இந்தியாவின் இன்றைய தேசிய கீதம், "கோடை எனை வாட்டுதே...".
ஒவ்வொரு அரிசியிலும் உண்பவர் பெயர் எழுதியிருக்கிறது இறை.
அதாவது, முகவரி கொடுத்தவர்கள் பெயர் மட்டுமே!
இறைக்கு முகவரி தருவதா?
ஆம்.
எப்படி?
இறை தூதர்கள் வழியே?
கிருத்துவமா?
இல்லை, மரத்துவம்.
மரங்கள் இறை தூதர்கள். நாம் நடும் ஒவ்வொரு மரமும் நம் முகவரியை இறை சேர்க்கும்.
வேர் வழியே மண்ணில் இறங்கும் மழைத்துளிகள் நமக்கான அரிசிக்கு உயிர்தரும், வளர்த்தெடுக்கும், நமது பெயரை அந்த அரிசியில் பதியவைக்கும்.
இறை செய்வதோ அஞ்சல் சேவை மட்டுமே.
மரங்கள் இன்றி இறைக்கும் உணவில்லை தெரியுமா?!
தண்ணீர் வேண்டுவோர் மண்ணீர் சேர்ப்போம்.
சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்? நீரானாலும் சோறானாலும்!
கருத்துகள்
கருத்துரையிடுக