சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
அதாவது.மானம். பிழைத்திருந்தால்.
பாரதி கண்ட புதுமைப்பெண் - அவர் கனவு கண்ட பாரதத்தில் மட்டுமே...
பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என தரிசு நிலங்களையும் கோயில் போன்று போற்றப்படும் இடங்களாக மாற்றவேண்டும் என அவன் எழுதிச்சென்றதை, 'பள்ளிகளை கோயிலாக்குவோம்' என தவறான புரிதலோடு வாழும் நம் நாட்டில் பெண் தெய்வங்கள் மட்டும் ஏன் தொடர்ந்து வன்முறையின் இலக்குகளாக மாறிப்போயினர்?
கல்விக்கூடங்களில், தரிசு நிலங்களில், இறை கூடங்களில், சொந்த வீட்டில், நம்பி நுழையும் வீட்டிலும்... இந்த கண்ணம்மாக்களின் ஆன்மாக்கள் சிதைந்து அலைய சபித்தது எந்நக்கடவுளாக இருந்தாலும் அவர் நற்கடவுள் அல்ல, நம் கடவுளும் ஆகார்.
இந்தக்கொடுங்குற்றம் செய்தவர்க்கு மதச்சாயங்கள் பூசி வன்மம் வளர்ப்பதை உடனடியாக நிறுத்தி, Ministry of Crimes Against Women and Children என்கிற ஒரு அமைச்சகத்தை நிறுவி, காத்து, தண்டித்து... ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை என, 'சாதி மத விருப்பு வெறுப்பு இன்றி அகில உலக பெண்களும் தன்மானத்தோடு வாழும் ஒரே நாடு நம் பாரதம்' என்கிற மாற்றத்தை வேண்டுவதும் "பெரிதினும் பெரிதுகேள்" வகை கனவுதான்.
இக்கனவு மெய்ப்பட நாம் அனைவரும் கண் திறந்தால்தான் வாய்ப்புகளும் கண்திறக்கும்...
(Image from kuvikam.com, may be under copyright)
இப்போதுள்ள சூழலில் கட்சியின் ' பெரிய வாய் ' க்காரன் சொல்வதை மற்றவர்கள் அனைவரும் தொடர்ந்து சொல்வதே அரசியல் தொழிலாயிற்று. இதில் ஒரு அமைச்சகத்தையும் புதிதாக சேர்த்தால் ஒத்து உதவுவதற்கு அவ்வமைச்சகத்தில் இருக்கும் செயலர்கள் கூடுதல் ஆட்களாக கிடைப்பதை மட்டுமே இது உறுதி செய்யும். சீரழிந்த சமுதாயத்திலிருந்து இக்கேட்டை சீரழிக்க ஒரு தழல் வெடித்து விழும் நிச்சயமாய்.
பதிலளிநீக்குLet that happen soonest...
நீக்கு