முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தாய்க்கிழவியும் சபிக்கப்பட்ட நதியும்.

சூர்ப்பனகையின் மூக்கு அறுபடுவதற்கு முன்னால் சீதையின் இருப்பு ராவணனுக்கு தெரியாது. மூக்கு அறுபட்டபின் சீதையின் இருப்பு ராமனுக்கு தெரியாது. சீதை தொலைந்தபின் அனுமன் வழி மீட்புப்பாலம் அமைக்கும் வரை சீதையின் கற்பு ராமனுக்கு தெரியாது. ராவணன் அறிந்த சீதையின் கற்பு, ராம நாட்டு மக்களுக்கும் தெரியாது. அறுபதினாயிரம் மனைவியர் கொண்ட தசரதனின் ராமன், சீதையற்று இருந்த காலத்தில் அவனது கற்பு பற்றி கேள்வி கேட்காத ராம நாட்டு மக்கள், சீதையை கண்டபின் அவளது கற்பு பற்றி கேள்வி எழுப்பியபோது "கிடக்கிறார்கள் இந்த மட மக்கள். நானிருக்கிறேன் துணையாய்!' என இறைமானுடம் ஏன் அவள் கரம் பிடித்து தீயுள் நுழையவில்லை என்பது யாருக்கும் தெரியாது.  அனைத்தும் அறிந்திருந்த தீ சீதையை திருப்பித்தந்த பின்னும் அவளது கற்பை சந்தேகித்த சில மக்களை தண்டிக்காது, சூலுற்றிருக்கும் சீதையை ராமன் வனம் போகச்சொன்னது ஏன் என்பது சீதைக்கும் தெரியாது. அவளை கானகத்தில் விட்டு திரும்பிய லக்‌ஷ்மணனுக்கும் தெரியாது. குழந்தைகள் பிறந்ததோ,  நிகர்-ராமர்களாக வளர்ந்ததோ, ராமனின் யாகக்குதிரையை  கானகத்தில் அவர்கள் கட்டி வைத்ததோ ராமனுக்கு தெரியாது. தன் குழந

சொல்!

  சொல்லின் மூலம் எது? உணர்வு.  உணர்வின் வெளிப்பாடாகவே சொற்கள் சிதறிக்கிடக்கின்றன நம்மைச்சுற்றி. உணர்வில் தோய்ந்த சொற்கள் மனிதர்களை சேர்க்கும், உடைக்கும், இணைக்கும், பிரிக்கும், இன்னும் என்னவெல்லாமோ செய்யும். அதன் ஆற்றல் அது ஊறிய உணர்வில் இருந்து கிடைப்பது. சேர்த்து, உடைத்து, இணைத்து, பிரித்து என செயல் எதுவென்றாலும் அத்தனைக்கும் வலு சேர்க்கும் உணர்வுகளின் உறைவிடம் என்னவோ சொற்களற்ற அடர்மௌனம்தான். அமாவாசை நிலவு தந்த இருள் கப்பி போல, உணர்விலிருந்து வெளிப்படப்போகும் சொற்கள் அனைத்தையும் கவ்வியிருக்குது அடர்மௌனம், சுண்டப்பட்ட துப்பாக்கியின் குண்டுகள் புறப்படும் முன்னான மௌனம் குண்டுகளை கவ்விக்கொண்டிருப்பது போல. ஒரு விதத்தில் சொற்களும் கருந்துளைகள் போன்றவையே (Black Holes). அடர்மௌனத்திலிருந்து வெடித்து வெளிப்பட்டு குண்டு போல சொல்லொன்று உள் நுழைந்து தசையறுத்து உள்வெடித்து வலி தந்து உள்ளனைத்தையும் தகர்த்து தன்னுள்ளே இழுத்துக்கொள்ளும். இது ஒருபுறம் என்றால், மௌனம் அணிந்த பார்வையொன்றே ஓராயிரம் சொற்கள் போல வாழ்வின் நம்பிக்கையை நீட்டிக்கும் இன்னொருபுறம் மௌனமாய். சொற்களற்ற, ஏன், மொழிகளே அற்ற உலகில் வன்ம

பேரை சொன்னாலே சும்மா அதிருதில்ல?!

