ரோமப்பேரரசு, ஏறத்தாழ ஆயிரம் ஆண்டு உலகை ஆண்ட பேரரசு.
உலகளாவிய எல்லைகள் (அவர்களது உலகு கிழக்காசியாவை தொடவில்லை), உலகளாவிய வணிகம் (கிழக்காசியாதான் அச்சாணி!) என கோலோச்சிய இந்த மாபெரும் அரசு, ஏன் வீழ்ந்ததென்று தெரியுமா?
ஆங்கிலத்தில் DECADENCE என்றொரு சொல் உண்டு. அகராதியில் இதன் விளக்கம் என்ன என்று பார்ப்போம்:
"
behaviour, attitudes, etc. that show low moral standards.
கீழ்த்தரமான அல்லது ஒழுக்கக்கேடான நடத்தை, மனப்பாங்கு முதலியன; சீர்கேடு; பண்பழிவு.
"
அரசின் எல்லைகள் ராணுவ பலத்தினால் வெகுவேகமாக உலகெங்கும் விரிய சில நூறு ஆண்டுகளே ஆனது.
அவர்களது மாடல் எளிமையானது; படையெடு, வெல், செல்வங்களை சுரண்டு, ராணுவ தளபதியொருவரை தலைவராக அமர்த்து, சுரண்டிய செல்வங்களில் பெரும்பகுதியை ரோமாபுரிக்கு அனுப்பு, எஞ்சிய செல்வம் கொண்டு படைபலம் இன்னும் பெருக்கு. Then repeat it!
மிக வெற்றிகரமான இந்த மாடல் ஒரு கட்டத்தில் Law of Diminishing Returns என்று சொல்லப்படும் வலையில் சிக்கியது (புதிய நாடுகளை போரிட்டு பிடிப்பதற்கு ஆகும் செலவை விட அந்த நாட்டிலிருந்து 'வரவு' குறைந்தது ஒரு காரணம், அதிக செலவு இன்றி பிடிப்பதற்கு நாடுகளில்லை என்பது இன்னொரு காரணம், இருக்கும் நிலப்பரப்பை, படைபலத்தை உணவு, உடை, உறையுள், ஊதியம் தந்து கட்டிக்காப்பது, புதிய வருமானங்கள் இன்றி கடினம், என்பதும் ஒரு காரணம்).
அதன் பின்னான காலகட்டத்தில் எல்லைப்புற ஊர்களை யார் யாரோ துரிதமாய் தாக்கி, பிடுங்கி, ஓட, வீழ்ச்சி தொடங்கியது.
ரோம் global empire ஆக ஏறக்குறைய அறுநூறு ஆண்டுகள் தேவைப்பட்டது. .
அது அடையாளமிழந்து சிதறிப்போக மேலும் நானூறு ஆண்டுகள் தேவைப்பட்டது.
சிதறிப்போக காரணம், DECADENCE!
பெருவணிகம், பெருநுகர்வு, பேராசை, இவை விதைத்த ஒழுக்கச்சிதைவுகள், கீழ்த்தரமான வாழ்வியல், அதனினும் கீழான மனப்பாங்கு... ஒரு கட்டத்தில் கொலீசியம் என்கிற மைதானத்தில் கிருஸ்துவர்களை சிங்கங்களுக்கு இரையாக்க அரசு நடத்திய கேளிக்கைகளை அலைகடலென திரண்ட மக்கள்கூட்டம் ஆர்ப்பரித்து கண்டு கொண்டாடி மகிழவைத்தது.
ரோமப்பேரரசு சிதைந்தபின் அதன் பழைய நிலப்பரப்பு என்ன ஆயிற்று தெரியுமா?
ஐநூறு நெடிய ஆண்டுகள்... மக்கள் அனைவரும் தமது நிலங்களில் அல்லது நிலம் வைத்திருப்பவர்களின் நிலங்களில் பயிர் வளர்த்து, உயிர் வளர்த்து. அமைதியாய் மகிழ்வாய் வாழ்ந்து கழித்தனர், 1400 களில் Renaissance எனப்படும் மறுமலர்ச்சி இயக்கம் தொடங்கும்வரையில். ஒரு விதத்தில் இந்த ஐநூறு ஆண்டு கால அமைதியும், மகிழ்வுமே Renaissance க்கு விதையாக இருந்திருக்கலாம் என எண்ணுகிறேன்!
