முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பாரதியோடு போனது நமது ஜெகம் அழிக்கும் கோபம்

நண்பகல் கோடை வெயிலில் சாலையை கடக்கும்போது அவர்களை பார்த்தேன். ஒரு டாடா ஏஸ் வண்டி முழுக்க குப்பைகள். கணவன், மனைவி + ஒரு சின்னஞ்சிறுமி. சாலையோர மர நிழலில் வண்டியை நிறுத்திவிட்டு தரையில் அமர்ந்து அவர் எதையோ உடைத்து சேகரிக்க, அந்த சிறுமியும் குப்பைகளை கிளறிக்கொண்டிருந்தாள்; மூன்று வயது கூட ஆகியிருக்காது... அவளது அம்மா சாலையோரம் இருந்த குப்பையை கிளறிக்கொண்டிருந்தார். யு டர்ன் செய்து திரும்ப வந்து அவர்கள் அருகில் நிறுத்தி உரையாடினேன்... 'ஏங்க இப்படி சின்ன குழந்தையும் குப்பையில...பள்ளிக்கூடம் போகலையா?' என்றேன். திருப்பூரில் இருந்து தினமும் கோவைக்கு வந்து குப்பைகள் பொறுக்கி அவற்றில் விலை பெறக்கூடிய பொருட்களை பிரித்தெடுத்து விற்று பிழைப்பு நடத்துகிறார்கள். தமிழ் முகங்களாக தோன்றவில்லை ஆனாலும் தமிழ் தடங்கலின்றி பேசுகிறார்கள். வீட்டில் அவரது அம்மா அப்பா இருந்தாலும் அவர்களும் தினக்கூலிகளாக வெளியே செல்வதால் குழந்தையை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள யாருமின்றி அவர்களுடனே அழைத்துச்செல்வார்களாம். பள்ளி செல்லும் வயது வந்தவுடன் பள்ளிக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறார்களாம். கண்ணியமான குரலில் பேசியவரை ப...

யாதும் ஊரே, கேளிர் எங்கே?

என் அம்மா சிறு வயதில் பள்ளி செல்லும் வழி எங்கும் சொந்தங்களால் நிறைந்திருந்தன அவரது மண்சாலைகள். பெரிய மட்டை, மொட்டை பாட்டி, சின்னு சின்னம்மா, தொப்புள் தாத்தா, குளத்தங்கரை பாட்டி, கதைப்பாட்டி, சமையல் சித்தப்பா, இன்னும் பலவிதமான கலவையான பெயர்கள் சொல்லி அவர் அவர்களை நினைவு கூர்வதே அவ்வளவு அழகு. சொந்தத்துக்குள் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்து என நெருக்கித்தொடுத்த மல்லிகைச்சரம் போல ஊரே மணத்துக்கிடந்தது சொந்தங்களால். உறவு சலசலப்புகள் இருந்தாலும் சரம் தன் இயல்பை இழக்காத சரமாகவே இருந்தது. மல்லிகை அல்லாத வேறு மலர்கள் இந்த சரத்தில் சேர முடியாது என இயல்பாகவே / வேறு வழியின்றி அதனதன் சரம் தேடி மணம் முடிக்க, இப்படி பல மலர்ச்சரங்கள் நிறைந்திருந்தின அவரது நினைவில் நிற்கும் சிற்றூர்களில். ஒரு ஐம்பது வருட இடைவெளியில் எவ்வளவு சிற்றூர்களும் மலர்ச்சரங்களும் காணாமலே போய்விட்டன என நினைத்தாலே மலைப்பாய் இருக்கிறது. முதலில் அறுபட்டது அவர்களது  நிலத்துடனான தொப்புள் கொடி உறவு.  அவர்களை தொடுத்திருந்த வாழ்வியல் நார் நைந்துபோனது அதன் பின். இன்று அநேக அடுத்த தலைமுறை மலர்களுக்கு அவர்கள் இருக்கும் ஊரெங்கும் சொந்...

