முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சரஸ்வதி என்ன ஆனாள்?

சரஸ்வதி - ஒரு நதியின் மறைவு
 என்ற நூலை  சில ஆண்டுகளுக்குமுன் வாசித்தேன். ஒரு நதி மறையுமா? எவ்வாறு அது சாத்தியம்? அது ஒரு திடீர் நிகழ்வா அல்லது தொடர்ந்த ஒன்றா? என்ற கேள்விகளாலும், வேதங்களில் மிக உயர்த்தி சொல்லப்பட்டிருக்கும் சரஸ்வதி நதியின் மறைவைப்பற்றியது என்பதாலும் நான் அந்நூல் நோக்கி ஈர்க்கப்பட்டேன் என்பதே உண்மை. மிஷல் தநினோ என்ற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் ஒருவரின் கடும் முயற்சியால் விளைந்த நூல் இது. இந்நூல் எவ்வாறு சிந்து சமவெளி நாகரிகம் என்பது உண்மையில் சரஸ்வதி நதி நாகரிகம் என்பதையும் அது எவ்வாறு ஹரப்பாவிலுருந்து மேற்கே குஜராதின் கட்ச் வளைகுடா (Rann of Kutch) வரை பரவியிருந்த்து என்பதையும் பின்னானில் எவ்வாறு அது கங்கை சமவெளியை நோக்கி நகர்ந்தது என்பதையும் ஏராளமான வரைபடங்களுடனும் வரலாற்று சான்றுகளுடனும் தெளிவாக விளக்குகிறது. வியப்பூட்டும் வகையில் நம் மரபு சார்ந்த விவசாயம் எவ்வாறு 5000 ஆண்டு தொடர்புடையது என்பதையும் இந்தியாவில் இன்றும் வழக்கில் உள்ள வாழ்வியல் முறைகள் எவ்வாறு சரஸ்வதி நதி சார்ந்த நாகரிகத்தின் தொடர்ச்சியே என்பதையும் தெளிவாக்குகிறது. ஆரிய படையெடுப்பு என்பதே ஒரு மாயை என்பதும் அது மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்களின் 'கண்டுபிடிப்பு' என்பதையும் தெள்ளதெளிவாக விளக்குகிறது. இன்று கூட ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் 40/50 அடி ஆழம் தோண்டினால் நன்னீர் கிடைப்பது புதையுண்ட சரஸ்வதி நதியில் இருந்துதானாம்!

இத்தனைக்கும் மேலாக இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த மாபெரும் நதியின் மறைவுக்கான காரணங்கள் இன்றளவும் பொருந்தும் என்பதையும் எவ்வாறு நாம் அத்தகைய ஒரு நிலைக்கு வெகு துரிதமாக சென்று கொண்டிருக்கிறோம் என்பதையும் முன்வைக்க அந்த நூலில் இருந்து ஒரு சிறு பகுதியை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்:
பக்கம் 239 - 240 ” கடந்த காலத்தில் இருந்து ஒரு பாடம்
"
நமக்குத்தெரிந்தவரை, சில நூற்றாண்டுகளில், அந்த பிரம்மாண்டமான நதி இறந்துவிட்டது. இந்த வார்த்தை மிக முக்கியமானது. ஏனென்றால் நதியும் உயிருள்ள ஒன்று; அதுவும் பிறந்து, வளர்ந்து, தொய்வடைந்து, மறைந்து போகிறது என்பதை நாம் சில நேரங்களில் மறந்து விடுகிறோம். இப்படியான ஒரு நிகழ்வு மீண்டும் நம் கண் முன்னே அரங்கேறுகிறது; கங்கை, யமுனா, பிரம்மபுத்ரா உட்பட இமய மலைப்பனியாறுகளால் நீர் வரத்துப்பெறும் நதிகள் அனைத்தும் பெரும் அபாயத்தை சந்திக்கவிருக்கின்றன. ஆண்டு முழுதும் நீர் கிடைப்பதற்கு காரணமான அந்த பனிப்பாறைகள் அதி வேகமாக உருகி வருகின்றன. இன்னும் முப்பதிலிருந்து ஐம்பது வருடங்களுக்குள் அந்த நதிகள் அனைத்துமே மழையை நம்பியிருக்கும் ஆறுகளாகக்குறுகிவிடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்த தெற்கு ஆசியாவிலும் இது ஏற்படுத்தப்போகும் சங்கிலித்தொடர் தாக்கத்தை நினைத்தே பார்க்க முடியாது. 'உலகளாவிய' பிரச்னைகளில் முழுவதுமாகத் தம்மை பரபரப்புடன் ஈடுபடுத்திவரும் நமது ராஜதந்திர மேதைகளுக்கு, எவ்வளவு பெரிய அபாயம் வெகு அருகில் வந்து நின்றுகொண்டிருக்கிறது என்பதை யோசிக்கக்கூட முடியாது.
சரஸ்வதி நதியின் மறைவுக்கும் கங்கை, பிரம்மபுத்திரா நதிகளின் மறைவுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. முதலாவது இயற்கை நிகழ்வு (பஞ்சாப், ஹரியானாவில் பெருமளவுக்கு காடுகளை அழித்தது சட்லெஜ், யமுனை நதிகளின் மாற்றத்துக்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்றாலும் அது பெருமளவுக்கு இயற்கை நிகழ்வுதான்). ஆனால், இரண்டாவது முழுக்க முழுக்க மனிதர்களால் இழைக்கப்படுவதுதான். நமது அதீதச் செயல்பாடுகள் புவியைச்சூடாக்கி பனிப்பாறைகளையும் பாளங்களையும் அதி வேகமாக உருகச்செய்து வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இன்னும் சில ஆண்டுகள் நம் கையில் இருப்பதாக, சூழலியலாலர்களில் மிகுந்த நம்பிக்கைவாதிகளாக இருப்பவர்கள் சொல்கிறார்கள். ஆனால், அதற்கு பிராந்திய உலக அதிகார மையங்களின் தைரியமான, ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாடு மிகவும் அவசியம். அங்குதான் நம் நம்பிக்கைகள் மிகப்பெரிய கேள்விக்குறிகளை முட்டிக்கொண்டு நிற்கின்றன.

3000 வருட கால கங்கைச்சமவெளி நாகரிகம் முடிவுக்கு வரும் நூற்றாண்டாக 21 ஆம் நூற்றாண்டு இருக்கக்கூடும். என்பதை நம் பயணத்தின் எதோ ஓர் இடத்தில் மறந்துவிட்டிருக்கிறோம். சிறு சிறு நீரோடைகள் தாக்குப்பிடித்து நிற்கக்கூடும் என்றாலும் இன்றைய மக்கள் தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவற்றால் நிச்சயம் முடியாது. கிராமப்புறங்களுக்குத திரும்புதல், புதிய குடியிருப்புகளை உருவாக்குதல், புதிய பெயர்தல் என பிற்கால ஹரப்பா வாசிகளுக்கு மாறும் சூழல்களுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. ஆனால், கங்கையின் வாரிசுகள் எங்கு புலம் பெயர முடியும்?
"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...