முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அறம் செய விழை

அறம் பொருள் இன்பம். அன்பும் அறனும் உடைத்தாயின்... அறவழி. அறநெறி. அறம்னா என்னங்க? நீதி நேர்மை நியாயம் மட்டுமா அதையும் தாண்டியா? அறம் செழிக்குமா? அது என்ன பயிரா? 'இந்தக்காலத்து பசங்க ரொம்ப கெட்டுப்போய்ட்டாங்க' என்பது எந்தக்காலத்திலும் சொல்லப்படும் ஒன்று. நம் குழந்தைகள் தூரலில் நனைந்தால்கூட பொறுக்காது உடனே துண்டெடுத்து தலைதுவட்டும் நாம் அவர்கள் மனதைத்துவட்ட வேண்டாமா? ஊடக வதை என்பது சமையல் பாத்திர நீரில் மிதக்கும் உயிருள்ள தவளை மாதிரி.  நம்மைப்பிணைக்கும் குடும்ப சங்கிலி நாம் காண்பதையும் கேட்பதையும் சங்கிலிக்கண்ணிகளுக்கு கடத்தாமல் போகுமா? நம்மில் எத்தனை பேர் யாரும் பார்க்காதிருக்கும்போதும் தவறுகள் செய்யாமலிருக்கிறோம்? நியாயப்படுத்தும் போர்வையில் நாம் வைக்கும் விளக்கங்கள் நம் குழந்தைகளின் வேர்களையும் பாதிப்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம்? என்னுடன் வெளி நாட்டில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் இரவுப்பணியில் இருந்த என் மதிப்பிற்குரியவர் ஒருவர் நள்ளிரவில் என்னை 'பொருட்கள் வைப்பு' அறைக்கு அழைத்தார்.  'எதற்கு இந்நேரத்தில்?...

ஆடுவமா!

அன்பையும் அறனையும் 'உடைத்த' இவ்வாழ்க்கையில் விளைந்தவரிடம் பண்பையும் பயனையும் தேடுபவன் ஏமாந்து போவான்.  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று 3000 ஆண்டுகளுக்கு முன்னே உலகுக்கு உரக்கச்சொன்னவர்கள் இன்று 'யாவ'ரிலும் வேற்றுமை நோக்கி அனைத்து (மரியாதை / ஆணவ / அதிகார) கொலைகளையும் செய்து / கடந்து / மறந்துபோகின்றோம். நாலாம் தலைமுறையை வம்புக்கிழுத்த முண்டாசுக்காரனையும் ஓட ஓட விரட்டியிருப்போம் இன்று இருந்திருந்தால், இன்னொரு யானையிடம். அறம் செய்ய விரும்பாதவர் அன்றுமிருந்ததால்தானே அவ்வையும் அவ்வையானாள்! அவளின் துயரம் இன்றும் எம் எவ்வைக்கும் (தங்கைக்கும்) உண்டு.  நள்ளிரவில் என்று ஒரு பெண் அச்சமின்றி நடமாட முடிகிறதோ அன்றே நமக்கு உண்மையான சுதந்திரம் என்ற கிழவன்...பாவம்...அவனை விடுங்கள்...அவனது கிழக்கனவு நமக்குதவாது. நமக்கு பசியால் பகலில் சாலையில் மயங்கிய பேரிளம்பெண்ணை குடியன் வல்லுறவுகொள்வதை வெறுமனே வேடிக்கை பார்ப்பதற்கும், கந்துவட்டிக்கொடுமையில் நம் கேளிரை தீ தின்னுவதை தள்ளி நின்று படமெடுத்து மெய்நிகர் உலகில் பதிப்பதற்கும்தானே தேவை சுதந்திரம்... தேடி(க்)கண்டதையும் நித...

பெரியவர்க்குமான பேய்க்கதை!