மௌனத்தின் குரல்

அந்த பதின்ம வயது சிறுமியின் பெற்றோர்,  சகோதரன் என அனைவருமே கேள்திறன் +  பேச்சு திறன் இழந்தவர்கள். சிறுமி பேசத்தொடங்கிய நாள் முதலே அவள்தான் உலகின் குரல்களை அவர்களுக்கு ஒலி பெயர்த்து சைகை மொழி வழியே உணர்த்துபவள். மீனவ குடும்பம். சொந்த படகில் குடும்பமே அதிகாலையில் கடலில் இறங்கி மீன் பிடித்து காலைப்பொழுதில் விற்று என வாழ்வு நகர்கிறது. நேரத்திற்கு பள்ளி செல்லவும் படிக்கவுமே போராடுகிறாள் இந்தச்சிறுமி. பதின் வயதில் எல்லோருக்கும் தோன்றும் முதல் காதல், தான் யார் என அடையாளம் தேடும் தன்மை, தனக்கு என்ன தேவை என்கிற தேடுதல் அவளுக்கும் உண்டு. ஆனால் அவளது குடும்பம் வெளியுலகத்தொடர்புக்காக அவளை முற்றிலும் சார்ந்திருப்பதால் அவளுக்கு எதற்குமே நேரமில்லை. அதனால் அவளுள் நிகழும் ஏக்கங்கள், கோப தாபங்கள் எல்லாவற்றையுமே அவள் அவர்களுடன் சைகை மொழியில் மட்டுமே பகிர முடிகிறது. பாடல்கள் பாடுவதை அவள் நேசிக்கிறாள். அவளுக்கான சுதந்திர உலகம் அதுவே என உறுதியாக நம்புகிறாள். கல்லூரி படிப்பாக 'இசை'யை தேர்ந்தெடுத்து ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு அவளது பள்ளியின் இசை ஆசிரியர் வழியே கிடைக்க, கனவை நனவாக்க...

ஏய்!

உலகம் ஃபுல்லா ரௌடிங்க தொல்லை தாங்கலபா! எவன பார்த்தாலும் "ஏய்!" "ஏய்!" னு சவுண்டு கிளப்பிகிட்டு திரியிராய்ங்க! ஒவ்வோரு "ஏய்" யும் பல ஆயிரங்கோடின்னு பெரும வேற... இன்னாதான் இர்க்குது இந்த "AI" ல பாத்தா காமெடியா கீதுபா! ஊர்ல ஒர்த்தன் ஓரு மெசினு பண்ணானாம். அது ஆய கலைங்க 64ஐயும்  அப்டியே செய்யுமாம். அந்த மெசினை சண்டைக்கு விட்டானாம். அதுக்கு எதிராளியா நின்னது இன்னொர்த்தன் பண்ண 64 ஆய கலை மெசினாம். ஃபைட்டான ஃபைட்டாம். முடியவே இல்லையாம்! மெசினு இத்து போற வரை சண்டை போடுமே தவிர ரெண்டுக்கும் சமாதானம் பேசவே தெரியாதாம்! ஏன்னா சமாதானம்னா என்னான்னே ரெண்டுக்கும்  புரியாதாம்! நம்ம மனுசப்பய எப்போ இன்னா செய்வான்னு அவனோட மானுஃபேக்சரருக்கே புரியாதாம். அவனோட வரலாறு பூகோளத்த எல்லாம் படச்ச கடவுளே வாயடைச்சி நிக்காராம்! இப்போ அவனே 'நாந்தான் கடவுள்'னு கெளம்பிருக்கானாம்! கடவுள்தான் 'டேட்டா'ன்னு வச்சிக்குவம். அவரு கோடானு கோடி அனுபவங்கள பொரட்டி பொரட்டி படிச்சி ஒவ்வொரு மனுசப்பயலயா உருவாக்கிக்கிட்டே இர்க்காராம். ஆனாலும் ஒர்த்தன் மாறி இன்னோர்த்தன் இல்லவே இல்லயாம். ...

அன்பாலே கூடு கட்டுவோம்

பறவைகள் எதுவும் தேவைக்கதிகமான அளவில் கூடு கட்டுவதில்லை. எத்தனை குஞ்சுகள் உருவாக்கலாம் என்கிற தெளிவான உள்ளுணர்வுடன், தன்னுழைப்பில் மட்டுமே அவை கூடுகளை உருவாக்குகின்றன. எதிர்காலத்திற்கென கூடுதல் அறைகள் அறவே கிடையாது. அந்த கூடென்பதும் வெறும் தாவரக்கழிவுகளால் மட்டுமே... அந்தக்கூட்டில் குஞ்சுகள் காலுதைத்து சிறகு விரித்து பறக்க வெளியேறும்வரை அவற்றை வளர்ப்பது தாய்ப்பறவையின் உடற்சூடு மட்டுமே, அது தரும் கதகதகப்பு மட்டுமே. காற்று மழை புயல் வெயில் கடுங்குளிர் இடி மின்னல் தாண்டியும் வாழும் இக்கூடுகள், மரம் சாய்ந்தாலோ கிளை முறிந்தாலோ மட்டுமே மண்ணில் வீழும்... சிறகு விரிந்த குழந்தைகள் எல்லாம் வாழ்வு பழக வெளியேறிய பின்பு தாய்ப்பறவையும் அதன் இணையும் அந்தக்கூடுகளில் தங்குவதும் இல்லை... பறவையைக்கண்டோம் விமானம் படைத்தோம் என மார்தட்டும் மனிதக்கூட்டம் மட்டுமே பறவைகளிடம் இருந்து வாழ்விடம் அமைப்பதைக்கூட இன்றுவரை கற்றுக்கொள்ளவில்லை. நினைத்த காலத்தில் நினைத்த இடத்தில் தன்னுழைப்பு மட்டுமே கொண்டு கட்டப்படும் அற்புதத்கூடுகள் எவற்றையும் மனிதர்கள் ஏனோ கொண்டாடுவதே இல்லை. வீடென்பது உடல் இளைப்பாறும் இடம் என மட்டுமே என...

