கில்காமேஷுக்கும் எங்கிடுவுக்கும் சண்டையாம்!
கில்காமேஷ், இரு பங்கு கடவுள் ஒரு பங்கு மனிதம் சேர்ந்து செய்த கலவை.
சுமேரிய நாட்டின் அரசன் அவன்(இன்றைய ஈரான்).
கொடுங்கோலன். ஊரிலுள்ள ஆண்களையெல்லாம் அடிமை போல வேலை வாங்கி, களைத்து மயக்கத்தி்ல் உறங்கவைத்து, அவர்களது பெண்டிர் அனைவருடனும் முதலிரவு முதல் தொடரிரவும் தனதே என கட்டளை பிறப்பித்து நடத்த, நொந்த மக்கள் இறைவேண்டி அவனுக்கு நிகரான வலிமையுள்ள காட்டுவாசி எங்கிடுவை பெறுகின்றனர்.
மிருகங்கள் சூழ வாழும் எங்கிடு வந்தபின்பு கானகத்தில் பொறிவைத்து விலங்குகளை வேட்டையாடுபவரின் தொழில் நலிகிறது, ஏனெனில் அவர்கள் வைக்கும் பொறிகளை அவன் ஒருவனே உடைத்தெறிந்ததால், கானகம் காத்ததால்...

வேட்டையாடிய மனித மிருகங்கள் தொழில் நசிவு தாங்க இயலாது எங்கிடுவை வேட்டையாட பொறி வைக்கின்றனர். அது நடமாடும் பொறி, காமப்பொறி.
தேவதாசி ஒருத்தி கானகத்துள் நுழைகிறாள். ஆறு பகல் ஏழு இரவுகள் கழிவதற்குள் நகர வாழ்வின் பாடங்கள் அனைத்தையும் அவனுக்கு போதித்து விடுகிறாள், நகருக்கு அழைத்து வருகிறாள்...
தேவதாசி ஒருத்தி கானகத்துள் நுழைகிறாள். ஆறு பகல் ஏழு இரவுகள் கழிவதற்குள் நகர வாழ்வின் பாடங்கள் அனைத்தையும் அவனுக்கு போதித்து விடுகிறாள், நகருக்கு அழைத்து வருகிறாள்...
எங்கிடு ஒரு ஆட்டுக்கிடையின் இரவுக்காவலனாக நகர வாழ்வு தொடங்குகிறான்.
வழிப்போக்கன் ஒருவன் கில்காமேஷின் முதலுறவுச்சட்டம் பற்றி எங்கிடுவிடம் புலம்பிச்செல்ல, கோபம் கொண்ட எங்கிடு நகரில் நடக்கும் அடுத்த திருமணத்தில் கில்காமேஷை சந்திக்க விரைகிறான்.
வழிப்போக்கன் ஒருவன் கில்காமேஷின் முதலுறவுச்சட்டம் பற்றி எங்கிடுவிடம் புலம்பிச்செல்ல, கோபம் கொண்ட எங்கிடு நகரில் நடக்கும் அடுத்த திருமணத்தில் கில்காமேஷை சந்திக்க விரைகிறான்.
மணப்பெண்ணை தொட கில்காமேஷ் முயல, எங்கிடு தடுக்க துவந்தயுத்தம் (மல்யுத்தம் போல) தொடங்குகிறது. பன்னிரெண்டு ஆண்டுகள் தொடரும் (!) இப்போரில் இருவரும் சரிசம பலசாலிகள் என உணர்ந்து, இந்த நெடிய யுத்தம் சேர்த்து வைத்ததால் உயிர் நண்பர்களாகிறார்கள். நகர மக்கள் பெண்டிரோடு உறவாடி வாழ, இந்த இருவரும் பெரும்புகழைத்தேடி 'அற்புத ஆப்பிள் தோட்டம்' வெல்ல நகர்கிறார்கள்
பயண நாட்களில் மலைகள் உடைந்து விழுவது போல், உலகே எரிந்து சாம்பலானது போல், நெருப்பு கக்கும் மிருகம் ஒன்று எதிர்ப்பது போல் கில்காமேஷுக்கு வரும் கனவுகளையெல்லாம் 'எல்லாம் நன்மைக்கே' என எங்கிடு (ஏ)மாற்றி விளக்கி சொல்ல, பயணம் தொடர்கிறது.
இன்றைய லெபனானில் அன்றைய ஆப்பிள் தோட்டம். புனித மரங்களால் நிறைந்த தோட்டத்தை அரக்கனொருவன் காக்கிறான் (!).