என் வீட்டு மகிள மரத்தில் அது அமர்ந்திருந்த்து. எத்தனை நாட்களாய் என்று எனக்கு தெரியவில்லை. அதற்கும்தானாம். நெடு நாட்களாய் நான் என் தோட்டத்து செடி, கொடி, மரங்களோடும் பறவைகளோடும் உரையாடுவதை அது கவனித்துவந்ததாகவும், அவர்கள் எல்லோரும் 'இவன் ஆபத்தற்றவன்' என்று உறுதி கூறியதால்தான் அது தன்னை வெளிப்படுத்திக்கொண்டதாகவும் சொன்னது. அந்தப்பேய் தன் நெடுங்கதையை பல தவணைகளில் சொன்னதன் சாரத்தை நான் உங்களோடு இதோ பகிர்ந்துகொள்கிறேன். அது ஒரு புளிய மரத்து ஆவி. பன்னெடுங்காலமாய் வாழ்வை அனுபவித்து வாழ்ந்த கூட்டமாம். சிறுகச்சிறுக அவர்களின் நிலப்பரப்பு குறைந்துகொண்டே போயிற்றாம். எப்போதென்று தெரியாத ஒரு பொழுதில் அவர்கள். என் ஊருக்கு வெளியே உள்ள ஒரு பெருவழித்தடத்து ஓரத்தில் வசிக்கத்துவங்கினராம். இதெல்லாம் அது செவிவழியாக அதன் உறவுகளிடமிருந்து அறிந்த கதையாம். அந்த வழித்தடங்களில் குதிரைகளும் மாடுகளும் இழுக்கும் வாகனங்கள் ஓடத்தொடங்கியபோது அதன் முன்னோர்கள்  மகிழ்ந்தனராம், சாணம் மழையில் கரைந்து அவர்களை அடைந்ததும் உண்டான இனிய மாற்றங்களை கண்டபின்பு.  அமுதம் கிடைத்த மகிழ்ச்சியில் பன்னெடுங்கா...

அவரவர் கடவுள் அவரவர் நிறத்தில்

அவரவர் கடவுள் அவரவர் நிறத்தில். பிடித்ததெல்லாம் பால் வெண்மை. பிடிக்காததெல்லாம் கரு கருமை.  வெண்மை நன்மை. கருமை தீமை என்ற எண்ணப்பிழை  என்றுருவாச்சோ... கருப்பு என்றொரு வண்ணம் வானவில்லில் இல்லை என்று யார் சொன்னது? வெண்மை ஏழு வண்ணமாகலாம், ஆனால் வெண்மையின் எல்லையென்னவோ கருமைதானே! ஆதியறியமுடியாதவரைதான் கருஞ்சுழி (black hole). அறிந்த நொடியில் பயமகன்றால் மாற்றிடுவோமே அதையும் வெண்சுழியாய்! கருமையில்லாத இரவில்  உறங்கத்தவிக்கும் விழிகளில்மட்டும்  கருமையிருந்தாலும் விழியுறங்கும்... இருள் பயம் உயிர் பயம், ஆதி பயம். பகலில் வேட்டையாடியவன் இரவுக்கு இரையானதால்  வந்த அச்சம். அந்த அச்சத்தின் எச்சம்  இன்றுவரை நீளும் நம் மனதில,  தோலின் நிறம் வழியே, மாறா பய வழியே. கண் கண்டு புத்தி தெள்ளுரைத்தால்  மட்டுமே பயமின்றி வாழப்பழகினோம். காரிருளில் காண இயலாத பூதங்களை உலவவிட்டோம், காக்கும் கடவுளரையும்தான். இங்கு இப்படியிருக்க காடேகும் உயிரனைத்தும் அஞ்சுவதென்னவோ  வெண்மை வெளிச்சத்துக்கும் அதன் ஒளியில் இன்றுவரை வேட்டையாடும் நமக்கும்தான். ...

நான் மெர்சல் ஆன கதை!

ஒரு சிறுவனின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற மெர்சலுக்கு அழைத்துச்சென்றேன்... படம் ஆரம்பித்ததில் இருந்தே willing state of disbelief க்கு என்ன முயற்சி செய்தாலும் முடியவில்லை. ஒரு கதைநாயகன், நிஜ நாயகனாக எக்கச்சக்கமாக முயற்சி செய்திருக்கிறார், சினிமாவில்... சீடன் குருவுக்கு வணக்கம் செலுத்த படத்தில் சில காட்சிகளை ஒதுக்கியிருந்தால் மகிழலாம், மொத்தப்படத்தையுமா அட்லீ?! மாயாஜாலம் என்கிற கண்கட்டி வித்தையை கருவாகக்கொண்ட ஒரு படத்தில் ஒரே ஒரு 'ஆகா' விநாடியாவது (that vow moment) வருமா என்ற எதிர்பார்ப்பு நிகழவே இல்லை, க்ரிஸ்டோபர் நோலனை அட்லி அவ்வப்போது சீண்டினாலும்! சமீபத்தில் ட்ரென்டிங்கில் இருக்கும் ஏராளமான நிகழ்வுகளுடன், எலக்ட்ரானிக் கைதட்டல்களும் விசில்களும் நிரம்பி வழிய, ஏ ஆர் ரகுமானின் 'இவன் தலைவன்!' என்கிற ரீதியிலான இசை முயற்சி...அசைக்கவில்லை. தமிழன் உலகம் எல்லாம் ஆளப்போகிறான், வேட்டிதான் கெத்து என்று அந்நியருக்கும் அயலூருக்கும் பாடம் புகட்டுதல், மதுரை, வாடிவாசல், எம் ஜி ஆர், பாரீஸ், மேஜிக், மருத்துவ கொள்ளை என்று தளபதி இறங்கி அடிக்க முயன்றாலும் மனதில் நி...

