முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இதுதாண்டா போலீஸ்!


"ரௌத்திரம் பழகு"ன்னு தமிழ்க்கவி பாரதியார் சொன்னத சினிமால யாராச்சும் செய்து காமிப்பாங்களா? ங்கிற என் நெடுநாள் ஏக்கத்தை இவனுங்க ரெண்டு பேரும் 'வச்சி செஞ்சிட்டானுங்க' மலையாளத்தில!

அந்த போலீஸ்காரனுக்கு என்னா ரௌத்திரம்! யம்மாடி!!

சரக்கு தடை செய்யப்பட்ட பகுதில (முன்னாள்) பட்டாளத்தான் ஒருத்தன் சரக்கோட கார்ல வரச்சொல்லோ search squad ஆண்ட சிக்கிகினான்.

வனத்துறையும் போலிசும் சேர்ந்து நடத்தும் checkpost search ல மொதல்ல இவன புட்சது வனத்துறை ஆபீசருங்கோ.

பட்டாளத்தான் கார் பின் சீட்ல தூங்கிகிறான். பேமிலி ட்ரைவரு ஓட்றாரு. Squad இவங்க வண்டிய நிறுத்தினதும், 'ஓனரு பேக்சீட்ல தூங்கிகினாரு' ன்னு ட்ரைவர் கை காட்ட சொல்லோ, ஒரு ஆபீசரு 'ஆருன்னு பாக்கலாம்'னு கதவ தொர்க்கசொல்லோ, கதவாண்ட சாஞ்சு தூங்கிகினு இர்ந்த பட்டாளத்தான் குன்சா ரோட்ல சரிஞ்சு பில்லோவோட உயுந்து எளும்பி, 'ஆய், இன்னாங்கடா தூங்கிகனு இர்ந்தவன ரோட்ல இஸ்த்து போட்டீங்கோ!' னு மப்புல சலம்பி தள்ளு முள்ளு ஆயி, அவன் ஒரு ஆபீசரு ஜீப்பு லைட்ட எட்டி ஒதைக்கசொல்லோ போலீசு ஆபீசரு அரெஸ்ட்டு பண்ட்டாரு.

ஸ்டேசனான்ட இஸ்துகினு போனா, பட்டாளத்தான் எகிர்றான். அவன் போன்ல நம்பர செக் பண்ணா முன்னாள் இந்நாள் மொதல்வர்ங்கோ பேர்லல்லாம் நம்பர் இர்க்கசொல்லோ போலீசு ஸ்டேசனே லைட்டா ஜெர்க் ஆவுது, அந்த போலீசு ஆபீசர தவுர.

அவரும் கடமையா மேலாண்ட ஆபீசருக்கு போன் பண்ச சொல்லோ அந்த ஆபீசரே ஜெர்க் ஆயி, 'நீதி நேர்ம ந்யாயம்னு மொறைக்காத
சாஃப்ட்டா handle பண்ணுப்பா' ன்னு சொல்லாங்காட்டி நம்ம ஆபீசரும், 
மருவாதையான குடும்பத்து பையனா கீறானேன்னு மருவாதயா பேசினா, அவன் அல்லாரையும் சீண்டிகினே இர்க்கான் மப்புலயும் கோவத்திலயும்.

திடீர்னு அவனுக்கு 'சரக்கு வியாதி' வந்தாமாறி ஆக்ட்டு உட்டுகினு தொண்டய புட்சிகினு கூவசொல்லோ 'அய்யோ பாவ'முன்னு போலீசு ஆபீசரு அவனுக்கு சரக்கு ஊத்தி தர, அந்த பட்டாளத்தான் அந்த செல்போன்ல வீடியோ எடுத்து வச்சிகினான். மீடியா தோஸ்த்துக்கும் லாயருக்கும் போலீசுக்கு தெரியாம share பண்ணிகினான்.

அப்பால் போலீசு அவன லாக்கப்ல தள்ள, பெயிலுக்கு வழியில்லாத போயி (கிறிஸ்துமசு ஹாலிடேபா!) பண்ணென்டு நாளு சப் ஜெயில்ல களி திங்க, படா பொலிடிகல் இன்ப்ளூயன்சு உள்ள அவனோட அப்பா குதிச்சிகினாரு!