தோட்டத்தைக்கண்டு கில்காமேஷ் மருள, எங்கிடு அவனுக்கு உத்வேகம் தந்து அழிக்கச்சொல்கிறான்.
இருவரும் தோட்டத்துள் புகுந்து மரங்களை வெட்டி சாய்க்க, அரக்கன் தடுக்க, பெரும் சண்டை....
அரக்கன் தோற்கிறான். கில்காமேஷ் எங்கிடுவின் உந்துதலால் அரக்கனின் தலையை கொய்ய, காற்றில் பறக்கும் தலை 'என் மரணத்திற்கு காரணமான எங்கிடு, விரைவில் மாள்வான்' என சபித்து தரையில் விழுகிறது.
வெட்டி வீழ்த்திய பழமையான ஆப்பிள் மரத்தில் தம் நகர கோவிலுக்கு பெருங்கதவு ஒன்று செய்து மற்ற மரத்துண்டுளால் ஆன படகில் கதவுடன் ஊர் திரும்புகின்றனர்.
கில்காமேஷின் கீர்த்தி மேலாகத்துக்கும் பரவ, ஒரு கடவுளின் பெண் அவன்மீது மையலாகிறாள்.
தன் நகர பெண்கள் எவரையும் விட்டுவைக்காதவன், அவள் நடத்தை கெட்டவள், அவளுடன் உறவாடுபவர் விரைவில் இறந்துபோவர் என கேள்விப்பட்டதன் அடிப்படையில் மறுத்து நிந்தித்து அனுப்புகிறான்.
தன் நகர பெண்கள் எவரையும் விட்டுவைக்காதவன், அவள் நடத்தை கெட்டவள், அவளுடன் உறவாடுபவர் விரைவில் இறந்துபோவர் என கேள்விப்பட்டதன் அடிப்படையில் மறுத்து நிந்தித்து அனுப்புகிறான்.
சினந்தவள், தந்தையிடம் சென்று முறையிட்டு அவன் நகரை அழிக்க தேவலோகத்தின் காளையை அனுப்புமாறு கேட்க, தந்தை தட்டிக்கழிக்க, மேலும் சினந்து 'நரகப்பேய்களை அவிழ்த்துவிடவா அல்லது காளையை அனுப்புகிறாயா?' என கொதிக்க, காளை பூமி நோக்கிப்பாய்கிறது.
அது ஏற்படுத்திய பேரழிவு கண்டு சினந்த இருவரும் காளையுடன் மோதி குத்திக்கிழித்து கொல்கின்றனர்.
ஊரே விழாக்கோலத்தில். எங்கிடு மட்டும் கடும் துயரில். கில்காமேஷின் கனவுகளை (ஏ)மாற்றி விளக்கமளிக்க முடிந்தவனுக்கு
தன் கனவுகளை அவ்வாறு ஏய்க்க முடியாததால். தேவ காளையையும் கொன்றதால் அவனது நாட்கள் விரைந்து எண்ணப்படுகின்றன கடவுளரால் என கனவு சொல்கிறது, உடல் வேகமாய் நலிகிறது.
சபிக்கிறான், ஆப்பிள் மரக்கதவு காக்கும் கோவில் கடவுளை, கானகத்திலிருந்த தன்னை நகரவாசியாக மாற்றிய விலங்கு வேட்டைக்காரனை, தேவதாசியை.
தேவதாசி கெஞ்சுகிறாள். அவனை 'மனிதனாய்' மாற்றியது அவள்தானென்பதால், அவனுக்கு கில்காமேஷின் தொடர்பு கிடைத்ததும் அவளால்தான் என்பதால்...
மனம் மாறுகிறான். சாபங்களை திரும்பப்பெறுகிறான். போரில் இறக்கமுடியாமல் நோயில் வீழப்போகிறேன் என கதறி, மாய்கிறான்.
கில்காமேஷ் ஓடி வருகிறான். உயிர்நண்பன் இறந்தான் என்பதை சீரணிக்க இயலாமல் எங்கிடுவின் உடலை அணைத்துக்கொண்டு கதறுகிறான், கதறிக்கொண்டே இருக்கிறான் எங்கிடுவின் உடல் அழுகி மூக்கின் துளை வழியே புழு ஒன்று வெளியே வரும் வரை...
பின் தன் நகர், செல்வம் அனைத்தும் துறந்து தோலாடை தரித்து, தன்னை துரத்தும் மரணத்திடமிருந்து தப்ப 'சாகாவரம் தரும் பாதை' தேடுகிறான். சாகாவரம் பெற்ற மனிதனொருவன் இருப்பதாய் அறிந்து அவனைத்தேடுகிறான்.
