கானகத்திற்கு கதவுகளில்லை
கானகத்திற்கு எல்லைகளில்லை
ஆழிசூழ் மட்டுமல்ல காடுசூழ் உலகும்தான்.
ஆழியின் விளிம்பு வரை தளும்பும் நிலப்பரப்பில் பயிரேதுமின்றி மரமேதுமின்றி நாம் மட்டுமே வாழ்தல் சாத்தியமேயில்லை.
இயற்கையின் கூட்டில் காடும் ஒரு உயிரினம்தான், நம்மைப்போல. என்ன ஒரு வேற்றுமையென்றால் காடுகள் நம்மை அரவணைப்பநு போல யாம் காடுகளை அரவணைப்பதில்லை. அப்படியே தப்பித்தவறி அரவணைத்தாலும் இது சிவப்பிந்தியர்களை போர்த்திய நச்சுக்கிருமிகள்_தோய்ந்த வெள்ளை அமெரிக்கர்களின் தானக்கம்பளி போல, பாரதப்போர் முடிந்து பீமனை ஆலிங்கனம் செய்த திருதராஷ்டிரனின் அரவணைப்பு போல 'கொல்லும்' அணைப்பாகத்தான் இருக்கிறது இதுவரையில்.
இந்த நிலை மாறவேண்டுமென இப்போது ஜப்பானில் நகர்ப்பூங்காக்களில் மரங்களிடையில் உணர்வுபூர்வமாய் நடக்கவும் மரங்களை நோகாமல் அரவணைக்கவும் அவற்றோடு உரையாடவும் மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள், தம் மக்களின் நோய் தீர்க்க!
கனவில்கூட காடுகளை தழுவிக்கொண்டே உறங்குபவருக்கு மட்டுமே உயிரிருக்கும் வரை தாயின் அரவணைப்பு தொடருமாம் நினைவுகளின் வழியே. இதை விட அருமருந்து நம் உலகிலில்லை.
கவனம் கொள்வோமா மனிதர்களே?:
நாம் காடறுத்து நாடு சமைத்து மகிழ்வாய் உண்டு களித்து கூடிப்பெருகி வாடித்தேய்ந்து மாள, நம்மை கானகம் மௌனமாய் உண்டு செரித்து காடாய் உமிழும் வெறுப்பேதுமின்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக