நுனிக்கரும்பு இனிக்க காத்திருந்தவனும்
இனிப்பு கிட்டி
போயாச்சு சிவலோகத்துக்கு
நெஞ்சிலே கோயில் கட்டிய பூசலானும் அடைந்தாயிற்று சிவ பாத ப்ராப்தம்.
'நீ உருவாக்கிய ஞெகிழி மட்கி மண்ணானால்தான் உனக்கென் பாதத்தில் இடம்!' என தோடுடைய செவியன் விடமுண்ட கண்டன் சபிக்க, காத்திருக்குது மனித குலம் ஆண்டு எண்ணூறு எப்போது வருமெண்டு!
"எண்ணூறு வருவதெப்போ ஞெகிழி மக்குவதெப்போ! மாத்துங்கப்பா "விதியை"!' என கூக்குரலிடும் மனிதரை சிவனே என்று இருக்கச்செய்வது சிவனார்க்கும் இயலாது போல!
தாவரங்களிலிருந்து ஞெகிழி செய்வோம் விதியை வெல்வோம் என இப்போதும் ஞெகிழி பிடித்து தொங்குது ஒரு பெருங்கூட்டம்.
மௌனமாய் புன்னகையோடு வேடிக்கை பார்த்திருக்குது தாவரக்கூட்டம்.
(PC: salon dot com website)
கருத்துகள்
கருத்துரையிடுக