என் அம்மா சிறு வயதில் பள்ளி செல்லும் வழி எங்கும் சொந்தங்களால் நிறைந்திருந்தன அவரது மண்சாலைகள்.
பெரிய மட்டை, மொட்டை பாட்டி, சின்னு சின்னம்மா, தொப்புள் தாத்தா, குளத்தங்கரை பாட்டி, கதைப்பாட்டி, சமையல் சித்தப்பா, இன்னும் பலவிதமான கலவையான பெயர்கள் சொல்லி அவர் அவர்களை நினைவு கூர்வதே அவ்வளவு அழகு. சொந்தத்துக்குள் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்து என நெருக்கித்தொடுத்த மல்லிகைச்சரம் போல ஊரே மணத்துக்கிடந்தது சொந்தங்களால்.
உறவு சலசலப்புகள் இருந்தாலும் சரம் தன் இயல்பை இழக்காத சரமாகவே இருந்தது. மல்லிகை அல்லாத வேறு மலர்கள் இந்த சரத்தில் சேர முடியாது என இயல்பாகவே / வேறு வழியின்றி அதனதன் சரம் தேடி மணம் முடிக்க, இப்படி பல மலர்ச்சரங்கள் நிறைந்திருந்தின அவரது நினைவில் நிற்கும் சிற்றூர்களில்.
ஒரு ஐம்பது வருட இடைவெளியில் எவ்வளவு சிற்றூர்களும் மலர்ச்சரங்களும் காணாமலே போய்விட்டன என நினைத்தாலே மலைப்பாய் இருக்கிறது. முதலில் அறுபட்டது அவர்களது நிலத்துடனான தொப்புள் கொடி உறவு. அவர்களை தொடுத்திருந்த வாழ்வியல் நார் நைந்துபோனது அதன் பின்.
இன்று அநேக அடுத்த தலைமுறை மலர்களுக்கு அவர்கள் இருக்கும் ஊரெங்கும் சொந்தங்கள் இல்லை. சொந்தங்கள் எல்லோரும் வேறு வேறு ஊர்களில் பல்வேறு நிலப்பரப்புகளில். யார் யார் எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியாமல்.
மல்லிகைச்சரத்தில் இருந்த மலர்களின் இதழ்கள் இன்று உலகெங்கும் உதிர்ந்து கிடக்கின்றன. இருக்குமிடங்களில் அவரவர்களுக்கான புதிய சரங்களை தொடுத்துக்கொண்டிருக்கின்றன. அவை மீண்டும் மல்லிகைச்சரங்களாகவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றே தோன்றுகிறது. At best they would become Pot pourri (a mixture of dried petals and spices in a bowl to perfume a space) with their own medley of aromas - either inherent or externally scented... The drum beat of life rolls on, time marches on, flowers wither, flowers boom, but the fragrance of the memory lingers...
I thank my Mom for these intermittent nostalgia dips!
பேரன்புடன்,
பாபுஜி
கருத்துகள்
கருத்துரையிடுக