முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சூது கவ்வியதே!


காக்கும் தொழிலை செய்பவன் அழிக்கிறான், அழிக்கும் தொழில் செய்பவன் காக்கிறான்! என்னதான் நடக்குது நாட்டுல???

குஷ்பூவுக்கு கோயில் கட்டியவனும், நட்சத்திர ஹோட்டலில் வாலெட் பார்க்கிங் வேலை செய்து (அந்த வேலையையும்) இழந்தவனும், ஐடி நிறுவனத்தில் காதலிக்கச்சொல்லி மிரட்டிய பெண்ணால் மணிக்கட்டு நரம்பு வெட்டுப்பட்டு(!) வேலை போனவனும் வேலை தேடி சேருமிடம் 'கிட்நாப்பிங்' க்கு ஆங்கில ஸ்பெல்லிங் கூட ஒழுங்காய் தெரியாத, நான்கு கட்டளைகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஒரு  'நிறுவனம்'.

ப்ராக்டிகலான டீம் லீடருடன் ப்ராக்டிகலான(!) ப்ராஜக்டுகள் / விக்டிம்களுடன் நன்கு வளர்ந்து வரும் நிறுவனம் ஓரிடத்தில் சறுக்குகிறது.

பிழைக்கத்தெரியாத (i.e. நேர்மையான) அமைச்சரின் மகனுக்கு பல பிசினஸ் தொடங்க அவசரமாய் முதலீடு வேண்டி அம்மா வழியே விண்ணப்பித்து நேர்மை அமைச்ச அப்பா மேலும் அவமானப்படுத்த 'தன்னைத்தானே' கடத்த ஒரு கும்பலுடன் ப்ளான் போட...

இந்த அமைச்சரின் 'நேர்மையினால்' அவமானப்பட்ட பிசினஸ் புள்ளி ஒருவர் அமைச்சரை பழிவாங்க அமைச்சர் மகனை கடத்தி தருமாறு 'நிறுவனத்தை' அணுக...

முதல் கும்பலால் 'கடத்தப்பட்ட' மகனை 'நிறுவன' கும்பல் தூக்கிப்போக, அவர்களையும் தன் ப்ளானில் இணைத்து அமைச்சர் மகன் போன் வழியே அம்மாவை மேனிபுலேட் செய்து தலைவரே கட்சி நிதியிலிருந்து பணம் தந்ததால் ரிலீஸ் ஆகி வந்து, நிறுவனம் எதிர்பார்க்காத பலப்பல திருப்பங்களுக்கு பின் நேர்மை அமைச்சருக்கு பதிலாய் தலைவரிடம் சீட்டு பெற்று தேர்தலில் ஜெயிக்க...

சூது கவ்வியதே!!!!!

என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்ட் பெயர் ப்ரம்மா!

(செடி வளர்த்து விற்கும்) நர்சரியின் பெயர் 'சொக்கன்' நர்சரி :-)

படம் நெடுக முரண்குறியீடுகள், இருட்டு அறையில் சைகோவிடம் முரட்டு குத்து வாங்கி, அலறி அலறி ஒரு கட்டத்தில் அதையும் என்ஜாய் பண்ணும் கிட்நேப்பிங் கும்பல்! 

அந்த க்ளைமாக்ஸ்!!

இந்தப்படம் உண்டாக்கிய அதிர்வுகள் இன்று  புதிதாய் பார்ப்பவரையும் கவ்விக்கொள்ளும்.

விஜய் சேதுபதி! தமிழில் எத்தனை சூப்பர் நடிகர்கள் இருந்தாலும் அவர்களாலெல்லாம் இட்டு நிரப்ப முடியாத புகழிடம் ஒன்று எம். கே. தியாகராஜ பாகவதரின் இடம், இன்னும் நிரப்பப்படாமலே இருக்கிறது. காலமும் நேரமும் ஒத்துழைத்தால் சூது கவ்விய அந்த இடத்தை இவர் இட்டு நிரப்பலாம்!



ஒரு மழை நாளில், நல்ல நட்புகளோடு, மிதமான சிற்றுண்டியோடு செட்டில் ஆகி ரசித்து ரசித்து பார்க்கவேண்டிய படம்!





கருத்துகள்

  1. 2013 ல் வந்த படத்துக்கு 2018 ல் ஒரு விமர்சனம்.அந்த பையன் அதற்கு அப்புறம் சில படங்கள் எடுத்து விட்டான் ஆனால் சூது கவ்வும் பார்த்து விட்டு அவனது மற்ற படங்களை பார்க்க பிடிக்கவில்லை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...