நேற்றைய தினங்களின் வாசனை வீசாத
இன்னொரு இரவில்
கரிய வானத்தில் எனக்கே எனக்காய்
நான் ஒட்டிக்கொண்டிருக்கும்
இந்த நட்சத்திரம்
நீயாக இருக்கலாம்,
வழக்கம்போலவே.
ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருந்து
உன் நினைவுகள் இப்போதுதான்
என்னை அடைந்திருக்கின்றன,
உன் நேசம் உறங்கும் என் அடர் மௌனம்
முடிவற்ற வெளியாய் உன்னை சூழ்ந்திருப்பது
அறியாமலே.
அண்டவெளிக்கப்பால்
என்ன இருந்து என்ன?
என்ன இன்றி என்ன?
உள்ளே நானிருக்கிறேன்.
நீயுமிருப்பாய், நான் உள்ளவரை.
கருத்துகள்
கருத்துரையிடுக