பிடித்ததெல்லாம் பால் வெண்மை. பிடிக்காததெல்லாம் கரு கருமை.
வெண்மை நன்மை. கருமை தீமை என்ற எண்ணப்பிழை என்றுருவாச்சோ...
கருப்பு என்றொரு வண்ணம் வானவில்லில் இல்லை என்று யார் சொன்னது? வெண்மை ஏழு வண்ணமாகலாம், ஆனால் வெண்மையின் எல்லையென்னவோ கருமைதானே!
ஆதியறியமுடியாதவரைதான் கருஞ்சுழி (black hole). அறிந்த நொடியில் பயமகன்றால் மாற்றிடுவோமே அதையும் வெண்சுழியாய்!
கருமையில்லாத இரவில் உறங்கத்தவிக்கும் விழிகளில்மட்டும் கருமையிருந்தாலும் விழியுறங்கும்...
இருள் பயம் உயிர் பயம், ஆதி பயம். பகலில் வேட்டையாடியவன் இரவுக்கு இரையானதால் வந்த அச்சம். அந்த அச்சத்தின் எச்சம் இன்றுவரை நீளும் நம் மனதில, தோலின் நிறம் வழியே, மாறா பய வழியே.
கண் கண்டு புத்தி தெள்ளுரைத்தால் மட்டுமே பயமின்றி வாழப்பழகினோம். காரிருளில் காண இயலாத பூதங்களை உலவவிட்டோம், காக்கும் கடவுளரையும்தான்.
இங்கு இப்படியிருக்க காடேகும் உயிரனைத்தும் அஞ்சுவதென்னவோ வெண்மை வெளிச்சத்துக்கும் அதன் ஒளியில் இன்றுவரை வேட்டையாடும் நமக்கும்தான்.
இந்த மரபின் பிழை நம் கருநிற இறை மட்டுமா!
(Image : Creative Commons)
கருத்துகள்
கருத்துரையிடுக