முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனி மனிதனாய் வேண்டுகிறேன்...

 

#CMOTamilNadu #EdappadiPalaniswami


🙏 தனி மனிதனாய் வேண்டுகிறேன். 

12 Year old poor girl raped, electrocuted to death by perpetrator. Family did dharna to force police action. Sniffer dog identified a teenage neighbour. DNA report was conclusive. Still, Mahila court acquited the accused due to insufficient evidence.

Crestfallen family got support from Hairstylists Association of TN as her father is a member. 

After a statewide OneDay strike by his Sangam (Association), Govt now appeals to higher court against the verdict given by Mahila court, a court run by Women :-)


An Assamese girl in search of work, gangraped by prospective Job giver's brother and friends on her way back after an interview, is running around for justice in Palladam, thousands of km away from her kith and kin.


These incidents still keep happening though we have enacted years of POSCO and Nirbhaya Acts...


Will TamilNadu, the land of Three glorious "Sanga" periods that dates back to a time prior to modern recorded history, constitute a 'Bench' to get to the bottom of this "rapism* is normal here" problem and uphold the safety and rights of all women who live here, to eradicate this age old epidemic?


My friends, law makers and fellow citizens, just a moral question to ponder:

இந்திரப்பிரஸ்த மாளிகையின் கானல்நீர் பொய்கையில் அரையாடை சுருட்டி தடுமாறி நடந்த துரியோதனனை கண்டு அன்று நகைத்தது திரௌபதியாய் இல்லாமல் யுதிஷ்டிரனாக இருந்திருந்தால்?


சூதில் தோற்ற சான்றோர் சபையில் உருவப்பட்டது யுதிஷ்டிரனின் அரையாடையாக இருந்திருந்தால்??

(கண்ணன் வரும்முன்பே தம்பியர் தடுத்திருப்பர். ஏனெனில் தருமத்திற்கொரு இழுக்கு வந்தால் சகியாது நம் மரபு.)


என்ன செய்வது? சிரித்தது திரௌபதியாயிற்றே! 

பெண்மையின் மானம் களையப்பட்டால் தருமம் தலைகுனிந்து நிற்க, இறை மட்டுமே மானம் காக்கட்டும் என அன்றுபோல் இன்றும்  நாம் வெட்கத்திலும் வேதனையிலும் கூசி நிற்க... இறப்பவர்களின் வயது வேண்டுமானால் வெவ்வேறாக இருக்கலாம், அவர்களை இணைப்பதென்னவோ வறுமை மட்டுமே...

வறுமையிலும் தன்மானத்தோடு வாழப்போராடும் இவர்களது மானத்தை காப்பது நீதி தேவதையின் கடமையல்லவா?

இல்லை! அது நம் ஒவ்வொருவரின் கடமை!


மாண்பு மிகு பெண்கள், மாண்பு மிகு குழந்தைகள், பாதுகாப்புடன், உடல் நலமுடன், மன நலமுடன் வாழ சட்டங்கள் இயற்றி நிறைவேற்றுவதற்காக நாம் தேர்ந்தெடுத்த 234 தொகுதி மாண்பு மிகு சட்டசபை உறுப்பினர்கள், மாண்பு மிகு தொகுதி அமைச்சர்கள், மாண்பு மிகு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தனி மனிதனாய் வேண்டுகிறேன். 


(படம்: திரு சுந்தர ராமசாமியின் நூல் ஒன்றின் அட்டைப்படத்தின் ஒரு பகுதி)


Women are Nation builders in the truest sense. Protecting them IS an act of protecting our Nation, true patriotism that is.


*Rapism - Systematic delay of justice at all levels to rape victims (and mass apathy) that tantamount to denial of justice. Not yet a term in any popular dictionaries of the world but sooner or later it will be added.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்