காற்றில் கரைந்த கனவு

கனவு காண தைரியம் வேண்டும், தொலைநோக்கு பார்வை வேண்டும். நனவாக்க உறுதியும் உழைப்பும் வேண்டும். இத்தனை இருந்தும் கனவு நனவாக காலம் மனது வைக்க வேண்டும்... காந்திக்கு கனவு காண தைரியமும் தொலை நோக்கு பார்வையும் இருந்தது. அது உலகம் அறிந்த செய்தி. கனவை நனவாக்க உறுதியும் உழைப்பும் கொண்ட மனிதர்கள் அவருடன் இருந்தனர். இதோ இந்த வாரம் செவ்வாய் கிழமைதான் அவர் தனது பத்திரிகையில் 'காங்கிரஸ் என்கிற கட்சி தன் இலக்கை அடைந்துவிட்டது. இனி அதற்கு புதிய இலக்குகள் நிறைய இருக்கின்றன. இந்த இலக்குகளை அடைய அது தன் சுயத்தை கலைந்து உருமாற வேண்டும்' என எழுதினார். அந்த இலக்குகள் எவை என்பதையும் தெளிவாக எழுதியிருந்தார். அந்த இலக்குகள் எல்லாம் இருபத்தைந்து ஆண்டுகள் முன்பே அவர் வகுக்கத்தொடங்கியவை. அதற்கு பத்தாண்டுகள் பின்பு, அடிமைப்பட்டிருந்த இந்தியாவின் சுதந்திர எதிர்காலத்திற்கான அடிப்படை கட்டமைப்புகளை தெளிவாக சிந்தித்து வரையறுத்து, அவற்றிக்கு செயல் வடிவம் தர அதுவரை தான் ஏற்றிருந்த ஒரு கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அந்த புதிய இலக்குகளை நோக்கி தன் பயணத்தை  தொடங்கியிருந்தார்.  அந்த இலக்க...

கரும்புக்காடு

  காவல் துறை உங்களின் நண்பன் என்பது தமிழகத்தில் ஒரு புகழ் பெற்ற வாசகம். ஆனாலும் போலீஸ் என்றால் வீடு வாடகைக்கு கொடுக்க தயங்குவதில் இருந்து வடிவேலுவின் சிரிப்பு போலீஸ் வரை சமூகப்பார்வை சற்று கலவரமாகவே இன்று வரை தொடர்கிறது. முதலாம் வகுப்பு படிக்கையில் என் வகுப்பில் ஒருவன் தினமும் என் ஸ்லேட்டுக்குச்சி, பென்சில், ரப்பர் பிடுங்கிக்கொள்வான், தராவிட்டால் என் அப்பாவை அவனது போலீஸ் அப்பா அரெஸ்ட் செய்துவிடுவார் என மிரட்டுவான் (தனிப்பதிவே எழுதியிருக்கிறேன் முன்பு ஒரு முறை). நானும் கண்ணீருடன் சிலநாட்கள் தாரை வார்த்திருக்கிறேன். பிறகு சில நட்பு அரை டௌசர்கள் தந்த தைரியத்தில் எவ்வாறு அவனது மிரட்டலை வெற்றிகரமாக முறியடித்தேன் என்பதை அந்தப்பதிவில் வாசிக்கலாம் :-)) அப்பாவும் அவர் பங்குக்கு போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை சித்ரவதைகள் பற்றி  பல அழிச்சாட்டிய ரௌடி கதைகள் சொல்வார் (லாடம் கட்டுதல், நகக்கண்களில் ஊசி, நகம் பிடுங்குதல் இத்யாதி, ஆனாலும் அவர் கதைகளில் ரௌடிகள் அசராமல் சிரித்துக்கொண்டே இருப்பார்கள்). ராமநாதபுரத்தில் பள்ளி நாட்களில் நண்பனது வீட்டருகில் ஒரு A.S.I குடியிருந்தார். நல்ல மனிதராம். புதிதாக ...