முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாத்தம் தாங்கல Bill Gates! கொஞ்சம் Help பண்ணுங்க சார்!

 
ஐயா, குழியைக்காணுமையா! புள்ளைகளெல்லாம் பட்டினியில சாகுதுய்யா!!!

உலகம் முழுவதும் உள்ள அனைத்து பெருவணிக நிறுவனங்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாக 24*7 உற்பத்தி செய்துகொண்டிருக்கும் ஒரே உலகத்தரமான பொருள், குப்பை!

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மக்காது உழைக்கும் பொருள் என்றால் உன்னதமான தரம் என்றுதானே பொருள்!

இந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்னும் பூமியில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்தார்கள்தானே, அப்படியென்றால் ஏன் அப்போது இந்தமாதிரி 'தரமான' குப்பைகளே இல்லை?!

இன்றைய உலகம் மிக அதிகமாக செலவழித்து கையாள முயல்வது அணுக்கழிவுகளல்ல!

வணிகக்கழிவுகள் இப்படி கட்டுக்கடங்காமல் பெருகி, நம் வளமான மண்ணின் மீது பரவும் புற்றுநோயாகி மண்ணை மலடாக்கி, உள்நுழைய முயலும் தண்ணீரையும் தடுத்து நிறுத்தி...

ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஏன் இந்த குப்பை மேட்டரில் தலையிடாது நாற்பது ஆண்டுகளாக மூக்கைப்பிடித்துக்கொண்டு ஒதுங்கி நிற்கிறது?

கிணற்றைக்காணவில்லையென பகடி பேசும் நம் மக்கள் யாரும் கிணறுகள் காணாமல் போவதற்கு முன்னரே தொலைந்துபோன நம் எருக்குழிகளைப்பற்றி ஏன் பேசுவதே இல்லை?

அம்மன்குளத்தெரு என்று என்றோ கட்டிடங்களாகிப்போன குளங்கள் இன்றும் சாலைகளின் பெயரில் மட்டும் இருப்பதைப்போல, எத்தனை ஊர்களில் இன்று கூட எருக்கம்பெனி பஸ் ஸ்டாப்புகள் உள்ளன என்று தெரியுமா?

கிராமங்களில் வீட்டுக்கு வீடு எருக்குழி. சாணம் முதல் வீட்டுக்கழிவுகள் வரை அனைத்துக்கும் இதுவே டெஸ்டினேஷன். ப்ளாஸ்டிக் பைகள் அறவே இல்லை அப்போது.

எருக்குழிகளின் ஓரங்களில் பரங்கி, பூசணி கொடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய் செடிகள், குழிகளின் மேலேயே அவரை, பீர்க்கன், பாகல், சுரை என கொடிகள் பின்னி ஓடி, சடை சடையாய் காய்த்து நிற்கும்.

மனிதரும் கால்நடைகளும் உண்டது போக எஞ்சியது உப்பு மோரில் ஊறி, வெயிலில் காய்ந்து வற்றலாகி, காய்ப்பு இல்லாத பின்மழைக்காலங்களில் (ஐப்பசி, கார்த்திகை, மார்கழி) மீண்டும் காய்கறிகளாக உருவெடுக்கும் விந்தை ஒவ்வொரு வருடமும் தொடரும்.

மழை முடிந்தபின் கோடை துவக்கத்தில் எருக்குழியின் குப்பைகள் உரமாக மாறிப்போயிருக்கும், மனிதர்களின் எத்தனம் எதுவும் இல்லாமலே!

பார வண்டியில் எருக்குழியின் உரங்கள் ஏறி வயலுக்குப்போய் இறங்கும், உழுத நிலங்களில்.

விதைப்பு தொடரும், பயிர் வளரும், செழிக்கும், கதிர் முற்றும். அறுவடையாகி வீடு சேர்ந்து (நெற்)குதி்ரில் ஏறும்!

இந்த அற்புத சுழற்சிச்சக்கரத்தில் பெருவணிகம் எறிந்த spanner, ப்ளாஸ்டிக் பேக்கிங்.

விவசாய பணிகளுக்கு எஞ்சிய எருவை (உரங்களை), வணிக நிறுவனங்கள் விலை கொடுத்து வாங்கி ஓரிடத்தில் சேமித்து, எரு தேவைப்படும் மற்ற விவசாயிகளுக்கு விலைக்கு விற்கும்.

