நிலாநிழல் என்று சுஜாதா ஒரு நாவல் எழுதியிருந்தார்.
மிடில் கிளாஸ் முகுந்தனுக்கு கிரிக்கெட்டே சுவாசம். இந்திய அணியின் ஜெர்சி அணிவது அவனது கனவு.
பல தடைகளை தாண்டி உயரம் தொட முயன்று, சில வெற்றிகள், பல (அரசியல் கிறுக்கீட்டு) தோல்விகள், இடையில் ஒரு காதல், அதன் பின் அவிழும் துரோகம்... இவையெல்லாவற்றையும் கடந்து... மீண்டும் படிக்கப்போய்விடுவான்.
அந்தக்கதையில், காதலி அவனது வீட்டுக்கு வந்துசென்றபின்னான அவனது மனநிலை மிக பொயட்டிக்கான ஒன்று.
நான் இளையராஜாவின் இசைக்கு பரம ரசிகன்.
ராஜா அல்லாத இசையமைப்பாளர்களின் இசை எதுவும் நீண்ட காலத்துக்கு மனதை ஏனோ வருடுவதில்லை...
தப்பிப்பிழைத்த சில பாடல்களுள் இந்த ஒரு பாடல் மட்டுமே ரிபீட் மோடில் எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை...
இந்தப்பாடல் கேட்கும்போதெல்லாம் முகுந்தனது ஏக்கம் என்னிடமும் தொற்றிக்கொள்ளும்...
அது பாடகன் பாலுவின் வெற்றி!
--------
ஆண் : மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே
ஆண் : மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே
****
ஆண் : கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
{ஆண் : கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
ஆ&பெ குழு: ஆ...ஹ...ஹா...ஆ...ஹ...ஹா...ஆ...ஹ...ஹா...
ஆ...ஹ...ஹா...ஆ...ஹ...ஹா...ஆ...ஹ...ஹா...} (Overlap)
ஆண் : மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே
***
ஆண் : பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
{ஆண் : வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா
நான் காத்திருந்தால் காதலின்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
ஆண் : மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே
--------
கவிதை சொட்டும் இந்த வரிகளை மீண்டும் மீண்டும் சலிக்காது சுவைக்கலாம் :-)
மின்னலே என் வானம் உன்னை தேடுதே...
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா...
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்...
இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே...
முகுந்தனின் வானம் மின்னலுக்காய் இன்றும் காத்திருக்கிறது, என் உணர்வில்!
உங்களுக்கு?
கருத்துகள்
கருத்துரையிடுக