ஸ்பைடி, ஹா!
ப்ளாக் அன்ட் ஒயிட் ஸ்பைடியிலிருந்து ஸ்பேஸ் ஏஜ் ஸ்பைடி வரை ஒன்று சேர்ந்தால்?!
கும்மாளங்கோ! கொண்டாட்டங்கோ!
தொந்தியும் தொப்பையுமாய் முதல் நிறக்குருடு ஸ்பைடி வரை அதிரடிக்கிறார்கள். திரையெங்கும் விரியும் வர்ண ஜாலங்களும், நரம்புகளில் துள்ளலேற்றும் இசையும் நம்மை அவர்கள் உலகத்திற்கே வலைபோட்டு இழுத்துச்செல்கின்றன!
நகைச்சுவை இழையோடும் கதையில் ஒவ்வொரு ஸ்பைடி அறிமுகமும் க்ரியேடிவிடியில் வேற லெவல்!
மைல்ஸ், You got Miles to go :-)
இன்னும் ஐந்து நாட்களில் ஐந்து பெரிய படங்கள் ரிலீஸ். உலகையே காக்கும் ஸ்பைடியானாலும் கூட, கண்டிப்பாய் தியேட்டர்களை விட்டு துரத்திவிடுவார்கள்.
வீட்டில் அனைவரையும் அழைத்துச்சென்று 3D இல் பார்த்து கொண்டாட உங்களுக்கு இருப்பது ஐந்து நாட்கள் மட்டுமே! அந்த என்ட் க்ரெடிட் சீக்வன்ஸ் ரியலி மெஸ்மரைசிங் அண்ட் ஆசம்!
கதை?...
கதை என்னவா இருந்தா என்ன?!
நாடி நரம்பெல்லாம் கார்டூன்கள் ஓடும் ஒரு பொடியனின் ரிவ்யூ: 'இது வேற லெவல். இது வேற லெவல்! இது வேற லெவல்!!!!'
கருத்துகள்
கருத்துரையிடுக