1801 ஜூன் 16
ஒரு நோட்டீசு ஒன்று சிவகங்கை சீமையில் வெளியாகிறது, probably the first ever chain mail kind of message propagation the world has seen. அதன் சாரம்:
"வெள்ளைக்காரன் எவன கண்டாலும் உதைத்து துரத்து. அடித்து நொறுக்கு. இந்த பூமி அவர்களுடையது இல்லை.
இந்த நோட்டீசை உடனே பல பிரதிகள் எடுத்து அனைவருக்கும் பரப்பு. அப்படி செய்யத்தவறினால் கங்கைக்கரையில் காராம்பசுவை கொன்றவனை பீடிக்கும் பாபம் உன்னையும் பீடிக்கும்.
இந்த நோட்டிசை பிரதிகள் எடுத்து பரப்பும் ஒவ்வொருவரின் பாதங்களிலும் என் நெற்றி நிலத்தில் பட வீழ்ந்து வணங்குகிறேன்.
இப்படிக்கு,
இளைய மருது
மருது பாண்டிய சகோதரர்களில் இளையவர் செய்த இந்த பிரகடனம், இந்திய விடுதலைப்போரின் முதல் குரல். இந்த நோட்டீசுஒலித்தரங்க கோவில் சுவர்களிலும் ஒட்டப்பட்டதாம்.
புரட்சி வெடிக்க என்ன காரணம்?
ஏன் சிவகங்கை சீமை?
வீரபாண்டிய கட்டபொம்மனை பிரிட்டிஷ் அரசு கயத்தாறில் தூக்கிலிட்டு, கதை முடிக்க அவனது தம்பி ஊமைத்துரையை தேட, ஊமைத்துரை மருதுபாண்டியரிடம் தஞ்சம் புக, அவனை துரத்திய வெல்ஷ் துரைக்கு ஒரு மிகப்பெரிய இக்கட்டு.
தனக்கு வேட்டை கற்றுக்கொடுத்த பெரிய மருது, வளரி வீச கற்றுக்கொடுத்த இளைய மருது, என்ன ஒரு நட்பு பேணலோடு ஓடின நாட்கள்? இப்போது ஊமைத்துரையை மீட்கவும் அவர்களை ஒடுக்கச்சொல்லியும் மேலிட ஆணை வந்துள்ளதே?!
பீரங்கிகள் கொண்டு பிரிட்டிஷார் தாக்க, தகர்ந்தது சிவகங்கை சீமை நான்கே மாதங்களில்.
பெரிய மருது, சின்ன மருது, அவர்களது பதின்பருவ பிள்ளைகள் என அனைவரையும் இரும்புச்சங்கிலிகளால் பிணைத்து, மரண தண்டனை நிறைவேற்றியது பிரிட்டிஷ் அரசு.
"இந்த பிள்ளைகள் என்ன பாபம் செய்தனர். அவர்களும் ஏன் சாக வேண்டும் என பெரிய மருது கதறியது வெல்ஷ் துரையை வாழ்நாள் முழுவதும் தூங்கவிடாது செய்திருக்கும்...
புரட்சிகள், போராட்டங்கள் எல்லாவற்றிற்குமே பார்ப்பவர் கோணம் பொறுத்து கருத்துகள் மாறும், 'இந்த மாடுகளும் மான்களும்தான் கொடிய விலங்குகள், புலி சிங்கமெல்லாம் நம்மை தொந்தரவு செய்யாத சாது விலங்குகள்!' என புல்லில் வாழும் உயிரினங்கள் புலம்புவது போல.
இலங்கையில் இளைய பிரபாகரனின் குண்டு துளைத்த உடலில் குண்டுகள் தைப்பதற்கு முன் அவன் உயிரோடு ராணுவ கைதியாய் இருக்கையில் யாரோ எடுத்த அவனது இறுதி புகைப்பட innocent glare போல காலம் நம் மனிதக்கூட்டத்தை பார்த்தவண்ணமே இருக்கிறது.
...
இன்று காலையில் எங்கள் வீதியில் ஒரு van இல் ஒலிபெருக்கி வழியே வழிந்தோடும் குரல், " ஐயா வாங்க அம்மா வாங்க அண்ணா வாங்க அக்கா வாங்க. வீட்டில் இருக்கிற உபயோகத்தில இல்லாத பழைய மிக்சி கிரைண்டர் டிவி வாசுங் மெஷின் உடைஞ்ச கட்டில் நாற்காலி சோடா பாட்டில் பிராந்தி பாட்டில்(!)'" எதுவானாலும் கொண்டு வாங்க, பணத்த வாங்கிட்டு போங்க!" என திரும்பத் திரும்ப ஒலித்த வண்ணம் நகர, சில வீடுகள் தள்ளி ஒரு bachelor குடியிருப்பில் இருந்து இரண்டு சாக்கு மூட்டையில் வகை வகையாக மதுபான பாட்டில்கள், அனைத்தும் foreign சரக்கு!
"நீ தடுக்கில் நுழைந்தால் நான் கோலத்தில் நுழைவேன்!" என வெல்ஷ் துரையின் ராச்சிய ideology இன்றும் நம்மிடையே குதூகலமாய் உலவிக்கொண்டிருக்கிறது ராஜ மரியாதையோடு!
"நம் எதிரி யார்? அவனது பலம் என்ன? நமது பலவீனம் என்ன? நமது பலம் என்ன?" என்றெல்லாம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் நிழல் சிவகங்கை மண்ணில் படிந்த உடனேயே மருது பாண்டியர்கள் ஊகித்தது போல வேறு பலரும் அன்றே ஊகித்திருந்தால், அவர்களும் பாண்டியர்களோடு இணைந்திருந்தால்... நம் நாட்டின் தலை விதியே மாறியிருந்திருக்கும்...
ஆனாலும் அப்படி தலை விதி மாறின நம் நாட்டிலும் நான் வர்ணித்த இன்றைய van காட்சி கண்டிப்பாய் நடக்கும்.
ஏனெனில் நம் பலவீனங்கள் எதுவும் இந்த இடைப்பட்ட 200 ஆண்டுகளில் மாறவே இல்லை!
என்று தணியும் இந்த "தாகம்"?!
-------
ஜம்பு தீவுப்பிரகடணம் / நாவலந்தீவு பிரகடணம்
ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், மறையர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், சாம்பவர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால், மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரி டம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்து கொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர். ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்…
ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும். அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்…
ஆதலால்….. மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாய்க்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.
ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்… இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்… இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய ** ****குச் சமமானது… இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் **** ***** பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!…. இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்…
எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்…
இப்படிக்கு,
மருது பாண்டியன்
பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி.
(Reproduced from wikipedia Tamil site)
கருத்துகள்
கருத்துரையிடுக