நீயெனக்கு வேணுமடி தங்கமே தங்கம், தங்கம்!
ஆழக்குழி தோண்டி ஆளு, வண்டி, வாகனம் உள்ள அனுப்பி, தோண்டி எடுத்து, தரைக்கு கொண்டு வந்து, சுத்தம் பண்ணி உருக்கி பாளம் பாளமா வார்த்து எடுத்து. பல ஊருக்கு துப்பாக்கி பாதுகாப்புல பத்திரமா அனுப்பி, சின்ன துண்டுகளாக்கி, பல ஆளுங்க பல வேல செஞ்சி விதம் விதமா உருவத்த மாத்தி, கடை கடையா கடை விரிச்சி...
ஓடி ஓடி உழச்சத பக்குவமா அங்க குடுத்து சிறுகச்சிறுக சேத்து... சேத்ததை திருடனுக்கு பயந்து கடுங்காவல் கொண்ட சொரங்கத்தில அரசு அனுமதியோட பதுக்கி வப்பமே, அதுக்காகவா இம்புட்டு மெனக்கெடலு? இம்புட்டு செலவு???!!!!!
யாரையுமே நம்பமுடியாம போனாலும், யாரு கைவிட்டாலும் தங்கம் வச்சிருக்கவன் தப்பிச்சுக்குவான்னு நம்பிக்கை...
இந்த நம்பிக்கை நமக்கு இருக்கிற மாதிரி அரசாங்கத்துக்கும் இருக்குங்க!
ரொம்ப நெருக்கடியான கட்டத்தில நாட்டு மக்கள்கிட்டேந்து தங்கத்த அரசாங்கமே பிடுங்கறது காலகாலமா நடக்குதுன்னு நமக்கு தெரியாதுங்க!
ரோமாபுரில ஒரு ராசா இருந்தாராம். கஜானா காலின்னு அமைச்சருங்க சொல்ல, குருதைல ஏறி கெளம்பி நாட்டிலயே பெரிய்ய்ய கோயிலாண்ட போனாராம். 'சாமிக்கு எதுக்கு இவ்ளோ கோல்டு? ரிமூவு எவ்ரிதிங்கு அண்டு ப்ரிங்கு பேக்கு' ன்னு புடிங்கிட்டு போய்ட்டாராம்.
அதுவும் பத்தாம போவ, அவரு மக்களுக்கு குடுக்கிற தங்க காசுலயே தங்கத்த சொரண்டுனாராம். மக்கள் அந்த காசாலயே வரிப்பணம் கட்டச்சொல்ல, நிதியமைச்சரு தலைல துண்ட போட்டுகினு ஓஓஓஓஓஓன்னு அளுதாராம்!
பின்ன ஒரு காலத்துல அரசுக்கு பயந்து கதவு, நிலப்படிக்குள்ளல்லாம் சைனாக்காரனுங்கோ தங்கத்த ஒளிச்சு வச்சாங்கோ, ஆனாலும் மாட்டிகிட்டாங்கோ!
'இது..... ரொம்ப காலத்துக்கு முன்னேதான நடந்தது, இப்ப இல்லயே இல்லயே!'ன்னு கூவாதீங்கோ! மேல படிங்கோ!
1929 ல அமெரிக்க பொருளாதாரம் அடியோட சரிஞ்சி பெரும்பஞ்ச காலம்... வீட்டுக்கு வீடு அரசு புகுந்து 'தலைக்கு 180 கிராமு. அதுக்கு மேல ஒரு குந்துமணி பதுக்குனாலும் கொண்டேபுடுவன் படவா' என மிரட்டி எக்சஸ் தங்கத்தை புடிங்கிட்டு போனாங்கோ!!!!
1980கள்ல தென்னமெரிக்க நாடுகள்ல...
"விடுங்க பாசு, நாங்க என்ன கணக்கு காட்டியா தங்கம் வச்சிருக்கம்? நாங்கள்லாம் யாரூஊஊஊஊ?!!!" ங்கிறீங்களா!
சாரி பாசு, இந்தப்பதிவு ஒங்களுக்கில்லீங்க!

கருத்துகள்
கருத்துரையிடுக