ஆனால் வரலாறு விசித்திரமானது. எனவேதான் அது இந்த அமைதியான ஐநூறு வருடங்களை "இருண்ட காலம்" (Dark Ages) என வர்ணிக்கிறது. ஏனெனில் இந்த ஐநூறு வருடங்களில் பரபரப்பான, விறுவிறுப்பான, திகிலூட்டும், பெருவியப்பூட்டும் எந்த வித நிகழ்வுகளும் இல்லாததால்!
என்ன ஒரு Irony!
சரி, ஏன் இந்த வரலாறு பற்றி எழுதுகிறேன் இப்போது?
History is the best Teacher but we are poor students என்பார்கள்.
வரலாறு தந்த பாடத்தை நாம் இந்த முறையாவது miss செய்யாமல் இருந்தால் அடுத்த பல நூறு ஆண்டுகளுக்கு நம் சந்ததியினர் மகிழ்வாய் வாழ, நம்மிலிருந்தே ஆயத்தமாவோம்.
அன்று ஐநூறு ஆண்டுகள் தேவைப்பட்ட globalization இன்று சில பத்தாண்டுகளில் நடந்துவிட்டது.
நாகரீக உலகின் ரோமப்பேரரசாக அமெரிக்கா வளர்ந்து தனது தலைமையகம் இருக்கும் இடத்தை Capitol Hill எனப்பெயரிட்டதும் இந்த Roman narrative ஆல்தான். (Capitoline Hill in Rome, Capitol Hill in USA that houses White House!)
அன்றைய ரோமின் எல்லைகளை யார் யாரோ தாக்கி வளங்களை பிடுங்கி ஓட, அரசு வலுவிழந்தது போல இன்றைய சைனாவின் வளர்ச்சி.
"அமெரிக்க பேரரசு விழும். அன்றைய காலம் போல அல்லாமல் இன்று சைனா புதிய பேரரசாக உருவெடுக்கும்" என பல அரசியல் கணக்குகள் திட்டமிடப்பட்டு காய் நகர்த்தப்பட்டு, 'இதோ புதிய பேரரசு, தொட்டுவிடும் தூரத்தில்தான்' என்றாகிப்போன நிகழ்காலத்தில், "செல்லாது, செல்லாது" என வரலாற்றுக்கு துணையாய் களமிறங்கியிருப்பது ஒரு வைரஸ்.
"வைரஸை துரத்திடலாம். நார்மல் வாழ்க்கைக்கு போயிடலாம்" என்பது பகல் கனவு.
இயற்கையின் கருணையை புறக்கணித்து செயற்கை பெருவணிக bubble இல் sterile செய்யப்பட்ட சுற்றுச்சூழலில் வாழ்ந்து பழகும் சக மனிதர்களின் உடல்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துகொண்டே போய் ஒரு கட்டத்தில் 'மூக்கொழுகவைக்கும் வைரஸ்"கூட உயிர் கொல்லக்கூடும்!!
நாம. விழித்துக்கொண்டால்...
பேராசை பெருவணிகம் தோற்று, இன்றைய மக்களும் பண்டைய ரோமப்பேரரசின் மக்கள்போல விழிப்புணர்வு பெற்று தம் தம் ஊர்களுக்கு, நிலங்களுக்கு மீண்டும் புலம் பெயர்ந்து, அடுத்த பல ஆண்டுகளுக்கு 'தம் தேவைகளை தாமே நிறைவு செய்யலாம். (அதுவே வாழ்வின் லட்சியம்' என மாறப்போவது காலத்தின் கட்டாயம்). உலகம் முழுவதும் இந்த நிகழ்வை தடுக்க பெருவணிகங்கள் அரசுகள்மூலம் முயலும், தோற்கும்!
"When in Rome, be like a Roman, even when Rome has fallen!" என வரலாறு நம்மை ஒரு மறு ஒளிபரப்பிற்காய் ready செய்துகொண்டிருக்கிறது. ட்யூன் பண்ணுவதும் பண்ணாமலிருப்பதும் அவரவர் பாடு!
கருத்துகள்
கருத்துரையிடுக