முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்வைத்தேடி - தொடர் - 01


கடினமான மலை முகட்டின் மீது ஏறி நின்றான்.


காலடியில் கோடிக்கணக்கான வருடங்களாக இயற்கை உருவாக்கியிருந்த பாறைகள் இருள் நிலவில் பளபளத்தன.


பாறைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மனித காலடிச்சுவடுகள் கண்டான்.


'நமக்கு முன்னே எத்தனை எத்தனை பேரை தாங்கியிருக்கும் இந்தப்பாறை!' என வியந்தான்.


மலை முகடு முடியும் சரிவில் இருந்து தொடங்கிய கானகத்தின் கனத்த இருள் நிலவு வெளிச்சத்தைக்கூட உள்நுழைய விடாத அளவு காட்டின் மீது கவிழ்ந்திருந்தது.


ஓசையற்ற இரவை துளைப்பது போல அவ்வப்போது பறவைகளின் ஓசை, விலங்குகளின் ஓசை எழும்பி அடங்கியது. கடலில் அலை போல கானக இருளில் ஓசைகள் என எண்ணி ஓசையின்றி நகைத்தான்.


எதற்காக இங்கு வந்திருக்கிறான்? என்ன வேண்டும் அவனுக்கு?


பல ஆயிரம் மைல்கள் தாண்டிய நிலப்பரப்பொன்றில் பல்லாண்டு அமைதியாக வாழ்ந்தவன், பெரிய விருப்பங்கள் எதுவுமில்லாது நாட்களை கழித்தவன், எப்படி இங்கு வந்தான்?


அந்த நிலத்தில் ஒரு கடுமையான பனிப்பொழிவு தின நிலவு இரவில் ஆட்களற்ற ஒரு நதிக்கரையில் தன்னோடு தானே உணவு அருந்திக்கொண்டிருந்தவனுக்கு இதுபோன்ற ஒரு கானகப்பரப்பு இருப்பது பற்றியோ அதில் அவன் தேடவேண்டியவை பற்றியோ எவ்வித உணர்வும் அப்போது இல்லை.


நிலவோடு தனித்து உரையாடியவண்ணம் உணவு அருந்துகையில் கருநீல வண்ண வால் கொண்ட பொன் கழுத்து சிறு பறவை ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து அவனிருந்த மேசையில் அமர்ந்தது.


நெடுநாட்கள் நெடுந்தொலைவு கடந்து வந்திருக்கவேண்டுமென அவனது உள்ளுணர்வு சொல்ல, கவனிக்கத்தொடங்கினான்.


அமைதியாய் அவனருகில் அமர்ந்திருந்த சிறு பறவை அதியற்புத குரலில் மெல்லிய இசை ஒலியொன்றை விட்டு விட்டு எழுப்பியது.


உணவு கேட்டு பாடுகிறதோ என எண்ணி தன் உணவில் சில துணுக்குகளை மெல்ல அதனருகில் அவன் உதிர்த்தபோது அப்பறவை அதிரவுமில்லை, பறக்கவுமில்லை, உணவை அலகினால் சுவைக்கவுமில்லை. அது ஒலியெழுப்புவதில் மட்டுமே முனைப்பாக இருந்தது.


நேரம் செல்லச்செல்ல அதன் இசையொலியில் ஒரு மென்சோகம் ஊறியிருப்பது போன்றதொரு உணர்வு, ஏன் தோன்றியதென்று அவனுக்கு தெரியவில்லை. தனது அங்கியின் பையொன்றிலிருந்து சிறிய ஒலிப்பதிவுக்கருவியை எடுத்து மேசையில் வைத்து அப்பறவையின் கானத்தை பதிவு செய்யும் ஆவலில் பொத்தானை அழுத்தினான்.


தொடரும்.


படம்: செயற்கை நுண்ணறிவு மென்பொருள் வழி நான் உருவாககியது.
.

கருத்துகள்

  1. சுவாமிநாதன்11 மே, 2026 அன்று 9:37 AM

    கானகம் கனவில் கண்டு நானும் காத்திருக்கிறேன். 😀

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...