இந்த வணிகம் நிகழும் இடங்கள் எருக்கம்பெனிகள் என்று அழைக்கப்பட்டன. பேருந்து நிறுத்தங்கள், கடைகள் என கம்பெனி ஏரியா எப்போதும் களைகட்டியிருக்கும்...

இன்று எருக்குழிகள் இல்லை.

அவை சார்ந்த

காய்கறிக்கொடிகள், 
அவை தந்த உணவு,
எஞ்சியதால் ஆன வற்றல்,
வற்றல் மறிபடி காய்கறியாகும் விந்தை,
எருவாகிப்போன குப்பை,
எரு சுமந்த பார வண்டிகள்,
வண்டி இழுத்த காளைகள்,
எரு வாங்கி விற்ற நிறுவனங்கள்

இவை அனைத்தையும் ப்ளாஸ்டிக் என்ற புற்று நோய்க்கு பலி கொடுத்தோம் (பலி கொடுத்தது இன்னும் நிறைய...).

ட்ராக்டர், ட்ரெய்லர்,
பெட்ரோல் பங்க்குகள்,
அக்ரோ சர்வீசஸ்,
சூப்பர் மார்க்கெட்,
மல்ட்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனைகள்

என மாற்றம் கொண்ட வாழ்வியலில் இன்று இரட்டைப்புற்று!

- ஒன்று, ப்ளாஸ்டிக் மண்ணுக்கு தந்தது
- இரண்டு, மண்ணிலிருந்து நேரடியாக வயிற்றுக்குச்செல்லாமல், ஆய்வுக்கூடங்களிலும், தொழிற்சாலைகளிலும் தங்கி, பல கெமிகல் காதலர்களுடன் கூடி, பின் நம் வயிற்றை அடையும் உணவு நம் உடலுக்கு தந்தது.

இந்த இரண்டும் சேர்ந்து உருவாக்கிய மூன்றாவது புற்று, மிகக்கொடிய புற்று, moral cancer!

சுற்றி நிகழும் எதுவும் தம்மை பாதிக்காத பரமாத்மாக்கள் போல நம்மை தின வாழ்வில் இயங்கவைப்பது இந்த மூன்றாவது புற்று.

இவற்றுக்கு நாம் தனிமனிதராய் நாம் ஒவ்வொருவரும் கொடுத்துக்கொண்டிருக்கும் விலை என்ன தெரியுமா?

நச்சாகிப்போன காற்று,
நாற்றமடிக்கும் சாலைகள்,
பிணி தரும் நீர்,
மரங்களில்லாத, காற்றில்லாத ஏர் கண்டிஷன்ட் சுவாசம்,
தொடர்ந்து மருத்துவமனை பயணங்கள்,
மாதாந்திர லிஸ்ட் போட்டு வாங்கும் மருந்துகள்,
இன்னும் சேர்த்துக்கொண்டே போகலாம்.

மலை மலையாய் உலகெங்கும் பெருகி வரும் குப்பைகளை கையாள, மறு சுழற்சி செய்ய, எருவாக மாற்ற, பாதுகாப்பாக மூடிவைக்க, உலக நாடுகள் செலவிட்டுக்கொண்டிருக்கும் தொகை என்ன தெரியுமா?

மக்கும் குப்பைகளை மட்டுமே கையாண்டு பழகிய ஒரு தலைமுறையின் வாரிசுகள் இன்று பல நகரங்களில் மக்கும் குப்பை, மக்கா குப்பை அறிந்து, பிரித்து கொட்டமுடியாமல் ஒன்றாய் கட்டி கொட்டுவதும், ஆடு மாடுகள் அவற்றை ப்ளாஸ்டிக்கோடு உண்டு வயிறு வீங்கி இறப்பதும் நாம் அனைவரும் அறிந்தும் அறியாதது...

17 வயது டச்சு நாட்டு இளைஞன் ஒருவன், நீள் கரங்கள் பொருத்திய கப்பல்கள் பலவற்றை கடலுக்கு அனுப்பி, நீர்மேல் மிதந்துகொண்டிருக்கும், ப்ரான்சு நாட்டை விடப்பெரிய ஒரு ப்ளாஸ்டிக் குப்பை படலத்தை அகற்ற பெரு முயற்சி செய்கிறான்.

பதினைந்து வயது சிறுமி ஒருத்தி பள்ளிக்கூடத்தை புறக்கணித்து, உலகத்தலைவர்களின் மென்னியை பிடித்து உலுப்பி, 'எங்கள் எதிர்காலத்தை திட்டமிட்டு அழிக்க உங்களுக்கு யார் உரிமை தந்தது?!' என முழங்கிக்கொண்டிருக்கிறாள்.