அவரவர் உணவு...

தாவர செல்கள் தமக்கு வேண்டிய உணவை தாமே உற்பத்தி செய்து பெருகும். விலங்கின் செல்கள் தமக்கு வேண்டிய உணவை தாமே உற்பத்தி செய்ய இயலாதவை. உணவுக்கு தாவரங்களையே சார்ந்திருக்கவேண்டிய படைப்பு... (இங்கு விலங்கு என்பது நிற்பது, நடப்பது, பறப்பது அனைத்தையும் அடக்கிய சொல்). இந்த இரண்டுக்குமே உயிர்வாழ அடிப்படைத்தேவை நீர். தாவரங்களுக்கு நீர் கிட்டவில்லையென்றால் இறந்துபோகும்.  விலங்கிற்கு நீர் கிட்டவில்லையென்றால் தேடிப்போகும், தொலைவு ஒரு பொருட்டல்ல.  இடம்பெயர இயலா தாவரங்கள் உணவின் வழியே (விலங்குகளுக்கு உணவாகி விலங்கின் எச்சம் வழியே) நீர்நிலை நோக்கி நகரும். அதன் சந்ததி நீளும். சாகாகாரமும் (vegetarianism)    சகலகாரமும் (non vegetarianism) தேவையினால் உண்டாகி, விருப்பத்தினால் மாறி பின்பு தேவைக்கும் விருப்பத்திற்கும் இடையில் ஊடாடிக்கொண்டிருக்கிறது.  இந்த பழைய ஏற்பாட்டின்படி விலங்குகளுக்கு உணவளித்த தாவரங்கள், விலங்கு வழி பரவிப்பெருக தாவரங்களும் விலங்குகளும் ஒன்றோடொன்று ஒத்திசைந்து வாழ்ந்தன.  என்றேனும் தாவரங்கள் கிடைக்காவிட்டால் பசி தாளாது மிருக...

வானம் எனக்கொரு போதிமரம்...

ஒரு இயற்கை விவசாயியின் கடிதம் - 02 -இறுதிப்பகுதி

ஒரு இயற்கை விவசாயியின் கடிதம்... - தமிழில்:  [பாஸ்கர் சாவே இந்தியாவின் முன்னோடி இயற்கை வேளாண் வல்லுநர்களில் ஒருவர். இவர் பசுமைப் புரட்சியின் தீமைகளை விளக்கி பேரா. மா.சா. சாமிநாதனுக்கு எழுதிய திறந்த மடல்.] (சென்ற இதழ் தொடர்ச்சி...) வேதியியல் உரங்களாலும் அதிகரிக்கப்பட்ட பணப் பயிர்களாலும் தண்ணீர்த் தேவை மிக கடுமையாக அதிகரித்தது. இமயத்தில் இருந்து உற்பத்தியாகும் ஐந்து நதிகளால் வளமாக்கப் பட்ட பஞ்சாப் மாநிலத்தில் 1952-இல் பக்ரா நங்கல் அணை கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பெரிய மற்றும் நடுத்தர அணைகள் சர்தார் சரோவர் என்னும் மிக மிகப் பெரிய அணை கட்டும் வரையில், இந்தியா முழுவதும் கட்டப்பட்டன. ஆனால் இப்பொழுது நமது அரசு 560000 கோடி செலவில் இந்தியா முழுதும் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்கும் திட்டத்தை ஆய்ந்து கொண்டுள்ளது. இது துக்ளக்கின் தன்னைத்தானே மிக உயர்வாக எண்ணி கொள்ளும் கிறுக்குத் தனமான செய்கைக்கு ஒப்பான, எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொள்ளாத ஒரு திட்டம்! உலகில் தென் அமெரிக்காவுக்கு அடுத்த படியாக அதிக அளவு மழை பெரும் நாடு இந்தியா. ஆண்டு சராசரி கிட்டத்தட...

