குட்மார்னிங் நட்பே
பூம்பூம் மாடு
புல்லட்டில் போகுது
குரங்கு வெளுக்குது
நம்ம துணிகள
கங்காருவுடன் குத்துச்சண்டை
நாயை காப்பாத்த
பாம்பு பிடிக்கறாரே
தைரியமா பாருங்க
ரோட்டில நடந்தது
யாருங்க பேயா
வானத்தில பாருங்க
ஏலியன் விமானம்
கோயில் விமானத்தில்
ஏலியன் உருவங்கள்
கர்டாஷியான் பின்புறம்
பெரிதானது எப்படி
எல்லையில சீனாகாரன்
பண்ணறத பாருங்க
...
இதென்ன கொடுமை
எல்லாரும் போராடுவோம்
என் தப்பை
நீ பேசாதே
அவன் செய்த
தப்பை மாத்து
என்னோடு இல்லாதவர்
நாட்டு விரோதிகள்
...
பூம்பூம் மாடு
புல்லட்டில் போகுது
குரங்கு வெளுக்குது
நம்ம துணிகள
கங்காருவுடன் குத்துச்சண்டை
நாயை காப்பாத்த
பாம்பு பிடிக்கறாரே
தைரியமா பாருங்க
...
குட்நைட் நட்பே!
குட்மார்னிங் நட்பே
குட்நைட் நட்பே
இடையில ஏதுமில்லே
நம்பு நட்பே!
நமக்கு வேண்டியதை இணையத்தில் தேடிய காலம் போய் இன்று நமக்கு என்ன வேண்டுமென தெரியாமலே நாமும், நமக்கு என்ன வேண்டுமென தெரியாமலே பெரு வணிகமும், "இதுவா?" "இதுவா?" என கண்முன்னே 24*7 கடை விரிக்க, மண்டை குழம்பிப்போய் கோழி கூவும் விடியலில் துயில்பவரே இங்கு இன்று அதிகம்.
Wall E என்ற அனிமேஷன் திரைப்படத்தில் ஒரு பாடல் வரும். அசெம்பிளி வரிசையாக பீச் சேரில் உடல் பருத்த மனிதர்கள், அமர இயலாது படுத்தபடி, பெரிய திரையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் ரசித்திருக்க, கையருகில் கன்வேயர் பெல்ட்டில் உணவு, உற்சாக பானம் என வரிசையாக வந்து வந்து, அவரவர்கள் உண்டு பருகி தீர்த்ததும் மிச்சத்தை சுமந்து நகர, அவர்கள் படுத்தபடியே உடற்பயிற்சி செய்ய... என்று நம் எதிர்கால வாழ்வியலை பிரதிபலிக்கும்.
இதன் அடுத்த பரிமாணமாக இதே படத்தில் ஒரு சிக்கன் உணவு பொட்டலத்திலிருந்து, சிக்கனாக மாறிப்போன சேவல், hologram எனும் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் தனது சிக்கனைப்பற்றி தானே ஆடிப்பாடி விளம்பரம் செய்யும்!
அந்த நிலைக்கு நாம் வரும் முன்னர் சில மாற்றங்கள் நம்மில் நிகழும்;
மளிகைக்கடைக்கு சென்று "ஏதாவது கொடுங்க. பாத்துட்டு வேண்டியதை எடுத்துக்கறேன்"
உணவகத்துக்கு சென்று, 'எல்லாத்திலயும் சாம்பிள்கள தாங்க. உண்டு பார்த்து வேண்டியதை கேட்கிறேன்'
பலர் கூடிய இல்ல விழாவில் அனைவரும் தத்தமது மொபைலில் மூழ்கிப்போயிருக்க, போர் அடிக்கும் நொடியில் யாராவது ஒருவர் திடீரென எழுந்து, 'யாராவது என்னோட பேசுங்களேன்!' என கேட்பார். ஏனையோர் அவரது குரலை கேட்காமலே தம் மொபைலில் மூழ்கியிருப்பர். அவர் அலுத்துப்போய் மீண்டும் மொபைலில் ஏதாவது கிடைக்குமா எனத்தேடி மும்முரமாகி...இப்போது இன்னொரு உறவு மொபைல் போரடித்து திடீரென எழுந்து, 'யாராவது என்னோட பேசுங்களேன்!' என கேட்பார். இதுவும் அங்கிருக்கும் யார் காதுகளிலும் நுழையாமலேயே காற்றில் வழிந்தோடி கரையும்.
"பாஸ்! இதெல்லாம் ஒரு மேட்டரா! இன்னும் சில வாரங்கள்ல வாட்சப்பு நம்ம டேட்டாவெல்லாம் ரெக்கார்டு பண்ணப்போறானுவோ! நாம சம்மதிக்கலன்னா நம்மள வாட்சப்புலேந்தே தூக்கிருவானுங்கோ! வுடக்கூடாது பாஸ்!! உலகளாவிய போராட்டம் ஒண்ணு பண்றோம்! "Change org" ல ஆன்லைன் பெட்டிஷன் போட்றோம், கலாட்டா பண்றோம், புரட்சி வெடிக்கும் பாஸ்! வாட்சப்பு சர்வீசு free யாதான் இருக்கணும். ஓனர் சொன்னாருன்னா விட்றுவமா?! நாங்க தனி மரமில்ல பாஸ், தோப்பு!!!!!!!"
போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகள்!
குட்மார்னிங் நட்பே
குட்நைட் நட்பே
இடையில ஏதுமில்லே
நம்பு நட்பே!
கருத்துகள்
கருத்துரையிடுக