ணின் மீது பரவும் புற்றுநோயாகி மண்ணை மலடாக்கி, உள்நுழைய முயலும் தண்ணீரையும் தடுத்து நிறுத்தி... ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஏன் இந்த குப்பை மேட்டரில் தலையிடாது நாற்பது ஆண்டுகளாக மூக்கைப்பிடித்துக்கொண்டு ஒதுங்கி நிற்கிறது? கிணற்றைக்காணவில்லையென பகடி பேசும் நம் மக்கள் யாரும் கிணறுகள் காணாமல் போவதற்கு முன்னரே தொலைந்துபோன நம் எருக்குழிகளைப்பற்றி ஏன் பேசுவதே இல்லை? அம்மன்குளத்தெரு என்று என

ரோம் தேசத்தில் ரோமனாய் இரு!

ரோமப்பேரரசு, ஏறத்தாழ ஆயிரம் ஆண்டு உலகை ஆண்ட பேரரசு. உலகளாவிய எல்லைகள் (அவர்களது உலகு கிழக்காசியாவை தொடவில்லை), உலகளாவிய வணிகம் (கிழக்காசியாதான் அச்சாணி!) என கோலோச்சிய இந்த மாபெரும் அரசு, ஏன் வீழ்ந்ததென்று தெரியுமா? ஆங்கிலத்தில் DECADENCE என்றொரு சொல் உண்டு. அகராதியில் இதன் விளக்கம் என்ன என்று பார்ப்போம்: " behaviour, attitudes, etc. that show low moral standards. கீழ்த்தரமான அல்லது ஒழுக்கக்கேடான நடத்தை, மனப்பாங்கு முதலியன; சீர்கேடு; பண்பழிவு. " அரசின் எல்லைகள் ராணுவ பலத்தினால் வெகுவேகமாக உலகெங்கும் விரிய சில நூறு ஆண்டுகளே ஆனது.  அவர்களது மாடல் எளிமையானது; படையெடு, வெல், செல்வங்களை சுரண்டு, ராணுவ தளபதியொருவரை தலைவராக அமர்த்து, சுரண்டிய செல்வங்களில் பெரும்பகுதியை ரோமாபுரிக்கு அனுப்பு, எஞ்சிய செல்வம் கொண்டு படைபலம் இன்னும் பெருக்கு. Then repeat it!  மிக வெற்றிகரமான இந்த மாடல் ஒரு கட்டத்தில் Law of Diminishing Returns என்று சொல்லப்படும் வலையில் சிக்கியது (புதிய நாடுகளை போரிட்டு பிடிப்பதற்கு ஆகும் செலவை விட அந்த நாட்டிலிருந்து 'வரவு' குறைந்தது

என்னது?! "அவரு" மறுபடி கட்சி மாறிட்டாரா?! ஐயையோ!!!!!

செய்திகளை செய்திகளாக மட்டுமே பார்த்த கடைசி தலைமுறை 2010 க்கு முன் செய்திகள் வாசிக்கத்தொடங்கிய தலைமுறைகள் மட்டுமே. டேட்டா கேபிளை இடுப்புல அரணாகயிறு மாதிரி சுத்திகிட்டா 'ஒன் அவர்ல மார்சுக்கு போய்டலாம் ப்ரோ' என்கிற ரேஞ்சில் வெகு வேகமாய் வளரும் தொழில்நுட்பம், டிஜிடல் வணிகம், அவை சார்ந்த அரசியல் கட்சிகள், அவை சார்ந்த ஊடகங்கள் என... செய்திகள் அனுதினமும் 'வைத்து செய்யப்படுகின்றன'. 'அந்த ஊடகம் இந்த பிசினஸ்மேனோடது. இவரு அந்த கட்சிப்பா' என்று தொடங்கி,  "அந்த ஆர்ட்டிகிள் பத்தியா சொல்ற? எழுதினது யாருன்னு பாரப்பா! அவரு 'அந்த கட்சி' ஆளப்பா" என வளர்ந்து 'அந்த செய்திய நம்பாதே. அந்தாளுக்கு வேல வெட்டியில்ல. வேணும்னே தப்பு தப்பா எளுதுவான் ஆன்ட்டி நேஷனல் ஃபெல்லோ!' என ரவுண்டு கட்டி... ஒரு ஊடகத்துல 'நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுது' ன்னு தலைப்பு செய்தி. இன்னொரு ஊடகத்த பாத்தா, "நாட்டிலே ஓடிக்கொண்டிருந்த பாலாறை காணவில்லை!' என மிரட்டும்... போதாததற்கு சமூக கொலைதளங்களில் (மெரளாதீங்க, சோஷியல் மீடியால ரத்தம் தெரிக்க தெ