ஒவ்வோரு "ஏய்" யும் பல ஆயிரங்கோடின்னு பெரும வேற...
இன்னாதான் இர்க்குது இந்த "AI" ல பாத்தா காமெடியா கீதுபா!
ஊர்ல ஒர்த்தன் ஓரு மெசினு பண்ணானாம். அது ஆய கலைங்க 64ஐயும் அப்டியே செய்யுமாம். அந்த மெசினை சண்டைக்கு விட்டானாம். அதுக்கு எதிராளியா நின்னது இன்னொர்த்தன் பண்ண 64 ஆய கலை மெசினாம்.
ஃபைட்டான ஃபைட்டாம். முடியவே இல்லையாம்!
மெசினு இத்து போற வரை சண்டை போடுமே தவிர ரெண்டுக்கும் சமாதானம் பேசவே தெரியாதாம்! ஏன்னா சமாதானம்னா என்னான்னே ரெண்டுக்கும் புரியாதாம்!
நம்ம மனுசப்பய எப்போ இன்னா செய்வான்னு அவனோட மானுஃபேக்சரருக்கே புரியாதாம். அவனோட வரலாறு பூகோளத்த எல்லாம் படச்ச கடவுளே வாயடைச்சி நிக்காராம்!
இப்போ அவனே 'நாந்தான் கடவுள்'னு கெளம்பிருக்கானாம்!
கடவுள்தான் 'டேட்டா'ன்னு வச்சிக்குவம். அவரு கோடானு கோடி அனுபவங்கள பொரட்டி பொரட்டி படிச்சி ஒவ்வொரு மனுசப்பயலயா உருவாக்கிக்கிட்டே இர்க்காராம். ஆனாலும் ஒர்த்தன் மாறி இன்னோர்த்தன் இல்லவே இல்லயாம். ஓவ்வொர்த்தனும் பண்றதெல்லாம் அவருக்கே வெளங்கலயாம்.
ஆர்க்கிமிடீஸ்னு ஒர்த்தன் இருந்தானாம். அவன் ஒரு நாள் பாத் டப்புல குளிக்க குந்தசொல்லோ டப்புல இருந்த தண்ணீ வெளில வளிஞ்சி போச்சாம். டப்புனு எந்திரிச்சி யூரேகா யூரேகான்னு கத்திகிட்டே பப்பி ஷேமா தெருவெல்லாம் ஓடி ராசாவ பாத்தானாம். இத எந்த ஏய் டெக்னாலஜியாவது செய்யுமா?!
நம்ம வசூல் ராஜா ஒரு தபா ஒரு கிளைண்ட்டுக்காவ அவர்ட்ட கடன் திருப்பித்தராத ஒரு தாடிக்காரன கிட்நாப் பண்ணி அவன் வூட்ல அந்த அமௌண்ட்ட ரேன்சமா கேக்க அந்த கிளைண்ட் கண்ணு முன்னாடியே போன போடச்சொன்னா, தாடிக்காரன் 'அண்ணா, நானு ஏக்கனவே வட்டியும் சேத்து குட்த்துட்டன்னா' னு சொல்ல அது உண்மைனு தெர்ஞ்சதும் கோவமான வசூல்ராஜா அவன ரிலீஸ் பண்ணிட்டு கிளைண்ட்டையே கிட்நாப் பண்ணி ரேன்சம் கேட்டு அவனோட வூட்டுக்கே போனப்போடச்சொன்னானாம்!
நண்பர்களே Artificial Intelligence என்பது பூச்சாண்டியல்ல. அது பாட்டில் பூதம். நமது கட்டளை கேட்டு கடல் மீன்களை எண்ணும், நட்சத்திரங்களை கவுண்ட் பண்ணும், இத்யாதி வேலைகள் செய்யும். ஆனால் ஆர்க்கிமிடீஸ் போல, யூரேகா மொமென்ட்ச க்ரியேட் பண்ணாது, அலெக்சாண்டர் போல, Ada Caria போல மாத்தி யோசிக்காது(lateral thinking , out of the box solutions or even plain luck solutions!).
