"அவர்" கிட்ட சொல்லிட்டு வெதச்சீகளா?! ட்ரம்ப்பின் அமெரிக்க சந்தையில் இந்த ஆண்டு 430 769 231 டன் சோளம்! அதாவது roughly நாற்பத்து நான்கு கோடி டன் சோளம். அமெரிக்க வேளாண் நிலங்களில் இந்த ஆண்டு ஏறக்குறைய 60 விழுக்காடு சோளமும் சோயாவும் (சோயா பீன்) மட்டுமே விளைவிக்கப்படுகின்றன. அமெரிக்க மொத்த வேளாண் உற்பத்தியில் 87 விழுக்காடு சோளமும் சோயாவும் (சோயா பீன்) மட்டுமே. இவை இரண்டும் பணப்பயிர்கள். இந்த பயிர்களுக்கு அமெரிக்கா ஒரு உலக சந்தையையே கட்டமைத்திருக்கிறது. அமெரிக்க சோயா உற்பத்தியில் ஏறக்குறைய சரி பாதி, அதாவது 50 விழுக்காடுகள் ஏற்றுமதி சந்தைக்காக உற்பத்தி செய்யப்படுபவை. கடந்த இரு ஆண்டுகளில் சைனா, அமெரிக்க சோயாவை வாங்க மறுத்ததால் (ட்ரம்ப்பு வணிக வரி தகராறு) அமெரிக்கா இந்த ஆண்டு சோயா விதைக்கும் பரப்பை சுருக்கி சோளம் விதைத்து பெருக்குகிறது. அதாவது சோயா விதைப்பை 10 விழுக்காடு சுருக்கி அந்த பரப்பில் சோளப்பயிர் வளர்க்கிறது. இது வரை அமெரிக்க சோள ஏற்றுமதி, விளைச்சலி்ல் ஏறக்குறைய இருபது விழுக்காடாக இருந்துவருகிறது. இந்த ஆண்டு, சோள விதைப்பின் பரப்பு 10 விழுக்காடு கூடியதால் விளைச்சலும் 10 விழு...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!