எது இவர்களை இவ்வாறு செய்யத்தூண்டுகிறது?

நம் பங்கிற்கு நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

ஒலிம்பிக்கில் வட்டு எரியும் வீரர்களைப்போல வாகனங்களில் விரைந்துகொண்டே குறிபார்த்து பொதுக்குப்பைத்தொட்டிகளில் நாம் கொண்டு வந்த ப்ளாஸ்டிக் குப்பை மூட்டைகளை தூக்கி எறிந்து விரைந்து கடக்கிறோம்...

பின்குறிப்பு:

2011 இல் அரசு வெளியிட்ட அறிக்கையின்படி ஒரு ஆண்டில் இந்தியர்கள் கொட்டும் குப்பை... ஐநூற்று நாற்பத்தியேழு கோடியே ஐம்பது லட்சம் டன். அதாவது, 547,50,000 * 1000 கிலோ!!!


இன்று இது 1000 கோடி டன்னை உறுதியாய் தாண்டியிருக்கும்.

இந்திய அரசு, சராசரியாக நபர் ஒருவர் எறியும் குப்பைகளை கையாள உத்தேசமாய் 350 ரூபாய் செலவிடுகிறதாம்.  

அதாவது, 4.55 லட்சம் கோடி ரூபாய், நம் 130 கோடி மக்களின் குப்பையை கையாள அரசுக்கு ஆகும் செலவு!!!!

இது நேரடி செலவு மட்டுமே. மறைமுக செலவு (குப்பையாகும் dumpyards, வேதிக்கழிவுகள் குப்பையிலிருந்து கசிந்து நிலத்தில், நீரில், காற்றில் கலந்து மக்களை பாதித்து, பழுது நீக்க அவர்கள் செய்யும் மருத்துவச்செலவுகள், அவர்களது நோய்களால் குறையும் உற்பத்தித்திறன் (productivity)) என இந்த செலவுக்கணக்கு அனுமார் வால் போல நீண்டுகொண்டே போகும்.

இன்னொரு அசிங்கமான புள்ளி விபரம்:

இந்த ஆயிரம் கோடி டன் குப்பையில் 70 சதவீதமாவது உரமாக மாறக்கூடிய கழிவுகளாக இருக்கும். ஆனால் இவை உரமாகாமல் landfill களில் அடக்கம் செய்யப்பட, நம் விவசாயிகளின் ஆண்டு உர செலவு எவ்வளவு தெரியுமா?!

28,000 கோடி கிலோ உரங்கள்! Average ஆக கிலோவுக்கு 50 ரூபாய் என்று கணக்கிட்டால்கூட 14 லட்சம் கோடி ரூபாய்!!! இதில் மானியம் வேறு!!!


இந்திய விவசாயிகளுக்கு இலவசமாய் அவர்களது எருக்குழிகளில் இருந்து கிடைத்துவந்த குப்பை, அவர்களிடம் இருந்து மெல்ல பிடுங்கப்பட்டதால் நம் அரசுக்கு வருடம்தோறும் நேரும் செலவு (fertilizer subsidy 25% என்று கணக்கிட்டால்கூட), குறைந்தது 8 லட்சம் கோடி!

விவசாயிகள் subsidy போக உரங்களுக்காக செலவிடும் தொகை 10.5 லட்சம் கோடி!

ஆக, 18.5 லட்சம் கோடி பெறுமானமுள்ள நம் எருக்குழிகள் காணாமல் போச்சே மக்கா!!!!

The figures may not be accurate but they give us the magnitude of our stupidity!

இந்தியாவில் மட்டுமே இவ்வளவு செலவென்றால் மற்ற உலக நாடுகளையும் கணக்கிலெடுத்தால்...தலை சுற்றுகிறதா!

இப்போது சிந்தித்துப்பாருங்கள் ஏன் உலகில் பலர் இன்றுவரை பட்டினியோடு போராடிக்கொண்டிருக்கின்றனர் என்று...

இன்னும் சிந்தித்துப்பாருங்கள், இந்த நாற்றமடிக்கும் சிக்கலுக்குள் Bill Gates போன்றோர் ஏன் நுழைவதில்லை என்று!

பின்குறிப்பு 2:

எருக்குழி, புறக்கடை எருக்குழி, கிராமத்து எருக்குழி, கிராமத்து வீட்டு எருக்குழி என எத்தனை மாறுவேடங்களில் Google Images இல் தேடினாலும் Google தரும் result:
:-(
:-(
:-(

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்