"குருவீ!! ஒன்ன சுட்டுட்டாங்களா குருவீஈஈஈஈஈஈஈ!!!"
அது குணா...
'குருவீ! ஒன்ன சுட்டுட்டாங்களா குருவீஈஈஈஈஈஈஈ! அவனுங்கள நான் சும்மா விட மாட்டேன் குருவீ!!!!!'
இது 2.0 :-)
என்ன... நல்லவன வில்லனாக்கி... கொன்னுட்டானுங்க குருவீ!!!!!
அசுர உழைப்பு...
ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களில் உலகின் முக்கிய பெருநகரமென நியூயார்க் நகரத்திலேயே அத்தனை வில்லன்களும் பேரேடு நடத்துவார்கள். நகரின் பெயரை மட்டும் கோதாம் சிட்டி என்று மாற்றியிருப்பார்கள். கோலிவுட்டில் சென்னை சிட்டி சென்னை சிட்டியாகவே வருகிறது. கூடவே ச்சிட்டி, குட்டி :-)
வலுவான தீமை ஒன்றை மையப்புள்ளியாக்கி அற்புதமான Flashback கற்பனை சேர்த்து நெத்தியடி அடித்த குழு, அதற்கு வலுவானதொரு Out of the Box தீர்வை படத்திலாவது தந்திருந்தால் இது உலகப்படமாக மாறியிருக்கும். ஆனால் கோலிவுட் formula ப்ளஸ் ஹீரோயிசத்தில் சிக்கி செல்லு செல்லாய் சிதறிப்போச்சே!
600 கோடி ரூபாயில் உலக அரங்கில் சங்கர் தன் விசிட்டிங் கார்டை 3 D இல் வைத்திருக்கிறார். அவரது விஷன் ப்ளஸ் உழைப்புக்காக மட்டுமே பார்க்கலாம் ஒருமுறை. ஆனாலும் எவ்வளவு டெக்னாலஜி இருந்தாலும் நாயகன் வில்லன் துவந்த யுத்தத்தில்தான் இந்தப்படமும் முடிகிறது :-(
சுஜாதா என்ற எழுத்தாளரின் (வசன) பங்களிப்பு இல்லாத சங்கர் படங்களை ஏழாம் உலகம் எழுதிய ஜெயமோகனாலும் தூக்கி நிறுத்த முடியவில்லை... வாத்தியார் இருந்திருந்தால் இந்தப்படத்தில் புகுந்து விளையாடியிருப்பார்; பெருமாள், பரமேஸ்வரன் என ஜல்லியடித்திருக்கமாட்டார்...
Is technology worth the effort
பதிலளிநீக்குYes! In about five years we will be making 1000 crore budget movies if this one sells
பதிலளிநீக்கு