  "உன் அழகு மாசு மருவற்ற உன் சருமத்தில்" "உன் அழகு உன் முத்துவெண்மை பற்களில்" "உன் அழகு உன் கூந்தல் அடர்வில், நீளத்தில்" "உன் ஆற்றலுக்கு அழகு இந்த புட்டியில் அடைந்துகிடக்கும் கருமாந்திர மாவு!" "உன் தகுதிக்கு உன் குடும்பத்திற்கு அழகிய அனைத்து வசதிகளுடனும் கூடிய பெருநகர விளிம்பில் வீடு!' என கருத்த தோலுடைய மக்களிடம்  வெளிச்சம் போட்டு கூவி விற்கும் நிறுவனங்கள் நிசத்தில் விற்பவை என்ன தெரியுமா?! 'உன் சரும எண்ணெய் பிசுக்கும் மருக்களும் சுருக்கங்களும் உன் எதிரி' 'உன் வியர்வை உனக்கு எதிரி!' 'உன் நிறம் உனக்கு எதிரி!' 'உன் பல் பழுப்பு உனக்கு எதிரி!' 'உன் வீட்டு உணவு உனக்கு எதிரி!' 'உன் சிற்றூர் வசிப்பிடம் உனக்கு எதிரி!' "உனக்கு எதிரகளே இல்லாமல் ஆகவேண்டுமென்றால் நீ வணங்க வேண்டிய கடவுள் இதுதான்!" என நம்மை நமக்கே எதிரிகளாக்கி, எதிர்ப்பை ஒழிக்க அவை நம்மை வணங்கச்சொல்லும் அந்தக்கடவுள் பல வண்ண நிறங்களில் பளபளப்பான ஆடைகளில் வெவ்வேறு வடிவங்களில் ஆர்க்டிக் முதல் அண்டார்டிகா வரை வெளியெங்கும் பரவியிருக்

தணியுமா இந்த "தாகம்"?

1801 ஜூன் 16 ஒரு நோட்டீசு ஒன்று சிவகங்கை சீமையில் வெளியாகிறது, probably the first ever chain mail kind of message propagation the world has seen. அதன் சாரம்: "வெள்ளைக்காரன் எவன கண்டாலும் உதைத்து துரத்து. அடித்து நொறுக்கு. இந்த பூமி அவர்களுடையது இல்லை. இந்த நோட்டீசை உடனே பல பிரதிகள் எடுத்து அனைவருக்கும் பரப்பு. அப்படி செய்யத்தவறினால் கங்கைக்கரையில் காராம்பசுவை கொன்றவனை பீடிக்கும் பாபம் உன்னையும் பீடிக்கும். இந்த நோட்டிசை பிரதிகள் எடுத்து பரப்பும் ஒவ்வொருவரின் பாதங்களிலும் என் நெற்றி நிலத்தில் பட வீழ்ந்து வணங்குகிறேன். இப்படிக்கு, இளைய மருது மருது பாண்டிய சகோதரர்களில் இளையவர் செய்த இந்த பிரகடனம், இந்திய விடுதலைப்போரின் முதல் குரல். இந்த நோட்டீசுஒலித்தரங்க கோவில் சுவர்களிலும் ஒட்டப்பட்டதாம். புரட்சி வெடிக்க என்ன காரணம்? ஏன் சிவகங்கை சீமை? வீரபாண்டிய கட்டபொம்மனை பிரிட்டிஷ் அரசு கயத்தாறில் தூக்கிலிட்டு, கதை முடிக்க அவனது தம்பி ஊமைத்துரையை தேட, ஊமைத்துரை மருதுபாண்டியரிடம் தஞ்சம் புக, அவனை துரத்திய வெல்ஷ் துரைக்கு ஒரு மிகப்பெரிய இக்கட்டு. தனக்கு வேட்டை கற்றுக்கொடுத்த பெரிய மருது, வளரி வீ

துருவ யுத்தம்!