அங்கிருக்கும் கடவுளரின் உதவி பெற்று, தான் தேடிய மனிதனை கண்டுபிடிக்கிறான். அவனுக்கு எப்படி சாகாவரம் கிடைத்தது என கேட்கிறான்.
--++++----
சாகாவரம் பெற்றவனின் கதை.
ஒரு கடவுளின் சாபத்தால் கடல் பொங்கி நிலம்புகுந்து பிரளயம் ஒன்று நிகழ்ந்தது.
நல்லதொரு படகு செய்து என் குடும்பம் அதிலேற்றி வகைக்கொரு உயிரின சோடியையும் ஏற்றி, ஊழி நீரில் பயணம் செய்தேன்.
காற்று சுழற்றியடிக்க, அலைகள் பந்தாட மயக்கமானேன். விழித்து பார்த்தால் பூமியில் மனித இனமே இல்லை. என் படகு மட்டும் ஒரு மலையுச்சியில் சொருகி நின்றபடி...
காற்று சுழற்றியடிக்க, அலைகள் பந்தாட மயக்கமானேன். விழித்து பார்த்தால் பூமியில் மனித இனமே இல்லை. என் படகு மட்டும் ஒரு மலையுச்சியில் சொருகி நின்றபடி...
மெல்ல வெளியில் வந்தோம். சபித்த கடவுள் விரைந்து வந்தார். நாங்கள் அழியாதது கண்டு சினந்தார். அதற்குள் இன்னொரு கடவுள் குறுக்கிட்டு 'ஆனாலும் மனிதர்கள் செய்த தவறுகளுக்கு ஊழித்தண்டனை மிக அதிகம்' என வாதாட, பேச்சு வார்த்தை உடன்படிக்கையில் மனிதர்கள் மற்றும் ஏனைய உயிர்கள் மீண்டும் பூமியில் வசிக்கலாம் எனவும் அவர்களை காத்ததால் எனக்கு சாகாவரம் தரவும் முடிவாயிற்று.
---+++++-----+
தனக்கும் அந்த வரம் வேண்டும் என கில்காமேஷ் கேட்க, 'வாய்ப்பே இல்லை, மரணம் மட்டுமே நம் கையில் இல்லாதவாறு கடவுளர் நம்மை படைத்துள்ளனர்' என அறுதியிட்டுக்கூறி, மரணத்தை வெல்ல முடியாவிட்டாலும், நீண்ட இளமையை தரும் முட்செடி ஒன்று, ஒன்றே ஒன்று, ஆழ்கடலில் இருப்பதாய் கூற, கில்காமேஷ் அந்தச்செடியை தேடி, கண்டு, கவர்ந்து, உடனே பயன்படுத்தாமல், தான் அதை உண்ணும் முன் வயோதிகனொருவன்மீது சோதனை செய்து பார்க்கலாம் என பத்திரப்படுத்துகிறான்.
நகரம் திரும்பும் வழியில் ஓரிடத்தில் குளிக்கையில் பாம்பு ஒன்று அந்தச்செடியை விழுங்க, அவன் கண்முன்னே அது தோலுதிர்த்து இளமை திரும்பி வேகமாய் ஊர்ந்து மறைகிறது.
மனது நொறுங்கி வெடித்துக்கதறி அழுது பின் வயோதிகத்தள்ளாட்டத்துடன் தன் நகரம் அடைந்து நகரின் பெருங்கல்சுவரை தடவிப்பார்க்கிறான்...
மனது நொறுங்கி வெடித்துக்கதறி அழுது பின் வயோதிகத்தள்ளாட்டத்துடன் தன் நகரம் அடைந்து நகரின் பெருங்கல்சுவரை தடவிப்பார்க்கிறான்...
----------------
எத்தனை எத்தனை குறியீடுகள்!
பல்லுயிர் காக்க இறை படைத்ததும் கறை படிந்துபோய் அழிவுத்தொழில் செய்ய துணை போக, அழித்தவன் இறுதியில் தன்னைக்காக்க நடத்திய பெரும்பயணம் பலனற்று தான் கட்டிய பெருங்கல் மதில்சுவரையே கையாலாகாத உணர்வோடு தடவிக்கொண்டு நிற்பது...
குறியீடுகளைக்களைந்து பார்த்தால் நமக்கு சொல்ல முயலும் சேதி... தெள்ளத்தெளிவாகவே இருக்கிறது!

கருத்துகள்
கருத்துரையிடுக