ஆழத்தின் அடி ஆழம் அறியா நினைவு அடுக்களில் சிக்கி மீண்டு ஊற்றெடுத்து பொங்கிப்பெருகி ஓசையற்று வழிந்தோடும் அடர்மௌனம் என் கண்களின் வழியே.
இடையறாது வழியும் என் மௌனத்தின் ஓசை கேட்டு திறக்கும் சில விழிகளேனும்.
ஓசைகளற்ற ஓசை வழியே விழி நிறைந்து உள்ளிறங்கி அவ்வுள்ளே உறங்கிக்கொண்டிருக்கும் மௌனத்தை தட்டியெழுப்பி கதைகள் பல பேசும் மௌனம், மௌனமாகவே.
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த மௌனம்... முழுதாய் உள் நிறுத்த காது பொத்தி கண்கள் மூடி இதழ்களும் மூடி மூச்சு முட்ட மகிழ்வாய் தவிக்கும் பேரன்பு.
அன்பின் தரிசனம் சுடராடும் விழிகள் வழி உலகெங்கும் தீட்சை பெறும், மோட்சம் பெறும்; மௌனம் எனக்கொரு போதிமரம்.
கருத்துகள்
கருத்துரையிடுக