கோவிந்தசாமி என் முதல் பேபி க்ளாஸ் தோழன். என்னைப்போலவே அரைக்கால் டவுடசரில் என்னைப்போலவே மூக்கு ஒழுகிக்கொண்டு.
ஸ்டெல்லா டீச்சர் எங்கள் வகுப்புக்குள் நுழையும்போதே வானிலை சட்டென்று மாறிப்போகும். பிழையின்றி அனா ஆவன்னா, ஏ பீ சீ டீ, ஒண்ணு ரெண்டு மூணு எழுத கற்றுத்தந்தவரின் முகத்தில் சதா ஒரு மென்சோகம் குடியிருக்கும். எப்போதும் எளிமையான புடவை உடையில் வருவார். உணவுப்பற்றாக்குறை தேகம். கண்கள் கடல் அளவு பெரிது, இன்றும் மாறாது நினைவில் நிற்கிறது.
ஆர். சி. மார்னிங் ஸ்டார் பள்ளியில் கல்ச்சுரல்ஸ் என்பது ஒரு S. S. ராஜமௌலி ப்ரொடக்சன் போல, so rich in settings and costumes. ஏதோ ஒரு பாடலுக்கு ஒரு பெரிய தாமரை மலர் ஸ்டேஜில் ஓப்பன் ஆகி உள்ளிருந்து நட்சத்திரக்கோல் ஏந்திய தேவதைக்குட்டிப்பெண் ஒருத்தி வெளியே வருவாள். அந்த precise மொமெண்டில் ஸ்டேஜில் மேகம் போல புகை சூழும்! இதெல்லாம் நடந்தது கும்மோணம் என்கிற சிறிய டவுனில், பின்-1970 களில் ஒரு சிறிய பள்ளியில்!
இப்படிப்பட்ட ஒரு சரித்திர ஸ்டேஜில் ஒரு நாள் ஸ்டெல்லா டீச்சர் எங்களை ஏற்றிவிட்டார்! அவர் கேட்கும்போது யாராவது மறுக்கமுடியுமா?
கோவிந்தசாமி, நான், வீரமணி அப்புறம் சில பெண்டு பிள்ளைகள் இதுதான் எங்கள் குழு.
"
டிக் டாக் டிக் டாக்
சேய்ஸ் த்ரீ ஓ க்ளாக்
"
என ஒரு முனையில் தொடங்கி வரிசையின் மறு முனையில்
"
டிக் டாக் டிக் டாக்
சேய்ஸ் நைன் ஓ க்ளாக்
"
என ஒரே ரைமிங்கில் கைகளை கடிகார முட்களின் பொசிஷன் போல காண்பிக்கவேண்டும்.
ஏராளமான ஒத்திகைகள் முடிந்து அந்த சம்பவ நாள் வந்த்து.
கருப்பு உடையில் வெள்ளை ரோஜாக்கள் தங்க நிற நூலால் எம்ப்ராய்ட்ரி செய்த சட்டை ஒன்று பல காலமாய் என் நினைவில் வாசனை குறையாமல் மொடமொடப்பு கூட இன்றும் புதிது போல உலவிக்கொண்டிருக்கிறது. அதுதான் என் முதல் ஸ்டேஜ் ட்ரஸ்!
கூட்டமாய் மாணவர்கள், அவர்களது குடும்பத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பார்வையாளர்கள் தரையில் சமுக்காளமிட்டு கூடியிருக்க நாங்கள் ஸ்டேஜில் ஏறினோம்.
"ஸ்பாட் லைட்ஸ் ஆன்!" என ஒரு குரல். சட்டென வெளிச்ச மழையில் நனைந்து நாங்கள் ஏழு பேர். பேனிக் அட்டாக் என்றால் அப்படி ஒரு அட்டாக்! பாடல் மறந்து போனது!!
சில நிமிடங்கள் நிசப்தம். ஆர்வத்தோடு பார்வையாளர்கள் எங்களை நோக்க... ஆடியன்சை கண்களால் பூதக்கண்ணாடி கொண்டு தேடிய என் கண்களில் பட்டது அந்த முகம்! எனது பள்ளியில் படிக்கும் என் அக்காவின் முகம். என்னை விட நாலு வயது பெரியவர். அம்மா அப்பா புடை சூழ தரையில் அமர்ந்திருந்தார்.
அந்த நொடியில் இருப்பு மறந்துபோய், மேடை மறந்துபோய், பள்ளிக்கூடம்... கூட்டம் எல்லாம் மறந்துபோய்... அடிவயிற்றிலிருந்து ஆனந்தமாய் குரலெடுத்து கத்தினேன் மைக்கில்; "ஏய் மாலாஆஆஆஆஆ! நான் இங்கே இருக்கேண்டீஈஈஈஈஈ!"
அவ்ளோ பெரிய ஸ்டேஜில தக்குணூண்டாய் நின்றிருப்பதின் நெர்வஸ்னெஸ்ஸில் + தன் இருப்பை அவருக்கு அடையாளப்படுத்தும் ஆவலில் அந்த அரை டவுசரின் ஔட்சைஸ் கத்தலில் அடுத்த சில நிமிடங்கள் ஆடியன்சு சைடில் அமளி துமளி!
சற்றும் எதிர்பாராத இந்த கூக்குரல் தாக்குதல் எல்லோரது கவனத்தையும் அக்கா மீது திருப்ப, வெட்கம் கோபம் பயம் போன்ற கலவையான உணர்வுகளுடன் அக்கா அங்கிருந்து எழுந்து ஒளிய இடம் தேடி மின்னலாய் ஓட... ஆரவாரம் அடங்க பல நிமிடங்களாயிற்று.
அதென்ன மாயமோ தெர்ல பயமெல்லாம் அந்த நொடில சட்டுனு போய்டுச்சி!
நாலு மணி டு ஒன்பது மணி பாடலை நாங்கள் பாடி முடிக்க, சில நாட்கள் கழித்து பள்ளியில் ஒரு மதிய உணவு இடைவேளைக்கு பின்னான உறக்க வகுப்புக்கு முன் எங்கள் குழுவுக்கு ஸ்டெல்லா டீச்சர் தன் சொந்த காசில் லாலிபாப் வாங்கித்தந்தார். எனது லாலிபாப்பின் நிறம் சிவப்பு! Memories are crazy you know. And they have the power to surprise! A wonderful time machine that can transport us to anywhere anytime in a blink. What we do with those memories is an entirely different thing though!
பயணம் - தொடரும்.

கருத்துகள்
கருத்துரையிடுக