முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேரை சொன்னாலே சும்மா அதிருதில்ல?!

 



"உன் அழகு மாசு மருவற்ற உன் சருமத்தில்"


"உன் அழகு உன் முத்துவெண்மை பற்களில்"


"உன் அழகு உன் கூந்தல் அடர்வில், நீளத்தில்"


"உன் ஆற்றலுக்கு அழகு இந்த புட்டியில் அடைந்துகிடக்கும் கருமாந்திர மாவு!"


"உன் தகுதிக்கு உன் குடும்பத்திற்கு அழகிய அனைத்து வசதிகளுடனும் கூடிய பெருநகர விளிம்பில் வீடு!'

என கருத்த தோலுடைய மக்களிடம் 


வெளிச்சம் போட்டு கூவி விற்கும் நிறுவனங்கள் நிசத்தில் விற்பவை என்ன தெரியுமா?!



'உன் சரும எண்ணெய் பிசுக்கும் மருக்களும் சுருக்கங்களும் உன் எதிரி'


'உன் வியர்வை உனக்கு எதிரி!'


'உன் நிறம் உனக்கு எதிரி!'


'உன் பல் பழுப்பு உனக்கு எதிரி!'


'உன் வீட்டு உணவு உனக்கு எதிரி!'


'உன் சிற்றூர் வசிப்பிடம் உனக்கு எதிரி!'


"உனக்கு எதிரகளே இல்லாமல் ஆகவேண்டுமென்றால் நீ வணங்க வேண்டிய கடவுள் இதுதான்!"


என நம்மை நமக்கே எதிரிகளாக்கி, எதிர்ப்பை ஒழிக்க அவை நம்மை வணங்கச்சொல்லும் அந்தக்கடவுள் பல வண்ண நிறங்களில் பளபளப்பான ஆடைகளில் வெவ்வேறு வடிவங்களில் ஆர்க்டிக் முதல் அண்டார்டிகா வரை வெளியெங்கும் பரவியிருக்கும் பெருநுகர்வு கடவுள்.


இவரிடமும் எமனின் சித்திரகுப்தர்கள் போல கணக்கர்கள் உண்டு. 

டிஜிடல் யுகத்தில் பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றின் ஒவ்வொரு செயலும், மொத்த ஜாதகமமும் இந்த சித்திரகுப்தர்கள் கையில்.


இவர்களது லேட்டஸ்ட் கணக்கு பதிவேடு - நமர மக்களின் நில உடைமைகளின் டிஜிடல் பதிவேடு.


துண்டு துக்கடா நிலங்களில் 'எத்தை விதைத்தால் கட்டுக்கட்டாய் பணமறுக்கலாம் நம் விவசாயிகளிடமிருந்து' என ஏற்கனவே பெருநுகர்வு கடவுள் அருளின் படி உலகின் பெரும்பான்மையான நிலப்பரப்பு இந்த பதிவேடுகளில் ஏறியாச்சாம். எஞ்சியிருக்கும் பெருநிலப்பரப்பி்ல் இன்னமும் வளமாயிருப்பது நம் நிலங்கள்தானாம்.


எல்லாம் பதிவேட்டில் ஏறியபின் கூட்டலும் கழித்தலும் பெருக்கலும் வகுத்தலும் அந்த கடவுள் கண்ணசைவில் மட்டுமே நிகழுமாம்.


"70 ஏ விழுக்காடு" நிலங்களில் வாழ்வாதாரம் தேடிக்கொண்டே இருக்கும் "சிறுபான்மை" விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்துவது எளிது; பெரு நகரங்களின் கட்டுமான தொழிலுக்கும், கட்டுமான பாதுகாப்பு தொழிலுக்கும், இவர்களது சேவை அவசியம் தேவை ஏனெனில் இவர்கள் எல்லோரும் பயிர்க்கட்டுமானத்தில் Subject Matter Experts ஆம், எளிதாக cross training செய்துவிடலாமாம். 


கருத்த இந்த கூட்டத்தை வெளுக்கச்செய்ய நுகர்வுக்கடவுளின் பிரசாதங்களை இவர்களை வாங்க வைக்க பெரிய நகரங்களில் மட்டுமே வசதி வாய்ப்புள்ளதாம்.


"அப்போ அவர்களது நிலங்கள்?"


பெருநுகர்வுக்கடவுளின் உலகளாவிய தூதர்கள், கடவுளின் ஆணைக்கிணங்கி உலகைத்தொற்றியுள்ள பசி பிணி பஞ்சம் பட்டிணியை அறவே ஒழிக்க அவற்றக்கு எதிரான போரில் ஏராளமான பேரியந்திரங்களை களமிறக்கி இவர்களது நிலங்களை சமைத்து உலகுக்கே உணவு பறிமாறப்போகிறார்களாம் வேதி உப்பு நிறுவனங்களும் மருத்துவ உற்பத்தி நிறுவனங்களும் இந்த போரில் இவர்களுக்கு உறுதுணையாம். "என்ன இடர் வரினும் இவர்களுக்கு உதவுவோம்! பூமியின் நிலமனைத்திலும் உப்பைக்கொட்டி மனிதரகளை நன்றிக்கடன் பட்டவர்களாய் மாற்றுவோம்" என மார் தட்டி வேதி உப்பு நிறுவனங்களும், 'மனித உயிரை மட்டும் எப்பாடு பட்டாவது காப்போம், ஏனைய உயிர் அனைத்தையும் தேடித்தேடி கொல்வோம், அவை எங்கு ஒளிந்திருந்தாலும்' என மருந்து உற்பத்தி நிறுவனங்களும்...


"இந்த போரில் வெல்லப்போவது யார்?" என்றும் 

"யார் வென்றால் நமக்கு நல்லது?" என்றும் உலக ஊடகங்களில் கருத்துக்கணிப்புகளும் அனல் பறக்கும் விவாதங்களும் குற்றச்சாட்டுகளும் எதிர் குற்றச்சாட்டுகளும் sensational footage உம் என விளம்பர இடைவேளைகளுக்கிடையில் நாம் அனைவரும் படபடக்கும் இதயங்களுடன் நொடிக்கு நொடி update ஆகிக்கொண்டிருக்கையிலே எங்கோ வணிகம் தொடாத / வணிகத்தை புறக்கணித்த பெருந்தொலைவில் இன்னமும் எஞ்சியிருக்கும் சிலர் மட்டும் வேற்றுக்கிரக வாசிகள் போல ஊடக மறுப்பு கவசங்கள் அணிந்து நம் பூமியின் பழைய கடவுள்கள் அனைத்தையும் பத்திரமாய் பாதுகாத்துவருகின்றனராம். இவர்களில் ஒருவர் கடும் வறட்சிக்கிடையிலும் பொறுமையாய் சிரத்தையாய் பெரிய படகு ஒன்றை தன்னந்தனியே இழைத்து இழைத்து உருவாக்கிக்கொண்டிருக்கிறாராம். அவரது பெயர் நோவாவாம் (His name is Noah).


This, is THE story of the greatest migration in Earth whichever way you look at it...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்