கடற்கரையோர டவுன் ஒன்றில் பத்தாம்ப்பு படிக்கையிலே ட்யூஷன் ஆசை தொற்றிக்கொள்ள, 'ஒனக்கெதுக்குடா!!!... சரி, இப்படியாவது நேரம் ஒதுக்கி படிக்கிற பழக்கம் வரட்டும்...' என அப்பா பெரிய மனதுடன் அனுமதிக்க, தொடங்கியது எனது மாலை நேர ஒதுக்கல்கள். 'கற்பூரம்... நீயெல்லாம் எதுக்குடா வர்ற?!' என இரண்டாம் நாளிலேயே கிருஷ்ணா மாஸ்டர் கண்டுபிடிக்க, சென்டரில் வெயிட் கூடிப்போச்சி. ஏராளமாய் கேள்வித்தாள்கள், குறிப்பாய் கணக்கு! அவ்வளவு குஷியாயிருக்கும் மார்க் வருகையில். இந்தப்பதிவு கற்பூரம் பற்றியதல்ல, கிருஷ்ணா மாஸ்டர் பற்றியது! நல்ல சிவப்பு, வெட வெட உடல், உயரம், வசீகர சிரிப்பு, சுருட்டை முடி, அழியாத கோலங்கள் ப்ரதாப் போத்தன் போல ஸ்டைலாய் சிகரெட்டு, முழங்கை வரை சுருட்டிய முழுக்கை சட்டை சகிதமாய் எப்பொழுதும் மந்தகாசம். "ஆசீர்வதிக்கப்பட்ட மனுசன்டா! எப்பப்பாரு அப்படி ஒரு சிரிப்பு!' என ஏரியா இளவட்டங்கள் பொறாமையில் வேகும். கருணாகரன் என்று ஒரு வகுப்புத்தோழன், படிப்பில் என்னோடு போட்டி, ஆனால் பாடத்தொடங்கினால் நானும் சொக்கி கேட்பேன், அப்படி குரல் வளம். கிருஷ்ணா மாஸ்டர் க்ளாசில் தொய்வு ஏற்பட்டதாக நினை...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!