இடையில வீடியோ, டி.வி நியூஸ்ல வருது, 'சரக்கு தடை செய்யப்பட்ட ஏரியால புட்ச்ச சரக்க அந்த போலீஸ்காரனே குடிக்கிறாங்கோ! கூட வேல செய்ற போலீஸ்காரியே ஊத்தி தர்துங்கோ! அய்யா பாருங்கோ! அம்மா பாருங்கோ!'

போலீஸ்காரருக்கும் போலீஸ் கான்ஸ்டபிளிக்கும் மேலதிகாரி வெசாரண கமிசனு வச்சி, நம்ம போலீசுகாரரை சஸ்பெண்டு பண்ணிகினாரா? காண்டான போலீஸ்காரரு...'

முடிலபா!

இந்த படத்துக்கு ரிவ்யூ, படத்தின் கதைவழியே சொல்வது மிக கடினம். The story is so dense and interwoven with so many different textures, it becomes impossible to write a crisp review without spoiling the joy of watching it unfold!

கதை நகர நகர படிப்படியாய் ஏறும் டென்ஷன், கடைசி ஷாட் வரை நீடிக்கிறது!

போலீஸ்காரர், சாதாரண குடும்பம். 

மாவோயிஸ்ட் என 'முத்திரை குத்தப்படப்போகும்' ஒரு பெண்ணை, செய்தி அறிந்ததும் அவசரமாய் திருமணம் செய்து காப்பாற்றியவர். கைக்குழந்தையும் இருக்கிறது இப்போது. கடன் வாங்கி கட்டிக்கொண்டிருக்கும் வீடு இன்னும் முடிந்தபாடில்லை.

அவர் ஒன்றும் போலீஸ் விதிகளின்படி  நேர்மையான கொம்பனில்லை. ஆனால் மனித தர்மத்தின் விதிகள்படி மிக நேர்மையான கொம்பன் (உதாரணம்: மலையில் அனுமதியின்றி பாறைகள் உடைத்த ஒருவனை, அரசியல் பிரமுகர் ஓருவர், வெடி மருந்தும் கையுமாய் பிடித்து வந்து நிறுத்துகிறார் நம் போலீஸ்காரர் முன்.

கைது செய்ய நினைத்து விசாரிக்கையில் அந்த ஆள் சொல்லும் காரணம் இதுதான், 'ஐயா, ஒண்டுக்குடிசைல ரெண்டு பொட்டப்பசங்களோட காத்து மழக்கிடையில காட்டு வாழ்க்கய்யா. நல்ல தளம் வேணுமுன்னு பாறைக்கல்லு தேடி ஒடச்சனய்யா. நா உள்ள போறது ப்ரச்னயில்லய்யா. என் கொழந்தங்கள இந்த ஆள்ட்ட இருந்தும் அவன் கூட்டாளிங்கள்ட்டேர்ந்தும் நீங்க காப்பாத்துவேன்னு வாக்கு குடுத்தீங்கன்னா எத்தன நாள் வேணா உள்ள இருக்குறன்யா!'.

சில நொடிகளில் விசாரணை முடித்து, வெடி மருந்தை பிடுங்கிக்கொண்டு அவனை வீட்டுக்கு அனுப்புகிறார், அவன் வீட்டு வேலையை முடிக்க அந்த கற்களையும் கொடுத்தனுப்புகிறார்.

இதை எதிர்பாராது கொதிக்கும் அரசியல் பிரமுகரிடம் சொல்கிறார், 'நடவடிக்கை எடுக்க வேண்டியது உன் மேலதான்'!

நேர்மையான கொம்பன்னா பெரிய்ய்ய கொம்பன்.

27 வருட சர்வீசில் ஊரின் நன்மதிப்பு குவிந்து, அவருக்கு 'அரசு சேவை விருது, வழங்கப்பட சில நாட்களே இருக்கும்போது இந்த முன்னாள் பட்டாளத்தானை அரெஸ்ட் செய்யவேண்டியதாகிறது.

அவன் பெயிலி்ல் வெளியே வந்தாலும், அவன் ஊரிலிருந்து வெகு தொலைவிலுள்ள அவரது ஸ்டேசனுக்கு அடிக்கடி நேரில் சென்று கையொப்பமிடவேண்டும் என்கிறது பெயில் விதி.

