செய்திகளை செய்திகளாக மட்டுமே பார்த்த கடைசி தலைமுறை 2010 க்கு முன் செய்திகள் வாசிக்கத்தொடங்கிய தலைமுறைகள் மட்டுமே.
டேட்டா கேபிளை இடுப்புல அரணாகயிறு மாதிரி சுத்திகிட்டா 'ஒன் அவர்ல மார்சுக்கு போய்டலாம் ப்ரோ' என்கிற ரேஞ்சில் வெகு வேகமாய் வளரும் தொழில்நுட்பம், டிஜிடல் வணிகம், அவை சார்ந்த அரசியல் கட்சிகள், அவை சார்ந்த ஊடகங்கள் என... செய்திகள் அனுதினமும் 'வைத்து செய்யப்படுகின்றன'.
'அந்த ஊடகம் இந்த பிசினஸ்மேனோடது. இவரு அந்த கட்சிப்பா' என்று தொடங்கி,
"அந்த ஆர்ட்டிகிள் பத்தியா சொல்ற? எழுதினது யாருன்னு பாரப்பா! அவரு 'அந்த கட்சி' ஆளப்பா" என வளர்ந்து
'அந்த செய்திய நம்பாதே. அந்தாளுக்கு வேல வெட்டியில்ல. வேணும்னே தப்பு தப்பா எளுதுவான் ஆன்ட்டி நேஷனல் ஃபெல்லோ!' என ரவுண்டு கட்டி...
ஒரு ஊடகத்துல 'நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுது' ன்னு தலைப்பு செய்தி. இன்னொரு ஊடகத்த பாத்தா, "நாட்டிலே ஓடிக்கொண்டிருந்த பாலாறை காணவில்லை!' என மிரட்டும்...
போதாததற்கு சமூக கொலைதளங்களில் (மெரளாதீங்க, சோஷியல் மீடியால ரத்தம் தெரிக்க தெரிக்க எத்தன சண்ட, வெட்டு குத்து, பஞ்சாயத்து தெரியுமா?!) கிளம்பும் புரளிப்புயலில் மூச்சு முட்டி திக்குமுக்காடி, கொஞ்ஞ்சம் இளைப்பாறலாமெண்டு பொழுதுபோக்கு செய்திகள் தரும் ஊடகங்களுக்குள் நுழைந்தால்... 'இந்த இளந்தாரி நடிகை, வாய்ப்பு கிடைக்க என்ன காரியம் செய்திருக்கிறார் பாருங்கோள்!!!' என கூவிக்கூவி பொரணி பேசும் ரேஞ்சில் பதிவுகள்!
பெருஞ்செய்தி முதல் கீச்சு செய்தி வரை (twitter) இதே!
கடந்த இரு வருடங்களில் பல கட்சிகள் சார்ந்த நண்பர்கள் யாராவது ஒரு fake news ஐ உண்மை என்று நம்பி, அல்லது தன் கட்சியை உயர்த்திய பொய்ச்செய்தியை ஆர்வமாய் பரப்பி, எதிர் கட்சி செய்தி எதுவாயிருந்தாலும் அது பொய்யென மல்லுக்கட்டி, நாட்டின் அவலங்களுக்கெல்லாம் எதிர்க்கட்சிதான் காரணம் என மாறி மாறி வசைபாடும்போதெல்லாம்... நான் என் பங்கிற்கு, 'செய்தியில் உண்மை இருக்கிற மாதிரி தெரியலப்பா / ஏன் இப்படி பொய் சொல்றீங்கப்பா? எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' ன்னு " அவரு" சொல்லியிருக்காருப்பா' என்று முடிக்கும்முன், 'அந்தாளப்பத்தி பேசாதடா, அவரு எதிர்க்கட்சி ஆளு'!!!!!!
ஐயையோ! கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்த குடிகள் பலவும் அப்பயே கட்சி பிரிச்சி கட்சி கட்டி வாழ்ந்த மாதிரி என்னை இவங்க feel பண்ணவைச்சத கூட பொறுத்துக்கலாம், அந்த தாடிக்காரருக்கும் கட்சிக்கொடிய மாத்தி மாத்தி குத்துறாங்களே, ஐயையோ!
கருத்துகள்
கருத்துரையிடுக