ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, காரியத்தில்...
(ஆரியக்கூத்து - ஆரிய நாட்டிலிருந்து வந்து கழைக்கூத்து இடுவோர், பறை கொட்ட கயிற்றின்மீது நின்று அழகிய நடனம் ஆடு்வது என குறுந்தொகையில் பெரும்பதுமனார் பதிந்துள்ளார்)
ஆட்சிக்கு வந்தபோது கட்சி சார்பற்ற இந்தியனாக மிக மகிழ்ந்தேன். நல்ல மாற்றங்கள் நிறைய வருமென பழைய கனவை (1998 இல் இந்தியா அணு சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டியபோது கண்ட கனவை) மீண்டும் காணத்தொடங்கினேன்.
முதல் இரண்டு ஆண்டுகள், செயல் வேகம் கண்டு பிரம்மித்தேன்.
மேக் இன் இந்தியா - நல்லதென்று நம்பினேன்.
டிமான்... நல்லதென்று நம்பினேன்.
இன்னும் பல அறிவிப்புகளையும் அவ்விதமே.
சொதப்பலான அமலாக்கங்கள், பேச்சு பேச்சாக மட்டுமே நின்ற பல முழக்கங்கள், மெல்ல தலைதூக்கும் மத வெறுப்புகள், அதனாலான இழப்புகள், தமிழகத்தில் மத்திய ஆதரவோடு நடக்கும் சந்தர்ப்பவாத அரசியல், நாடளவில் சுதந்திர நிறுவனங்களின் செயல்பாடுகளில் குறுக்கீடு, இப்போது ராமர் கோவில் கட்ட அவரது கட்சியின் மூல அமைப்புகளின் அழுத்தம்...
ஏ டி எம் இல் ரீ காலிபரேஷன் இல்லாமல் புதிய நோட்டுக்கள் வந்திருந்தால் பொதுமக்களின் துன்பத்தில் பாதியாவது குறைந்திருக்கும். அரசுக்கு செலவும் குறைந்திருக்கும்.
அமெரிக்க அதிபர் போன்று அதிரடியாக வருமான வரி சுமை / சலுகை மூலமாக மேக் இன் இந்தியாவை நனவாக்கியிருக்கலாம்...
உலக வங்கி ப்ளஸ் பல வளர்ந்த நாடுகள் நமது உள்கட்டமைப்பு வசதிகளுக்கு கடன் தந்தும் பற்றாத சூழலில் வானுயர்ந்த சிலைகள்...
கோடி கோடியாய் ஊழல் நடப்பதாய் ஏராளமான ஆவணங்கள் வெளிவந்தும், பிடிபட்டும் தமிழகத்தில் இன்னும் ஒரு அமைச்சர் கூட சிக்கவில்லை...
வலுவான எதிர் ஆளுமை என எவரும் இல்லாத சூழலில், உடனடித்தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியவில்லை. விவசாயிகள் திரள் திரளாய் தில்லி சென்றும் பயனில்லை. மரபணு மாற்றப்பட்ட பருத்தியினால் லட்சக்கணக்கில் வாழ்வாதாரம் அழிந்தபின்னரும் மரபணு மாற்றப்பட்ட கடுகை இந்தியாவில் அனுமதித்தது இதில் மிக கொடுமையான நிகழ்வு.
எனது நட்பு வட்டத்தில் வேளாண்மை, வணிகம், தொழிற்சாலைகள் நடத்துவோர், கல்வியாளர்கள், ஊதியத்துக்கு உழைப்பவர்கள், ஓய்வூதியத்தில் வாழ்பவர்கள் என யாருமே மகிழ்வாயில்லை.
எதனால் இப்படி ஆனது என, சுய விருப்பு வெறுப்புகளை, கண்மூடித்தனமான ஆதரவு எதிர்ப்புகளை ஒதுக்கி வைத்து அலசினால் மட்டுமே, நிகழ்நிலையிலிருந்து விரும்பிய நிலைக்கு நாட்டை எப்படி நகர்த்துவது என தெளிவு கிடைக்கும். (இந்தியாவில் இன்டெலிஜென்சுக்கு என்றுமே குறைவில்லை.)
அவற்றை நனவாக்க, இன்னும் கடினமான முடிவுகள் எடுக்க நேர்ந்தாலும் செய்யவேண்டும்.
130 கோடி மக்களுக்குமான செயல்திட்டங்கள் எவர் செய்தாலும் (அறிவித்தால் போதாது) அவருக்கு நாம் வாக்களிக்கவேண்டும். அது மோடியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும்.
குறிப்பாக, நமது தொகுதிக்கு நல்லது செய்பவர் எந்தக்கட்சியானாலும் நாம் வாக்களிக்கவேண்டும். இது மட்டுமே நம்மிடமுள்ள துருப்புச்சீட்டு. ஆனால் இவரது செயல்பாடு பிடிக்கவில்லையென மோசமான இன்னொருவருக்கு வாக்களிக்கவேண்டிய நிலைமை நிறைய குடிமகன்களுக்கு. நோட்டா ஏட்டுச்சுரைக்காய், கறிக்குதவாது.
It is not enough if a candidate is good and capable unless the party that he represents is also good and capable. It is the ruling party that could make or mar. When will we have such a party or at least legislators with that desire ready to switch over with like minded friends to such a party as a faction i.e., without getting disqualified and without yearning to earn in the process.
பதிலளிநீக்குThat would require an entirely different constitution...
நீக்கு