தன் தந்தையின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி போலீஸ் மேலதிகாரியிடம் பேரம் பேசுகிறான்,  தான் ரெக்கார்ட் செய்திருந்த வீடியோவை தந்துவிடுவதாகவும் வாக்கு தருகிறான்.

அதை நம்பி அவனை உள்ளூரிலேயே கையெழுத்திட போலீஸ் ஒப்புக்கொள்கிறது. ஆனால் அவனது தந்தைக்கு இந்த டீலிங் பிடிக்கவில்லை. தன் மகனை சிங்கமென காட்ட பட்டாளத்துக்கு அனுப்பியதையும், இப்போது அவன் ஒரு போலீஸ்காரனிடம் தோற்றுப்போவதை தான் அனுமதிக்கமுடியாதெனவும் சொல்லி அவனை ஓரம் கட்டி தடாலடியாய் களமிறங்க... அதன் பின்னான நிகழ்வுகளெல்லாம் அதகளம்தான்!

ரௌத்திரம் பழகும் போலீஸ்காரர் ஒருபுறம், குற்ற உணர்வு உந்திதள்ளினாலும் உயிரைக்காப்பாற்றிக்கொள்வதற்காக எதிர்த்துப்போராட வேண்டிய சூழலில் பட்டாளத்தான் மறுபுறம்!

இவர்கள் இருவரும் தாம் சார்ந்த பாதுகாப்பு / influential circle இல் இருந்து வெளியே வந்து ஒருவரோடு ஒருவர் இருவரது தரப்புக்கும் பழக்கமில்லாத வேறு ஒரு ஊரில் ஒரு பொது இடத்தில் நேருக்குநேர் மோதி, 'உயிர்வாழப்போவது நீயா? நானா?' எனப்பார்த்துவிட முடிவாகும் இடைவெளியில் நடக்கும் உரசல்கள், எதிர் உரசல்கள் என...ஒவ்வொரு நிமிடமும் பொறிபறக்கிறது, மோதலின்போது எகிறுகிறது...அதன் பின்னும் குறையாத டெம்ப்போவுடன் நிறைவடைகிறது!

I loved the story, characterization of the police man and the ex military man so much, even the perfectly cast and perfectly acted others were pushed to subconscious appreciation once the movie was over!

1970களில் இவர்களது தேசத்தில் அடூர் போன்றோர் தொடங்கிய பேரல்லல் சினிமா மூவ்மென்ட், இடையில் 1980-1990 களில் ஜெயதேவன் வகை படங்களால் சறுக்கினாலும் மீண்டும். மீண்டும் மீண்டு... இன்று மெயின்ஸ்ட்ரீம் சினிமாவாகவே மாறிப்போனது!

உலகத்தரத்தில. ஒரு மலையாளப்படம் என்று சொன்னால் அது மிகப்பெரிய இழுக்கு.

விரைவிலேயே, மலையாளத்தரத்தில் ஒரு அமெரிக்கப்படம், ஒரு இரானியப்படம. என்று சொல்லுமளவிற்கு உயரப்போவது உறுதி. ப்ரித்விராஜ் அதில் முதன்மையாக இருப்பார், பகத் ஃபாசில், விஜய் சேதுபதியும்தான்!

தமிழ் திரையுலகில் டெக்னாலஜி வளர்ந்த அளவு கதைகளின் தரம் உயரவே இல்லை என்று முழுதுமாய் நிராகரிக்க முடியாது (அறம், சூப்பர் டீலக்ஸ், மே.தொடர்ச்சி மலை, டு லெட், காக்கா முட்டை) என்றாலும் மலையாளம் தொட்ட, தொட்டுக்கொண்டிருக்கிற உயரத்தை நாம் தொடமுடியவில்லை என்பதே உண்மை.

கமல்ஹாசன் என்ற மகத்தான கலைஞனை வார்த்துத்தந்த மலையாள சினிமா, இன்று நம் விஜய் சேதுபதியை கவனிக்கத்தொடங்கியுள்ளது. 