  நான்கு தட்பவெப்ப நிலைகள் மட்டுமே கொண்ட ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் இல்லாத இன்னும் இரண்டு நிலைகள் / காலங்கள் நம்மிடையே இருந்தது.  அந்த இரண்டும்தான் நம் வாழ்வியலை, இயங்கியலை (dynamics) அவர்களது போர்க்கறை படிந்த வணிகப்பேரரசுகளிடம் இருந்து வேற்றுமைப்படுத்தியது, மேம்படுத்தியது. இள வேனில், முது வேனில் என வசந்த காலத்தின் இரு பிரிவுகள் (அவர்களுக்கு வசந்த காலம் என்ற ஒன்று மட்டுமே),  முன் பனி, பின் பனி என குளிர் காலத்தின்இரு பிரிவுகள் (அவர்களுக்கு குளிர் காலம் என்ற ஒன்று மட்டுமே)  என தலா ஒவ்வொன்று நமக்கு கூடுதலாய், அதுதான் அந்த இரண்டு வேற்றுமைக்காரணிகளா? இல்லை! நம்முடனிருந்த நாட்டு மாடுகளும் கூட்டுக்குடும்பமும்தான் அந்த இரண்டு காலங்கள், காலமாகிப்போன காலங்கள். நாட்டு மாடுகள் நம்மோடு இருந்தவரையில் தற்சார்பு இருந்தது. நெல்லுக்கும் பயிருக்கும் வழிந்தோடி உயிர் நனைத்த நீர் கசிந்தோடி விளிம்பு நிலம் நனைத்து புல் வளர்த்து புல்லை உரமாய் பாலாய் தயிராய் வெண்ணெயாய் நெய்யாய் மாற்றி... உழைப்பைத்தரும் காளைகளாகவும் மாற்றிய அந்த பேராற்றல் உயிரினங்களை பால் வணிகமும் இயந்திர வணிகமும் கெமிகல் வணிகமும் வலைகள் விரித்

உயிர்ச்சூடு

  பூமி தொடா பிள்ளைப்பாதம் பூமி தொடாமல் வளர முடியாது. பூமி தொட்டு விரல் விரித்து பாதம் பதித்து பாதம் புதைத்து பாதம் நனைத்து பாதம் கொதித்து பாதம் குளிர்ந்து என உணர்வின் வழி உடலில் ஏறும் பூமியின் ஆதி அன்பு. பிள்ளை தவழ்ந்து கைகளூடாகவும் புவியன்பு சேர்த்து பின்பு நின்று நடந்து ஓடி தாவி பறந்து... பூமியில் மட்டுமே இயல்பாய் எளிதாய் எவர் உதவியுமின்றி கால் பதிக்க முடியும், வேறெந்த கோள்களிலும் இன்றுவரை வாய்ப்பில்லை. கனவுகளை விற்கும் தொழில்நுட்ப மேகங்களில் முகம் புதைத்து நனவு மறந்து  இறகு முளைத்ததாய் கற்பிதம் செய்து ஓரிடத்தில் நில்லாது ஆனால் பூமி தொடாது காலணிகளால் பாதங்களை காத்து கையுறை அணிந்து உணவருந்தி முக கவசமனிந்து சுவாசித்து முகமூடி அணிந்து வாழ்ந்து என இயல்பை தொலைத்து பூமியுடனான அத்தனை தொடுபுள்ளிகளையும் நிராகரித்து மதி மயங்கி... விழுந்து கண்விழித்து பார்த்தால்...   சுற்றிலும் முக கவசமணிந்த கையுறைகள் தரித்த முகங்களும் ஆடைகளற்ற இயந்திரங்களும் மட்டுமே சூழ்ந்திருக்கும். கவசங்களற்ற முகங்கள், அதன் நீட்சியாய் கையுறையற்ற விரல்கள், அதனுள்ளே பொதிந்திருக்கும் வெதுவெதுப்பான உயிர்ச்சூடு, அது ஆற்றும் வாழ்வ

அன்றொரு நாள் இங்கு ஒரு காடு இருந்ததே!

