தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதியவுயி ராக்கி - எனக் கேதுங் கவலையறச் செய்து - மதி தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய் என எழுதிய பாரதி, இந்தியா விடுதலை அடைந்தபின்னும் உயிரோடிருந்தால் நானிலம் செழிப்பதற்காய் அவன் எழுதியிருக்கக்கூடிய பாடல் இதோ! " தேடி விதைகள்பல நிதஞ்சேர்த்து - பல சின்னஞ்சிறு கன்றுகளாய் மாற்றி - மனம் மகிழ்ந்து அன்புமிக உழன்று - பிறர் இளைப்பாற பல கன்றுகள் நட்டு வளர்த்து- அன்பு கூடிக் கிழப்பருவ மெய்தி - நல்மரத்தின் முதிரிலைபோல் மெல்லத்தரையிறங்கி மாயும் - சில அற்புத மனிதரைப் போலே - நான் விதையாய் வீழ்வே னென்று நினைந்து செய்வேன் தாயே! " என் மனம் உருவாக்கிய paralle Universe ...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!