செத்தும் கொடுத்தான்... கூத்துக்கலையே மூச்சாக வாழும் ஆதிமூலம். 1950களில் கூத்தின்மேல் காதலாகி மேடை ஏறியவர், கூத்து நாடகமாய் தேய்ந்து இன்றைய சினிமாவிலும் கைபேசிகளிலும் சிரிப்பாய் சிரிப்பதை மௌனமாய் கடந்து, வறுமையிலும் கொள்கையோடு (லைவ் ஆடியன்சின் முன்தான் நடிப்பது, நடிப்புத்திறனின் மதிப்பு உடனுக்குடன் லைவ்வாக கிடைப்பதில் உள்ள ஆனந்தமே தன் இதயத்துடிப்பு) தனது எழுபத்தி மூன்றாவது வயதிலும் 'ஐயா' என்ற மதிப்போடு, சொற்ப பார்வையாளர்கள் முன் உயிரைக்கொடுத்து நடித்து, நடிக்கையிலேயே உயிர் விடுகிறார். வறுமையில் உழலும் மனைவி, அவசிய, அவசர ஆபரேசனுக்கு பணமின்றி பேரன், மகளின் இயலாமை கலந்த மௌனம், அவரை மிக நேசிக்கும் அவரது ட்ரூப்பின் சக கலைஞர்கள், அவரது நிழல்போன்ற உதவியாளர், அவரது மறைவு எப்பேர்ப்பட்ட இழப்பு என்பதுகூட தெரியாத பொதுமக்கள், இவர்கள் எல்லோரையும் விட்டுப்போய்விடுகிறார். ஒரு மாதம் துக்கம் கடைபிடித்தபின் குழு கூடி, அவரது நினைவாக தொடர்ந்து நாடகங்கள் நடிக்க முடிவு செய்கிறது. ஒத்திகை தினங்களில் ஒரு விந்தை நிகழ்கிறது. ஒவ்வொரு தினத்தில் குழுவின் வெவ்வேறு கத்துக்குட்டி நடிகர்கள்...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!