கானகத்திற்கு கதவுகளில்லை கானகத்திற்கு எல்லைகளில்லை ஆழிசூழ் மட்டுமல்ல காடுசூழ் உலகும்தான். ஆழியின் விளிம்பு வரை தளும்பும் நிலப்பரப்பில் பயிரேதுமின்றி மரமேதுமின்றி நாம் மட்டுமே வாழ்தல் சாத்தியமேயில்லை. இயற்கையின் கூட்டில் காடும் ஒரு உயிரினம்தான், நம்மைப்போல. என்ன ஒரு வேற்றுமையென்றால் காடுகள் நம்மை அரவணைப்பநு போல யாம் காடுகளை அரவணைப்பதில்லை. அப்படியே தப்பித்தவறி அரவணைத்தாலும் இது சிவப்பிந்தியர்களை போர்த்திய நச்சுக்கிருமிகள்_தோய்ந்த வெள்ளை அமெரிக்கர்களின் தானக்கம்பளி போல, பாரதப்போர் முடிந்து பீமனை ஆலிங்கனம் செய்த திருதராஷ்டிரனின் அரவணைப்பு போல 'கொல்லும்' அணைப்பாகத்தான் இருக்கிறது இதுவரையில். இந்த நிலை மாறவேண்டுமென இப்போது ஜப்பானில் நகர்ப்பூங்காக்களில் மரங்களிடையில் உணர்வுபூர்வமாய் நடக்கவும் மரங்களை நோகாமல் அரவணைக்கவும் அவற்றோடு உரையாடவும் மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள், தம் மக்களின் நோய் தீர்க்க! கனவில்கூட காடுகளை தழுவிக்கொண்டே உறங்குபவருக்கு மட்டுமே உயிரிருக்கும் வரை தாயின் அரவணைப்பு தொடருமாம் நினைவுகளின் வழியே. இதை விட அருமருந்து நம் உலகிலில்லை. கவனம் கொள்வோமா மனிதர்களே?:

Freeயா வுடு freeயா வுடு மாமே

  Freeயா வுடு freeயா வுடு மாமே வாழ்க்கைக்கு இல்ல க்யாரண்டீ... அவர் கல்லூரி பேராசிரியர். மனைவியும் ஏதோ ஒரு அலுவலகத்தில் பணி. ஐந்து வருடங்களுக்கு முன்பு கோவை சாய்பாபா காலனி எனப்படும் upmarket பகுதியில் ஒரு வெள்ளி இரவு உணவு முடித்து, சாலை ஆரவாரங்கள் சற்றே அடங்கிய நேரத்தில் walking கிளம்புகிறார்கள். அந்த பகுதியின் மெயின் ரோட்டில் இரவு ஒன்பது மணிக்கு சாலையோர நடைபாதையில் நடந்துகொண்டிருந்த தம்பதி மீது கட்டுப்பாடிழந்த இரு சக்கர வாகனம் மோதி மனைவி சம்பவ இடத்திலேயே பலி என அடுத்த நாளில் அவர்களது வாழ்வு ஊடக செய்தியாக மாறப்போவது அப்போது அவர்களுக்கு தெரியாது. சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு என் நணபனின் அப்பா இதே போன்ற ஊரடங்கிய ஒரு இரவில் நடைப்பயிற்சி சென்றவர் அங்கிருந்து நேராக ஐ.சி.யு போய் பின்பு யாரையும் பார்க்காமலே போய்விட்டார். அங்கும் ஒரு இரு சக்கர வாகனத்தில்தான் எமன் வந்தானாம். நேற்று இரவு எங்கள் பூர்வீக கிராமத்தில் கோவில் திருவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் இனிதே நடத்தி முடித்த களைப்பில் பத்து மணிக்கெல்லாம் ஊர் உறங்கிப்போயாச்சு. அந்த ஊரின் ஒரு மனிதரை தவிர. திருத்துறைப்பூண்டி, எங்கள் கிராமத