முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பாரதிக்கு எழுத வாய்ப்பு கிட்டாத பாடல்!

  தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதியவுயி ராக்கி - எனக் கேதுங் கவலையறச் செய்து - மதி தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய் என எழுதிய பாரதி, இந்தியா விடுதலை அடைந்தபின்னும் உயிரோடிருந்தால் நானிலம் செழிப்பதற்காய் அவன் எழுதியிருக்கக்கூடிய  பாடல் இதோ! " தேடி விதைகள்பல நிதஞ்சேர்த்து - பல சின்னஞ்சிறு கன்றுகளாய் மாற்றி - மனம் மகிழ்ந்து அன்புமிக உழன்று - பிறர் இளைப்பாற பல கன்றுகள் நட்டு வளர்த்து- அன்பு கூடிக் கிழப்பருவ மெய்தி - நல்மரத்தின் முதிரிலைபோல் மெல்லத்தரையிறங்கி மாயும் - சில அற்புத மனிதரைப் போலே - நான் விதையாய் வீழ்வே னென்று நினைந்து செய்வேன்  தாயே! " என் மனம் உருவாக்கிய paralle Universe ...

வெத, இவர் போட்டது!

  தற்செயலாகத்தான் எனக்கு அறிமுகமானார். மன்னார்குடியில் ஏதோ ஒரு பள்ளியில் ஒரு சிவராத்திரி அன்று வேஷ்டி திரை கட்டி அதில் ஒரு படம் காட்டினார்கள். 'அழைத்து வரவி்ல்லை, இழுத்து வந்திருக்கிறார்கள்' என சங்கிலியாய் பிணைக்கப்பட்டு அரசவையில் அரசன் முன் அடிபணியா சீற்றத்தோடு அவர் முழங்கத்தொடங்கிய அந்த நொடியில் தமிழ் மீது நான் கொண்ட காதல் இன்றும் தொடர்கிறது. அந்தப்படம் முடியும்போது அரை டவுசர் பார்வையாளர்கள் நாங்கள் அனைவரும் சிவாஜி ரசிகர்களாக மாறிவிட்டிருந்தோம். அதன் பின் சாரங்கதாரா, தூக்குதூக்கி, திருவிளையாடல், குங்குமம், பராசக்தி (ஆமாங்க, படம் வெளிவந்த பொழுது காணத்தவறியிருந்தால் அல்லது நாங்கள் பிறப்பதற்கு முன்னால் ரிலீசான படங்களை பின்னால் ஏதாவது ஓரு வருடம் நாங்கள் படித்த ஊரில் சினிமா தியேட்டரில் அல்லது டென்டு கொட்டாயில் சிவராத்திரி, பொங்கல், முழாண்டு விடுமுறை போன்ற விஷேச நாட்களில் படம் வந்தால் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு பெற்ற தலைமுறை நாங்கள்!) போன்ற படங்கள் அவரது நடிப்பின் உயரத்தால் எங்களை தொடர்ந்து வசீகரிக்க, அவரது வசன உச்சரிப்பு எங்கள் தமிழார்வத்தையும் தொடர்ந்து தூண்டியது. ஒரு விதத்தில் ...

பத்தாய நெல்லும் ஆண்டாள் பாசுரமும்

மருதவனத்து நான்கு கட்டு வீட்டில் கொல்லைப்புறத்திலிருந்து ரிவர்ஸில் வந்தால் அடுக்களை பகுதி தாண்டி ஆளோடி என்கிற பகுதி இருந்தது. விவசாய குடும்பத்தின் வருடாந்தார அறுவடை நெல்மணிகள் ஒரு பெரிய மரத்தாலான பத்தாயத்தில் பாதுகாப்பாக இருக்கும் இடம். பத்தாய பகுதி தாண்டி முன்னேறினால் இரண்டாம் கட்டு பகுதி, தாத்தா புழங்கும் இடம். தாண்டி முன்னேறினால் திண்ணைப்பகுதி, வீட்டின் முதல் பகுதி. திண்ணையின் ஒருபுறம் கூண்டு வண்டி நிறுத்தியிருக்கும். உழவுப்பணியில் ஈடுபடுபவர்கள் பணிக்காலத்தில் தினமும் பாட்டி கையால் கொல்லைப்புறம் கேணியடி தளத்தில் அமர்ந்து உண்பர். அவர்களுக்கு அதை தாண்டிய வீட்டு பகுதிகளுக்கு அனுமதி கிடையாது. நினைவு தெரியத்தொடங்கிய காலத்தில் இது ஒரு விசித்திரமான அமைப்பாக தோன்றியது...அவர்கள் அறுவடை செய்து புடைத்து தூசு நீக்கி தரும் நெல்மணிகள் மட்டும் வீட்டுப்பத்தாயம் வரை வருகையில் அவர்களுக்கு மட்டும் ஏன் தடை என்கிற கேள்வி குடைந்துகொண்டே இருந்தது. தாத்தா ஒரு பலாப்பழ மனிதர். கரடு முரடான வெளித்தோற்றம், ஆனால் உள்ளுள் அன்பு கசியும் மனிதர். அவர் மேல்சட்டை அணிந்து நான் பார்த்ததில்லை. இடுப்பில் வேஷ்டி மீது பச்சை...

