Freeயா வுடு freeயா வுடு மாமே வாழ்க்கைக்கு இல்ல க்யாரண்டீ...
அவர் கல்லூரி பேராசிரியர். மனைவியும் ஏதோ ஒரு அலுவலகத்தில் பணி.
ஐந்து வருடங்களுக்கு முன்பு கோவை சாய்பாபா காலனி எனப்படும் upmarket பகுதியில் ஒரு வெள்ளி இரவு உணவு முடித்து, சாலை ஆரவாரங்கள் சற்றே அடங்கிய நேரத்தில் walking கிளம்புகிறார்கள்.
அந்த பகுதியின் மெயின் ரோட்டில் இரவு ஒன்பது மணிக்கு சாலையோர நடைபாதையில் நடந்துகொண்டிருந்த தம்பதி மீது கட்டுப்பாடிழந்த இரு சக்கர வாகனம் மோதி மனைவி சம்பவ இடத்திலேயே பலி என அடுத்த நாளில் அவர்களது வாழ்வு ஊடக செய்தியாக மாறப்போவது அப்போது அவர்களுக்கு தெரியாது.
சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு என் நணபனின் அப்பா இதே போன்ற ஊரடங்கிய ஒரு இரவில் நடைப்பயிற்சி சென்றவர் அங்கிருந்து நேராக ஐ.சி.யு போய் பின்பு யாரையும் பார்க்காமலே போய்விட்டார். அங்கும் ஒரு இரு சக்கர வாகனத்தில்தான் எமன் வந்தானாம்.
நேற்று இரவு எங்கள் பூர்வீக கிராமத்தில் கோவில் திருவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் இனிதே நடத்தி முடித்த களைப்பில் பத்து மணிக்கெல்லாம் ஊர் உறங்கிப்போயாச்சு. அந்த ஊரின் ஒரு மனிதரை தவிர.
திருத்துறைப்பூண்டி, எங்கள் கிராமத்திலிருந்து ஆறு கி.மீ. ஊர்க்காரர் ஒருவர் அங்கு முன்னிரவில் பணி முடித்து கடை ஒன்றில் ஏதோ வாங்கிக்கொண்டு கடையிலிருந்நு வெளியே வந்தவர் மீது இரு சக்கர வாகனத்தில் எமன்.
இன்று ஊரே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் எல்லோரும் காலையில் போலீஸ் ஸ்டேசனில். மற்ற able bodied எல்லோரும் மருத்துவமனையில்.
இந்த விபத்துக்கள் அத்தனையிலும் இருசக்கர வாகனத்தில் வந்து மோதிச்சென்றவர்கள் யாரென தெரியவில்லை. நேற்றைய நிகழ்வின்போது அப்பகுதியில் இருந்த ஒரு CCTV யில் விபத்து பதிவாகியிருக்கலாம்...
இறந்தவருக்கு ஐம்பது வயது. அவரை நம்பி ஊரில் குடும்பம், பிள்ளளகள், உறவுகள், நண்பர்கள்...
நம் தேசத்தில் இது போன்ற சாலை விபத்துகளில் பலியான மக்கள் எத்தனை பேர் என்கிற புள்ளி விபரம் இருக்கிறதா? யாராவது இதன் அபரிதமான வளர்ச்சியை கவனித்துக்கொண்டிருக்கிறார்களா என தெரியவில்லை.
குடி போதையில் சாலையில் தள்ளாடி நடக்கும், தவழ்ந்து செல்லும், விழுந்து கிடக்கும் மக்களின் உயிரையெல்லாம் கவனமாய் கடவுள் ஒருபுறம் காப்பாற்றிக்கொண்டிருக்க, அவருக்கு report செய்யும் பணியாளரான எமதர்மர் என்னடாவென்றால் நிதானமாக, ஏராளமான கனவுகளுடன் + கவலைகளுடன் நடந்துகொண்டிருக்கும் இன்றைய குடும்பத்தலைவர்களை, தலைவிகளை just like that தட்டித்தூக்கிச்செல்கிறார் - பைக்குகளில் குடிபோதையில் / வேறு போதையில் நிதானமிழந்து முறுக்கிப்பறக்கும் எதிர்கால இந்திய தலைவர்கள் வழியே.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதே சட்டப்படி குற்றம். தட்டித்தூக்குவது?
பிடிபட்டால்தானே!
வாகனங்கள் மோதி விலங்குகள் சாலைகளில் மாய்வதை தடுப்பது எப்படி என்பது தெரியாமல் அரசுகள் I.I.T போன்ற கல்வி நிறுவனங்களுடன் கரம் கோர்த்து ஆராய்ச்சிகள் செய்வது ஒரு புறம் நடக்க, "போதை வாகனங்கள்" மோதி மனிதர்கள் சாலைகளில் மாய்வதை தடுப்பது எப்படி என்பது... அரசுகளுக்கு தெரியாதா என்ன?
பெருகிக்கொண்டிருக்கும் மதுபான உற்பத்தி, பெருகிக்கொண்டிருக்கும் போதைப்பொருட்கள் புழக்கம், பெருகிக்கொண்டிருக்கும் சாலை விபத்துக்கள் + spontaneous crimes... இவை மற்றும் இவற்றுக்குள் உள்ள தொடர்புகள் ஏனோ இன்னும் பொது வெளியில் பேசுபொருளாக மாறவில்லை...
Maybe because all of us are drugged with social media anyway :-(
Still, there is a solution: What about signboards every 100 meters in every damn road that is motorable, that says "Caution! Accident Zone!! Sober people walk here" ?!
கருத்துகள்
கருத்துரையிடுக