Pandemic தாண்டியும் creativity தொடரும் என்று நம்புகிறேன். I wish these guys, along with the likes of Ayushman Kurana, Nawazudin Siddique and Tapsee Pannu will raise the bar of Indian cinema overall with healthy collaborative competition among and between themselves!

Parting shots from Ayyappanum Koshiyum:

வசனங்கள்... வசனங்கள்... அரசியலும் வாழ்வியலின் தாழ்வியலும் எதிரும் புதிருமாய் முறுக்கி நிற்பதை உரித்துக்காட்டும் வசனங்கள்!


கான்ஸ்டபிள்: 'இவன் போன் கான்டாக்ட் லிஸ்ட் பாப்பமா...
...
உம்மன் சாண்டி (முகம் மாறுகிறது மெலிதான பயத்தில்)
...
விஜயன் (முகம் வெளிறிப்போகிறது)

பட்டாளத்தான்: நக்கலாக, 'நீங்க பயப்படறமாதிரி அது பினராயி விஜயன் நம்பர் இல்ல. டி.ஜி.பி விஜயனோடது'

கான்ஸ்டபிள் முகம் இன்னும். வெளிறிப்போகிறது!
*****

'Influential connections இல்லாத போலீஸ்காரனை, போலீஸ் விதிகளின்படி செயல்படுவது மட்டுமே காப்பாற்றும்'

*****
கான்ஸ்டபிள்: 'லாக்கப்புல பல நாள் இருக்கணும் கோர்ட்டெல்லாம் க்ரிஸ்மஸ்க்கு லீவு!!!!

பட்டாளத்தான்: 'அதுக்கென்ன, உன் வீட்லேந்து துணைக்கு அனுப்பேன்!'
*****

பட்டாளத்தான், ஆனைகட்டியிலிருந்து கேரளாவில் நுழையுமிட போலூஸ் செக்போஸ்ட்டில், முன்னர் தன்னை அடித்த போலீசிடம்: 'கார்ல சரக்கு இருந்த அரெஸ்ட் பண்ணுவீங்கல்ல? இப்ப சரக்கு இருக்கு' என தன் தொப்பையை தட்டிக்காட்டி 'இப்ப என்ன பண்ணுவ?!'
******

போலீஸ் ஸ்டேசனுக்கு வெளியே காத்திருக்கும் ரவுடி கும்பல், ஸ்டேசனில் பட்டாளத்தானை சஸ்பென்டான போலீஸ்காரர் புரட்டி எடுப்பதை பார்த்து டென்ஷனாக, ஒரு ரவுடி, தலை ரவுடியிடம்: 'பாஸ்! உள்ள பூந்தர்லாமா?!'
*****
பட்டாளத்தான் அப்பாவின் இன்ப்ளூயன்சால் போலீஸ் மேலதிகாரி தன் கீழதிகாரியிடம்: நம்ம அய்யப்பன் சாரோட வைஃப அந்த மாவோயிஸ்டு லிஸ்டுல சேத்து F.I.R file பண்ணிடுங்க'
***

இத்தப்படத்நில் அரசியல் இல்லை. ஆனால் இது பேசாத அரசியலில்லை!!

பல முறை பார்த்து ஒவ்வொரு முறையும் கொண்டாடப்படவேண்டிய படம்.

இந்தப்படம் பார்க்கும் அனைவருக்கும் அட்டப்பாடி போலீஸ் ஸ்டேஷன் பிடித்துப்போகும்! போலீசின் யதார்த்த சிக்கல்களும் புரிந்துபோகும், மதிப்பு உயரும்!! அய்யப்பன்மீதான மதிப்பு பல மடங்கு உயரும்?

அய்யப்பன் சாரே, மரண மாஸ் சாரே! வச்சி செஞ்சிட்டீங்க! இதுபோல இன்னும் நிறைய நிங்கள்ட்ட எதிர்பார்க்கிறோம் சாரே!!

கோஷி சாரே, கரணம் தப்புனா மரணம் மாதிரி கேரக்டர்ல கண்ண கட்டி ஒத்த கால்ல நடந்தாலும் நிங்களும் கெலிச்சு சாரே!

மொத்தத்தில ஞாங்களும் ஜெயிச்சு சாரே!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...