வெள்ளை நிறத்தொரு பூனை

  ஒரு முறை தஞ்சை பயணத்தில் உடன் பயணித்த ஒருவர் இந்த உணவகத்தை அறிமுகம் செய்தார். "பழைய ஓட்டல்ங்க. ப்ராமின்ஸ் பல தலைமுறையா நடத்தறாங்க. சாப்பாடு நல்லாருக்கும். ஒங்க அத்தான் திருச்சி போகும்போதெல்லாம் இங்கதான் சாப்பிட நிறுத்த சொல்வார்'  மறைந்த கண்ணா அத்தான் - உணவுப்பிரியர். அவரது உணவு சாய்ஸ் சரியாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் அடுத்தபயணத்தின்போது நிறுத்தி, மதிய உணவருந்தினோம், நானும் என் மனைவியும். அளவு சாப்பாடு, தக்காளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம், மெது வடை, தயிர் வடை, சாம்பார் வடை. வீட்டு சமையல், கமர்சியல் மசாலாக்கள் அதிகமாக கலக்காத, வயிற்றைக்கலக்காத உணவு. ரசித்து உண்டோம். விலையும் அதிகமில்லை.  இலையை எடுத்து தொட்டியில் போட்டுவிட்டு, கை கழுவுகையில் அங்கிருந்த பணிப்பெண்ணிடம்  'சமையல் யாரம்மா?' என்றேன். " ஏன், உணவில் ஏதாவது குறையா?" என நிதானமான ஆண்குரல் பின்னால் இருந்து கேட்டது. திரும்பினால் இந்த புகைப்படத்தில் இருப்பவர், ஒரு defensive மன நிலையில் குறைகள் கேட்க ஆயத்தமாக நின்றிருந்தார். 'நிறைகள் சொல்லவும் தேடலாமில்லையா?' என்றேன் சிறு புன்னகையுடன். 1977 ...

கொலோசிய சிங்கங்களின் Time Travel

கொலோசிய சிங்கங்கள் ஏனோ தெரியவில்லை, சில காலமாக எங்களுக்கு வேலையில்லை, அதனால் உணவும் இல்லை. ஆரவார கூட்டத்தினருக்கு மத்தியில் எமக்கு தொடர்ந்து கிடைத்துவந்த வரவேற்பும், திகட்டத்திகட்ட விருந்தும் அந்தக்கூட்டம் போலவே காணாமல் போனது. ஏனென்று தெரியாமல் நாங்கள் அனைவரும் மன உளைச்சலுடன் எங்களை தரையுடன் பிணைத்திருந்த சங்கிலிகளில் இருந்து விடுபட போராடிக்கொண்டிருக்கிறோம். உணவும் நீரும் கடைசியாக எப்பொழுது கிடைத்தது என்பதையே நாங்கள் மறந்துவிட்டோம்... இப்படியே போனால் பசியால் உடல் வாடி மெலிந்து சங்கிலிகளில் இருந்து எங்கள் கழுத்துகள் விடுபட்டால்தான் விடுதலை கிடைக்கும். ஆனால் அதுவரை உயிரோடிருக்கவேண்டுமே என்கிற கவலையே எங்களை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. பல காலம் முன்பு வெகு தூரத்துக்கு அப்பால் நாங்கள் பிறந்து மகிழ்வாய் உறவுகளோடு விளையாடி வளர்ந்த எங்கள் ஆப்பிரிக்க, மத்திய கிழக்காசிய கானகங்களில் இருந்து எங்களை பிடித்து வந்தது ஒரு மனிதக்கூட்டம். அதுவரை பசிக்கு மட்டுமே இதர விலங்குகளை வேட்டையாடி உண்ட எங்களது உணவுப்பட்டியலில் மனித மாமிசம் இடம் பெறவில்லை. ஆனால் அடிமை வாழ்க்கையில் மனிதர்களின் அடக்குமுறையில் கட்டுண்...