புரியாத புதிர்

வானேகும் பறவைகளின் இறகுகள்வழி வழியும் நிலப்பரப்பை இரவும் பகலும் இடைப்பட்ட காலத்திலும் காற்று துடைத்துச்சென்றுகொண்டே இருந்தது பன்னெடுங்காலமாய். சுத்தமான பூமியில் வந்தன சென்றன அனைத்தும் விட்டுச்செல்லவில்லை தம் சுவடுகளெதையும். எங்கோ நடந்த பெரும்பிழையில் முளைத்துவந்த கூட்டமொன்று கிண்டிக்கிளறிக்கிழங்கெடுத்து உண்டு உறங்கி பல்கிப்பெருகி கைக்கெட்டிய தூரம் வரை களைத்துப்போட்டு களைப்பறியாது மேலும் மேலும் ஏனைய புவி வாழ் நல்லினங்களை ஒழித்து 'தாம்', 'தாம் மட்டுமே' புவிக்குப்போதும் என்று சுயமுழக்கமிட்டு எங்கெங்கும் அழிக்க இயலா எச்சங்களிட்டு இருப்பதையெல்லாம் சுரண்டுவதை அமைதியாய் வேடிக்கை பார்க்கிறது இயற்கை.  நமது நாட்கள், வருடங்கள், வாழ்நாட்கள் துகளினும் துகள் அதன் கணிப்பில். இயற்கையறியும் அதன் மாறா நியதி; 'எதுவும் கடந்து போகும்'!  நம் கால்கள் பட்டு காணாமல் போன உயிர்களனைத்தும் மீண்டு முளைக்கும், நாம் மட்டுமே இல்லாதிருப்போம். ஏனெனில் இயற்கை ஒருமுறை செய்த தவறை மறுமுறை செய்யா! (சந்தேகமுள்ளோர் டைனோசரை அறியார்!) அது வரையில், தம் இனம் அழிய தலைமுறை தலைமுறையாய் தா...

ஒரு இயற்கை விவசாயியின் கடிதம் - பகுதி 1

[பாஸ்கர் சாவே இந்தியாவின் முன்னோடி இயற்கை வேளாண் வல்லுநர்களில் ஒருவர். இவர் பசுமைப் புரட்சியின் தீமைகளை விளக்கி பேரா. மா.சா. சாமிநாதனுக்கு எழுதிய திறந்த மடல்.] அன்புள்ள திரு சுவாமிநாதன், நான் ஒரு எண்பத்து நான்கு வயதான இயற்கை/உயிர்ம வேளாண்மை செய்யும் விவசாயி. அறுபது வருடங்களுக்கு மேலாக விதம் விதமான உணவுப் பயிர்களை சொந்தமாக உற்பத்தி செய்த அனுபவம் உடையவன். இத்தனை வருடங்களில் நான் பல விதமான வேளாண்மை உத்திகளை, ஐம்பதுகளில் வேதியல் வேளாண்மை உட்பட (அதன் கெடுதல்களை உணரும் வரை), செய்து பார்த்து இருக்கிறேன். அதனால்தான் நான் இயற்கையோடு ஒத்திசைந்த உயிர்ம வேளாண்மை மூலம் மட்டுமே இந்தியா தன் மக்களுக்கு ஏராளமான அதே நேரத்தில் முழுமையான் உணவு பொருட்களை தற்சார்புடன் வழங்க முடியும், மக்களின் அடிப்படை தேவைகளான ஆரோக்கியம், சுய மரியாதை, அமைதி ஆகியவற்றை பூர்த்தி செய்யவும் உதவும் என்று உறுதியுடன் கூறுகிறேன். திரு சுவாமிநாதன் ஆகிய நீங்கள், ‘இந்திய பசுமை புரட்சியின் தந்தை’ என்று கருதப்படுகிறீர்கள். இந்த பசுமை புரட்சி, வேதியல் விவசாய பொருட்களை பெரு வெள்ளம் போல் இந்தியாவுக்குள் வரவழைத்து நமது...