முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொலோசிய சிங்கங்களின் Time Travel






கொலோசிய சிங்கங்கள்


ஏனோ தெரியவில்லை, சில காலமாக எங்களுக்கு வேலையில்லை, அதனால் உணவும் இல்லை.


ஆரவார கூட்டத்தினருக்கு மத்தியில் எமக்கு தொடர்ந்து கிடைத்துவந்த வரவேற்பும், திகட்டத்திகட்ட விருந்தும் அந்தக்கூட்டம் போலவே காணாமல் போனது.


ஏனென்று தெரியாமல் நாங்கள் அனைவரும் மன உளைச்சலுடன் எங்களை தரையுடன் பிணைத்திருந்த சங்கிலிகளில் இருந்து விடுபட போராடிக்கொண்டிருக்கிறோம். உணவும் நீரும் கடைசியாக எப்பொழுது கிடைத்தது என்பதையே நாங்கள் மறந்துவிட்டோம்...


இப்படியே போனால் பசியால் உடல் வாடி மெலிந்து சங்கிலிகளில் இருந்து எங்கள் கழுத்துகள் விடுபட்டால்தான் விடுதலை கிடைக்கும். ஆனால் அதுவரை உயிரோடிருக்கவேண்டுமே என்கிற கவலையே எங்களை வாழவைத்துக்கொண்டிருக்கிறது.


பல காலம் முன்பு வெகு தூரத்துக்கு அப்பால் நாங்கள் பிறந்து மகிழ்வாய் உறவுகளோடு விளையாடி வளர்ந்த எங்கள் ஆப்பிரிக்க, மத்திய கிழக்காசிய கானகங்களில் இருந்து எங்களை பிடித்து வந்தது ஒரு மனிதக்கூட்டம். அதுவரை பசிக்கு மட்டுமே இதர விலங்குகளை வேட்டையாடி உண்ட எங்களது உணவுப்பட்டியலில் மனித மாமிசம் இடம் பெறவில்லை. ஆனால் அடிமை வாழ்க்கையில் மனிதர்களின் அடக்குமுறையில் கட்டுண்டு, அவர்களது வெறிக்கூச்சல்கள் எங்கள் உணர்வுகளை மழுங்கடிக்க, திறந்த வெளி மைதானமொன்றில் உணவுக்காக அவர்களால் தரப்பட்ட ஆயுதமேந்திய மனிதர்களிடமிருந்து உயிர் காக்க போராடி, வென்றால் மட்டுமே அவர்களையே உணவாக்கி உண்ணும் வாய்ப்பு  என வரையறுக்கப்பட்ட விளையாட்டில் இதுவரை வென்றவர் அனைவரும் இதோ இங்கே கட்டுண்டு கிடக்கிறோம்.


விடுதலை என்கிற உணர்வு, பழைய வாழ்வு நினைவுகள் எல்லாம் மறந்துபோகுமுன் பசியால் உடல் இளைத்து தளைகளில் இருந்து நழுவ முயன்றாலும் எங்களால் கானக வாழ்வுக்கு மீள முடியுமா? என தெரியவில்லை. மனித மாமிசம் இல்லாது உணவும் விழுங்க முடியுமா? என தெரியவில்லை... எங்கள் கானகங்கள் பிழைத்திருக்குமா? பிழைத்திருந்தாலும் சுதந்திரமாக இருக்குமா? எனவும் தெரியவில்லை.


நாளையாவது அரங்கு கூடுமா? உணவு கிடைக்குமா?



ரோமாபுரி பற்றி எரிகையில் பிடில் வாசித்த நீரோ மன்னன் இறந்துபோனது இந்த  சிங்கங்களுக்கு தெரியாது.


Colosseum was a technological marvel of our ancient world, designed to stage elaborate kills, for public entertainment.


Roman rulers organised regular events in Colosseum to feed slaves and Christians to wild animals like Lions, Tigers, etc...


These animals were housed in hundreds of cages well laid out underneath the sprawling grounds of Colosseum. These structured had a name: Hypogeum. 


It housed these wild animals, their keepers and those who were going to fight them for the survival of the fittest. These animals were lifted up through sophisticated lift systems that raised them to the surface level trapdoors. The doors, when opened, led these animals to their prey / predator who were armed if they were slaves and... unarmed if they were Christians.


It was always sellout crowds with oodles of food and frolick around. These folks would wager on who would win and who would die. 


Nero the Roman Emperor usually presided these events with lot of fanfare and he knew well that these would drug his people into the mad rush of dopamine so that his mishandling of economy and wellbeing of his citizens would never become a talking point.


Two Thousand years later, the same circus, for very similar reasons, is still running successfully with packed audience who never want to stay away from the 'Game".


Roman Empire collapsed shortly after Nero.


History is a great Teacher.


Humankind is the worst Student.


பேரன்புடன்,

பாபுஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...