பெரிதினும் பெரிது கேள்!
கேட்டோம், கேட்கிறோம், கேட்போம்!!
"கனிம வளங்கள் கொள்ளை!"
"விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிகிறது!"
"நீர்நிலைகள் காணாமல் போகின்றன!"
"பல்லாயிரம் மரம் பணால்!"
"பல்லாயிரம் கோடி ஊழல்!"
"வளர்ச்சின்னா இதெல்லாம் தாங்கிதான் ஆகணும்."
"அழிவு இல்லாம வளர்ச்சி இல்லையே!"
"யாருதான் ஊழல் பண்ணல?"
"அவன் தின்னுட்டு கொஞ்சமாவது செய்றான்ல!"
"நாடு சரியில்ல சார். சிஸ்டமே கரப்ட். நாடு உருப்படாது."
"ஓட்டுக்கு ரெண்டாயிரம்னு பேசுனானுவோ, கையில வாங்கிட்டுதான் குத்துவம்."
"இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்."
ஹலோ! TAKE A BREAK!!
உலகின் மிகப்பெரிய உணவுக்கிண்ணமாக இருந்த நாடு, நம் நுகர்வு மோகத்தால், உலகின் மிகப்பெரிய சந்தையாகிக்கொண்டிருப்பது உங்களது சிந்தனைக்கு எட்டவே இல்லையா!
ஒவ்வொரு எட்டு வழிச்சாலையும், ஒவ்வொரு துறைமுகமும், ஒவ்வொரு உலக வணிக ஆலையும் வரும்போதெல்லாம் கூப்பாடு போட்டுவிட்டு கோலாவும் பர்கரும், வாஷிங்டன் ஆப்பிள், ஏடன் தோட்டத்து மாங்கனி என நாம் தேடித்தேடி துகரும் வரை, நுகர்தலை மட்டுமே தேடும் வரை நம் வளங்கள் சுரண்டப்பட்டு ஏராளமான நோயூக்கிகள் சேர்க்கப்பட்டு, மூச்சு முட்ட ப்ளாஸ்டிக் பைகளில் அடைபட்டு, தமக்கே திரும்ப வரும்.
இந்த சாலைகள், துறைமுகங்கள், ஆலைகள் எல்லாம் நம் நுகர்வை, உலகெங்குமுள்ள நம் போன்றோரின் நுகர்வு விருப்பத்தை விரைந்து நிறைவேற்றவே, மலிவாய் நிறைவேற்றவே!
பெரிதினும் பெரிது கேட்போம்,
அதையும் விரைந்து பெறுவோம்,
நுகர்வின் மிச்சங்களை விசிறியடிப்போம்,
நோய்க்கூடாரமாக மாறுவோம்.
நம்மோடு நாம் நடத்தும்
நிழல் யுத்தத்தில் களைத்து
உறுப்புகள் நோக வீழ்வோம்.
கவலை வேண்டாம்!
நாம் அனுமதித்த ஆலைகள்/சாலைகள்
விரைவாய் நம் உயிர்காக்கும்!
மீண்டும் நம்மிடையில்
நுகர்வு கொண்டு சேர்க்கும்!
இத்தனைக்கும் இடையில், நம் வாழ்வு மாற்றமின்றி தொடரும்!
"கனிம வளங்கள் கொள்ளை!"
"விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிகிறது!"
"நீர்நிலைகள் காணாமல் போகின்றன!"
"பல்லாயிரம் மரம் பணால்!"
"பல்லாயிரம் கோடி ஊழல்!"
"வளர்ச்சின்னா இதெல்லாம் தாங்கிதான் ஆகணும்."
"அழிவு இல்லாம வளர்ச்சி இல்லையே!"
"யாருதான் ஊழல் பண்ணல?"
"அவன் தின்னுட்டு கொஞ்சமாவது செய்றான்ல!"
"நாடு சரியில்ல சார். சிஸ்டமே கரப்ட். நாடு உருப்படாது."
"ஓட்டுக்கு ரெண்டாயிரம்னு பேசுனானுவோ, கையில வாங்கிட்டுதான் குத்துவம்."
"இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்."
"
தீதும் நன்றும்... நமக்கு நாமே!
பின் குறிப்பு:
1.
1.
கடவுளுடன் நேரடித்தொடர்பில் இருந்துகொண்டு, 'வெறுமையான' நுகர்வு வாழ்விலிருந்து நம்மை மீட்பதாக நம்பிக்கை தரும் ஆன்மீகர்களும் அழுத்தம் தாளாது தற்கொலை செய்துகொள்ளும் சூழலில்... பாத்து சூதானமா இருந்துக்குங்க!
2.
எஞ்சியிருக்கும் ஒரு இந்திய கானகத்தில் 'நேர்படப்பேசு' நிகழ்ச்சியில், 'அவங்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா????' என யானைகள் கட்சித்தலைவர் முழக்கம். இன்று மாலை 'வளர்ச்சி' சேனலில் ஒளிபரப்பு. காணத்தவறாதீர்!!!!

கருத்துகள்
கருத்துரையிடுக