ஒரு பண்டைய நகர நுழைவாயிலில் யாராலும் அவிழ்க்க முடியாத ஒரு கயிற்று முடிச்சு காற்றில் ஆடிக்கொண்டே இருந்ததாம்.
எவன் அதை அவிழ்க்கிறானோ அவன் உலகாளுவான் என முடிச்சை இட்டவன் சொல்லிச்சென்றதை முயன்று தோற்றவர்களிடம் வேடிக்கை பார்ப்பவர்கள் சொல்வது வாடிக்கையாம்.
ஒரு நாள் ஒரு குருதை மேல ஒரு ராசா வந்தானாம். அவனுக்கு உலகத்தையே செயிக்கணும்னு பேராசையாம். காத்தில ஆடற கயித்து முடிச்ச பாத்தானாம், கதைய கேட்டானாம், யோசிச்சானாம், கத்தியால வகுந்துட்டு போய்ட்டே இருந்தானாம். 'ஏய், இது போங்காட்டம், யாருலே நீ?, சொல்லிட்டுப்போ'' ன்னு மக்கமாருங்க கொரலு குடுக்கவும், 'மை நேம் இஸ் அலெக்சு, ஐ திங்க்கு அவுட்சைட் த பாக்சு' ன்னு சொல்லிட்டுப்போனானாம்.
இந்த சேதி ஊரெல்லாம் பரவிச்சாம். ராசாவும் எதிரிங்களோட பயத்தில சுலபமா செயிச்சிக்கிட்டே வந்தானாம். பாரசீகத்தில இவன் வர்றதை பாத்ததுமே ஒரு ராசா பயந்து ஓடிட்டானாம். நம்ம ராசா நேர மாளிகைக்குள்ள நுழைஞ்சானாம்.
'அம்மாடீ, நாம எல்லாரும் இன்னியோட முடிஞ்சம்' என அரச பெண்டு பிள்ளைகள்லாம் பதற, ஓடிப்போன ராசாவோட அம்மா மட்டும் பயப்படாம நம்ம ராசா முன்னாடி வந்து 'மவனே! அலெக்சு! நீதாய்யா இன்னிலேந்து என் மகன். ஓடிப்போன பயந்தவன் எனக்கு மகனே இல்லப்பா' ன்னு அழுதாளாம். நம்ம அலெக்சும் சென்டிமென்டுல ஜெர்க்காயி 'அம்மா!' ன்னு சொல்லிட்டு, அவங்கள ஒன்னும் பண்ணாம வேற நாடுகள பிடிக்க கிளம்பிட்டானாம்.
அந்த அம்மாதான் (Ada Caria) பெண்கள்ல முதல் அவுட்சைட் த பாக்சு திங்க்கராம்!
AI தல கீழ நின்னு முயற்சி செஞ்சாலும் அதால இதெல்லாம் செய்யவே முடியாது. ஏய்! புர்ஞ்சிதா?! அதனால் பயப்படாம வாழுங்க பொதுமக்கா, உழைங்க IT மக்கா!
Productivity Gain because of AI ங்கிறதெல்லாம் பெரிய உருட்டு. Email வந்தப்பயும் இதேதான சொன்னானுவ!
(ஏன்னா அந்த gain அ எல்லாம் நாமதான் பொழுதுபோக்குல வேஸ்ட்டு பண்ணுவமே மக்கா! எங்ககிட்டயேவா? :-)
Creativity differentiates us from machines. Let us focus confidently on that!
பேரன்புடன்,
பாபுஜி
AI பயன்பாடுகள் நம்மை நம்ப வைத்து அறிவை அழிக்கும் அறிவியல் என்பது உண்மை தான். நன்றி
பதிலளிநீக்குCreativity மட்டுமே நம்மை காக்கும் ...
நீக்கு