அந்த பதின்ம வயது சிறுமியின் பெற்றோர், சகோதரன் என அனைவருமே கேள்திறன் + பேச்சு திறன் இழந்தவர்கள்.
சிறுமி பேசத்தொடங்கிய நாள் முதலே அவள்தான் உலகின் குரல்களை அவர்களுக்கு ஒலி பெயர்த்து சைகை மொழி வழியே உணர்த்துபவள்.
மீனவ குடும்பம். சொந்த படகில் குடும்பமே அதிகாலையில் கடலில் இறங்கி மீன் பிடித்து காலைப்பொழுதில் விற்று என வாழ்வு நகர்கிறது. நேரத்திற்கு பள்ளி செல்லவும் படிக்கவுமே போராடுகிறாள் இந்தச்சிறுமி.
பதின் வயதில் எல்லோருக்கும் தோன்றும் முதல் காதல், தான் யார் என அடையாளம் தேடும் தன்மை, தனக்கு என்ன தேவை என்கிற தேடுதல் அவளுக்கும் உண்டு. ஆனால் அவளது குடும்பம் வெளியுலகத்தொடர்புக்காக அவளை முற்றிலும் சார்ந்திருப்பதால் அவளுக்கு எதற்குமே நேரமில்லை. அதனால் அவளுள் நிகழும் ஏக்கங்கள், கோப தாபங்கள் எல்லாவற்றையுமே அவள் அவர்களுடன் சைகை மொழியில் மட்டுமே பகிர முடிகிறது.
பாடல்கள் பாடுவதை அவள் நேசிக்கிறாள். அவளுக்கான சுதந்திர உலகம் அதுவே என உறுதியாக நம்புகிறாள். கல்லூரி படிப்பாக 'இசை'யை தேர்ந்தெடுத்து ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு அவளது பள்ளியின் இசை ஆசிரியர் வழியே கிடைக்க, கனவை நனவாக்க கடும் முயற்சி செய்யவேண்டிய அவசியம், ஆனால் அதற்கான நேரத்தை அவளால் தன் குடும்பத்திலிருந்து பிரித்தெடுக்க இயலாத சூழல்.
என்ன செய்கிறாள்? அவளது குடும்பம் என்ன செய்கிறது? அவளது பதின் வயது காதல், கல்லூரி கனவு என்ன ஆகின்றன?
CODA என்கிற அமெரிக்க திரைப்படம், நம் ஆன்மாவை சில முறை புரட்டிப்போட்டு அறுவை சிகிச்சை செய்து, முன்னிலும் மேலாக்கி ஒரு புதிய புரிதலை நிச்சயமாய் தரும்!
Child Of Deaf Adults (CODA) - இந்த திரைப்படத்தின் அடி நாதம்: Life is Beautiful, regardless!
என் தாய்மொழியில் இது போன்ற படங்கள் வரவே வராதா என ஏங்க வைத்த படம், நாம் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்...மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற படம்.
படத்தில் வரும் சிறுமியின் பெற்றோர் நிசத்திலும் Deaf (and Dumb) Adults...
This film is an experience unlike any. It will fill us with a kind of joy that we won't be able to express to anybody I guess!
There are stretches of the movie where we won't hear any sound at all and that will kinda knock you out as they did to me...
Available in Apple TV App in India but it may soon find other OTT platforms too.
கருத்துகள்
கருத்துரையிடுக