விறகடுப்பு to Solar Cooker to Nirvana : ஒரு பயணம்.

வலிவலத்தில் அம்மா பாட்டி வீட்டில் கோடை விடுமுறையில் அடுப்பறையில் விறகடுப்பில் பாட்டியோ சித்திகளோ தேநீர் கொதிக்கவைக்கையில் அடுப்பின் தீக்கங்குகளுக்கு மத்தியில் புளியங்கொட்டைகளை வேகவைப்போம். கங்குகள் அணையாதிருக்க மூச்சிழுத்து ஊதுகுழலில் கங்கு நோக்கி ஊதிக்கொண்டே கொதிக்கும்  நாட்டு மாட்டுப்பாலில் சுத்தமான தேயிலைத்தூளை இட்டு இனிப்புக்கு வெல்லம் சேர்த்து தேநீர் தயாராகும் நேரத்தில் புளியங்கொட்டைகள் வெந்துவிடும். அவற்றை மென்றுகொண்டே மிடறு மிடறாய் தேநீர் அருந்துகையில் அவை நாசியில் ஏற்றிய நறுமணம் என் உள் ஆழத்தில் தண்ணென குளிர்ந்த கூழாங்கல்லாய் என்றும் சுமப்பேன். அப்பா பாட்டியின் அடுப்பறை எங்களுக்கு (பசங்களுக்கு) தடை செய்யப்பட்ட பகுதி். வாசல் திண்ணை அல்லது கொல்லைப்புற கிணற்றடி மட்டுமே எங்கள் தாத்தா 'அனுமதித்த' பகுதிகள். அப்பா பாட்டி அமைதியின் மொத்த உருவமாய் மெலிதாய் சிரித்துக்கொண்டே சித்தியின் உதவியோடு அனைவருக்கும் காய்ந்த சாண வரட்டிகளையும் விறகுகளையும் எரிபொருளாக்கி  உணவு சமைப்பார். ஒரு முறை நாங்கள் கிணற்றடி கொல்லைப்புற மண்ணில் கல்லடுப்பு செய்து, தென்னை மட்டைகள் கொண்டு தீ மூட்டி, சீவிய ...

ஈரை பேனாக்கி

  ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி, பெருமாள் பேரைச்சொல்லி லட்டு தரும் கூட்டம் நாம். விலங்கின் கொழுப்பு கலந்த நெய் என பற்றவைக்கபட்ட நெருப்பு, தணிவதற்கு நாளாகும் என்றே தோன்றுகிறது. நமது அரசியல் 'அமைப்பு' அப்படி. பக்தகோடிகள் அனைவரும் உண்ணும் உணவில் உள்ள கலப்படம் எவர் கண்ணையும் இதுவரை உறுத்தவில்லை. எந்த அரசியல் கட்சிகளும் இதுவரை கொடிபிடிக்கவில்லை. கோவிலுக்கு கோடிக்கணக்கில் தரிசிக்க வரும் பக்தர்களின் வயிற்றில் விலங்கின் கொழுப்பு இருக்கலாம் தப்பில்லை என்பதுதான் பொது நியதியாக உள்ளது. குற்றம் சாட்டியவர்களும் மறுப்பவர்களும் இதன் பின் உள்ள அரசியல் தெரியாமல் பக்தியினால் மட்டுமே இதை செய்கின்றனர் என நினைப்பவரா நீங்கள்? ஒரு சப்ளை செயினில் தவறுகள் நிகழ்ந்தால் தவறின் மூலம் கண்டு, களைந்து, செயலை தொடர்வது இயல்பான அணுகுமுறை. அது பெருமாள் பெயரால் வழங்கப்படும் லட்டு என்றாலும், நம் மாதபி புக் என்றாலும். இந்திய அரசின் செபி நிறுவன தலைவர் பொறுப்பில் இருக்கும் மாதபி புக், அதானி குழும ஊழலுக்கு உடந்தையாக இருந்தார் என மிகப்பெரிய குற்றச்சாட்டு சென்ற மாத ப்ரேக்கிங் நியூஸ். அவர், விதிமுறைகளை மீறி செயல்பட்டாரா ...