ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது!
உலகெங்கும் இன்றைய கவலை அரசுகள் மக்களை (எல்லை தாண்டியும்) கண்காணிப்பது.
அரசு நம் தனிமனித சுதந்திர செயல்களை (privacy) கண்காணிப்பது சரியா தவறா என்ற விவாதங்கள் நாட்டுக்கு நாடு அனல் பறக்கிறது.
டி வி வரும்முன் குழந்தைகள் வாழ்வில் குழப்பமில்லை. மக்களும் நல்லவராய்.
டி வி வந்தபின் பெரியவர் தணிக்கையின்பின்பே சிறுவர் பார்க்கலாம் என்பதாய் ஏற்பாடு. டெக்னாலஜி வளர வளர குழந்தைகள் மற்றும் சுற்றம் மீதான நம் கண்காணிப்பும் அவ்வாறே.
இன்று நம்மில் எத்தனை பேர் சமுதாயத்தை / social network எனப்படும் நிகர் சமுதாயத்தை நம்பி நம் குழந்தைகளை இவற்றில் தனியே உலவ விடுவோம்?
நமக்கு நம் அளவில், நம் சமுதாய அளவில் கண்காணிப்பு அவசியமாகிறது. அரசுகளுக்கும் அவ்வாறே ஆனால் அவற்றின் எல்லை பெரிது.
The biggest difference is, பெற்றோரின் கண்காணிப்பு அன்பு, அக்கறை, அறம் சார்ந்தது. அரசுகள் அவ்வாறல்ல :-)
தொழில்நுட்ப வளர்ச்சி அவசியமென்றால் 'ஒப்பனை அறையில் ரகசிய கேமராவை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பமும், பதிவிடுவதை தடுக்கும் தொழில்நுட்பமும்' அவசியம்தான்.
கங்காணி யார்? எதற்காக? என்ற கேள்வி இன்று உலகம் முழுதும் விடையின்றி அலைகிறது.
ராவணனுக்கு பத்து தலை; ராமன் வேலை சுலபமாச்சு.
இங்கு வெட்டினால் அங்கு முளைக்கும்.ய, அங்கு வெட்டினால் வேறெங்கோ முளைக்கும் அரசுகளை எத்தனை பேர் எப்படி...?
எதிர்காலத்திற்கு நம்மை விரைவாய் இட்டுச்செல்ல காடு கழனி அழித்து ஆலைகள் சாலைகள் செய்து உணவு பஞ்சமாகிப்போய் இந்த சாலைகள் வழியே வெளிநாட்டு தானியங்கள் விரைந்து ஆலை சேர்ந்து, ப்ளாஸ்டிக் பைகளில் அடைபட்டு, சுருங்கிய வயிறை சுமக்கும் கைகளில் விரைந்து சேர்ந்து பசியாற்றி... "பார்! எதிர்கால பஞ்சம் தீர்ப்பதற்காகவே நாம் அன்றே தீட்டிய திட்டங்களால்தான் இது சாத்தியமானது" என அப்போது ஆளும் அரசுகள் மார்தட்டுவதற்கும், நம் தினசரி வாழ்வு கண்காணிக்கப்படுவதற்கும் பெரிதாய் வித்தியாசமில்லை.
ஏற்கனவே தனியார் கங்காணிகள் நம் அசைவுகளை கண்காணிக்கின்றனர். அரசின் திட்டம் அவர்களுடனான தொழில்நுட்ப யுத்தம். யுத்தமென்றால் சேனை நாமே...
'இது யுத்தமல்ல. எதிர்கால தொழில்நுட்பங்களை சோதனை செய்து பார்க்கிறோம். அவ்வளவே' என அவர்கள் சொல்லலாம். சோதனை சாலை யாருடையதாய் இருந்தால் என்ன எலிகளுக்கு? எலிகளும் நாமே!
அடுத்தமுறை 'நான் இப்போது ஆஸ்திரேலியாவில் கங்காருகளுடன் குதித்துக்கொண்டிருக்கிறேன்' என நிகர் உலகில் லைவ் / ஸ்டேட்டஸ் போட்ட அடுத்த நொடியில் உங்கள் இந்திய வீட்டின் முகவரி மற்றும் அது பூட்டிக்கிடக்கிறது என்ற தகவல் ஒரு திருடனுக்கு யார் மூலமோ அனுப்பப்படலாம். நீங்கள் ஊர் / வீடு திரும்புவதற்குள் உங்கள் வீடு துடைத்து எடுக்கப்படலாம்!!
தீதும் நன்றும் பிறர்தர வாரா!

தாெ ழில் நு.ட்..ப்...ப....ம் நீண்ட நெடும் பயணம் செல்ல இயற்கை ஒருபாேதும் அனுமதிக்காது.பரிணாம வளர்ச்சியில் அசுர வளர்ச்சி ஏற்படாமல் தடுக்க 'டெலாேமர்' களையும் 'டெலாேமரேஸ்' களையும் படைத்ததைப் பாேல மனிதன் இயற்கையின் வரம்பை மீறி அசுரனாக மாறிவிடாமல் இருக்க ஒரு ஏற்பாடு செய்ய மறந்திருக்காது:பூரணமாக நம்புவாேம்! நமது பங்கையும் ஆற்றுவாேம்!!
பதிலளிநீக்குHOPE is a good thing; the only thing!
பதிலளிநீக்குAs always, good things never die :-)