கனவு காண தைரியம் வேண்டும், தொலைநோக்கு பார்வை வேண்டும்.
நனவாக்க உறுதியும் உழைப்பும் வேண்டும்.
இத்தனை இருந்தும் கனவு நனவாக காலம் மனது வைக்க வேண்டும்...
காந்திக்கு கனவு காண தைரியமும் தொலை நோக்கு பார்வையும் இருந்தது. அது உலகம் அறிந்த செய்தி.
கனவை நனவாக்க உறுதியும் உழைப்பும் கொண்ட மனிதர்கள் அவருடன் இருந்தனர். இதோ இந்த வாரம் செவ்வாய் கிழமைதான் அவர் தனது பத்திரிகையில் 'காங்கிரஸ் என்கிற கட்சி தன் இலக்கை அடைந்துவிட்டது. இனி அதற்கு புதிய இலக்குகள் நிறைய இருக்கின்றன. இந்த இலக்குகளை அடைய அது தன் சுயத்தை கலைந்து உருமாற வேண்டும்' என எழுதினார். அந்த இலக்குகள் எவை என்பதையும் தெளிவாக எழுதியிருந்தார்.
அந்த இலக்குகள் எல்லாம் இருபத்தைந்து ஆண்டுகள் முன்பே அவர் வகுக்கத்தொடங்கியவை. அதற்கு பத்தாண்டுகள் பின்பு, அடிமைப்பட்டிருந்த இந்தியாவின் சுதந்திர எதிர்காலத்திற்கான அடிப்படை கட்டமைப்புகளை தெளிவாக சிந்தித்து வரையறுத்து, அவற்றிக்கு செயல் வடிவம் தர அதுவரை தான் ஏற்றிருந்த ஒரு கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அந்த புதிய இலக்குகளை நோக்கி தன் பயணத்தை தொடங்கியிருந்தார்.
அந்த இலக்குகள்?
1. தீண்டாமை ஒழிப்பு - சுதந்திர இந்தியாவில் "அனைவரும்" சமம்.
2. கிராமங்களில் தற்சார்பு - பொருளாதார, உணவு, உடல் & மன நல, தொழில் தற்சார்பு.
3. தற்சார்பு உடை உற்பத்தி.
4. இந்த மூன்றை அடித்தளமாக கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு தேசம், அரசியல் கட்சிகளற்ற ஒரு தேசம், கிராமங்களை வேர்ரகளாக கொண்ட ஒரு தேசம்.
முதலாம் இலக்கை அவரே முன்னடத்தி, மற்ற இலக்குகளை செயலாக்க அவசியமான அமைப்புகளையும் உருவாக்கி, அவற்றை கட்டமைக்கப்போகிறவர்களையும் இணைத்து அவற்றிற்கான பயணத்தையும் தொடங்கியிருந்தார்.
அவற்றில் ஒரு நிறுவனத்திற்கான பல்லாண்டு செயல் திட்டத்தை வடிவமைக்க ஒரு மிகப்பெரிய கலந்தாலோசனை நிகழ்வை திட்டமிட்டிருந்தார். அந்த ஆலோசனைக்கூட்டம் அடுத்த வாரம் செவ்வாய் அன்று நடைபெறவிருந்தது.
ஆனால் அதற்குள் இன்று காலை
சுதந்திர இந்தியர் ஒருவரால் சுடப்பட்டு மடிந்தார்.
உலகமே கண்ணீர் வடித்து... துயரம் சற்றும் குறையாத புதிய இந்தியாவின் புதிய பிரதமரின் தலைமையில் அந்த கூட்டம் நடைபெறுகிறது.
இந்த பிரதமர் காந்திக்கு மிக நெருக்கமானவர், காந்தியிடம் இந்திய அரசியலும் சாத்வீக அந்நிய எதிர்ப்பும் நேரடியாக பயின்ற மாணவர், மேற்குலகின் தாக்கம் நிறைந்தவர், எதிர்கால இந்தியாவி்ற்கான பொருளாதார பயணத்தை மேற்கு வழியில் கட்டமைக்க துடிப்பவர், காங்கிரஸ் நிறுவனத்தை காந்தி விலகியபின் வழி நடத்தியவர். இதோ, இந்தக்கூட்டத்தை தலைமை தாங்கி, 'முதலில் நாம் காந்திய வழிகளில் வெறுப்பின்றி வாழப்பழகுவோம், பின்னர் இலக்குகளை பார்ப்போம்' என முடிவெடுக்கிறார். இந்த முடிவினால் காந்தி வரையறுத்த இலக்குகள் எல்லாம் அடுத்த எழுபத்தைந்து ஆண்டுகளாக இலக்குகளாக மட்டுமே இருக்கப்போகின்றன...
Confused about the timelines? Let me decode them for you:
1925 - Gandhi starts A.I.S.A - All India Spinners Association - popularly known as Khadi industry as leads it
1933 - Gandhi starts 'Eradicate Untouchability' movement on National level and spearheads its progress.
1934 - Mob attack in Bihar. Months later, his convoy is bombed in Pune, a probable direct 'reaction'.
1934 - Shortly after the bombing, he resigns the leader post in AICC and disengages himself from all party activities, partly due to opposition from within his party on his 'goals' for Future India.
1934 - Starts All India Village Industries Association.
1938-1942 World War II and Great Depression
1942-1946 - Negotiates the contours and Timeline of Freedom.
1947 - Freedom granted but the country broken into two pieces. Partition happens. Those who oppose partition blame it squarely on him.
1947-1948 - Visits burning provinces to appeal for peace and tolerance.
1948 - Schedules first meeting of All India Khadi and Village Industries in Free India, for 03. Feb.
1948 - Jan 27 - Calls for metamorphosis of Congress party into a Lok Sevakh Sangh thereby shedding its political skin totally.
1948 - Jan 30 - Drafts a Constitution, for Congress to follow, that outlines the roles and responsibilities he had envisioned to build the future of India.
Same day, he falls to the bullets of hatred and mistrust.
March 1948 - His political successor convenes the AIKVIA meeting originally scheduled for 3rd Feb, declares that the Nation must focus on learning first to live by the principles of the slain One than focusing on the 'Constitution' drafted by Gandhi and thus puts AIKVIA in the back burner.
J.C. Kumarappa, handpicked by Gandhi to build AIKVIA as a Nation builder, gives his all for the next 30 years to build it as it was meant to but his Boss, the Prime Minister, had veered off into 'Western Economics based Industrial Development' thereby effectively killing the Constitution drafted by his Mentor that was the founding stone of AIKVIA.
J.C. Kumarappa also dies on another Jan 30.
Their dreams lived on and the world is slowly beginning to grasp the deep rootedness, practicality and and sustainability enshrined in The Constitution, known in later days as "His Last Will and Testament".
He was known as the Father of India for a great reason and he aptly left a will, his will, not for his biological family but for the whole Nation. ( Attached as a hyperlink at the bottom of this post).
Audacity to dream, tenacity to pursue and perseverance to succeed..."Amar Rahe Bapu, a day will come when the whole world will adopt your Constitution as that will be the only path to sustainable life on Earth..."
Your Grandson.
கருத்துகள்
கருத்துரையிடுக