உல்லாச உலகம் நமக்கே சொந்தம் தையடா தையடா தையடா!
கொரோனா வியாதியால் இந்தியாவில் வெகுவேகமாக வளர்ந்துவரும் உயிர்காக்கும் தொழிலில் மிக மலிவானது மாஸ்க் தைக்கும் தொழில்.
கருணை உணர்வினால் தொடங்கப்பட்ட இந்த சேவை, இன்று மேட்சிங் ப்ளவுஸ் ரேஞ்சுக்கு வளர்ந்திருக்கிறது. வீதிக்கு வீதி நடைபாதைக்கடைகளில் மலிவாய் கிடைக்கிறது.
கேரளத்து சேட்டன் ஒருவர் மாஸ்க் மறைக்கும் தன் மீசை தாடியை உலகிற்கு காட்டியே தீருவேன் என மாஸ்க் மீது அது மறைக்கும் தன் முகப்பகுதியின் புகைப்படத்தை பிரிண்ட் செய்து, இப்போது அது ஒரு வல்லிய ரோரிங் பிசினசானு!
கூடிய விரைவில் ஐ.எஸ்.ஓ முத்திரையிட்ட உலகத்தரமான மாஸ்க்குகள் அனைத்துக்கடைகளிலும் சானிடரி நாப்கின்போலவே விற்கப்படும்.
பயன்பாடும் நாப்கின்கள் போலவே வருடக்கணக்கில் தொடரவேண்டியிருக்கும்; அதிகரிக்கும் மகாமாரிகள் ஓரு காரணமாக இருக்கலாம் அல்லது சைனாவிலிருந்து வெளியேறும் உற்பத்தி நிறுவனங்களை இங்கு இழுத்து நம் இயற்கை வளங்கள் ஆலைப்புகையாக மாறிப்போய்... நாம் சுவாசிக்க மாஸ்க் தொடர்ந்து அணியவேண்டி வரலாம்.
2020 ஆம் ஆண்டு உலகிற்கே மாஸ்க் போட்ட ஆண்டாக ஆகிப்போனது எதனால் என நாமெல்லாம் சிந்திக்க நேரமின்றி மறுபடியும் ஓடப்போவது உறுதி :-)
(இப்பொழுதே அமெரிக்காவில் ட்ரைவ் இன் தியேட்டர்களை தூசி தட்டி பொலிவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். உணவகங்களிலும் ப்ளாஸ்டிக் bubble க்குள் அமர்ந்து பாதுகாப்பாய் உண்ணும் வகையில் டிசைன் prototypes ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றனவாம்.
2030களில் வருடத்திற்கொருமுறை 'வானம் பார்த்தல்' என்ற புதியதொரு விழா பிரபலமாகியிருக்கும்.
அந்த விழா நாளுக்கு ஒரு வாரம் முன்பிலிருந்து விழா நாள் இரவு வரை ஆலைகள், நிறுவனங்கள் அனைத்தின்முன்பும் கோவில் காப்பு போல காப்பு கட்டி லீவு விட்டு, அந்த ஒரு நாளுக்காக வானம் தெளிவாக்கப்படும்...
கொண்டாடுவோம், குதூகலிப்போம்!
கருத்துகள்
கருத்துரையிடுக