கொலோசிய சிங்கங்கள் ஏனோ தெரியவில்லை, சில காலமாக எங்களுக்கு வேலையில்லை, அதனால் உணவும் இல்லை. ஆரவார கூட்டத்தினருக்கு மத்தியில் எமக்கு தொடர்ந்து கிடைத்துவந்த வரவேற்பும், திகட்டத்திகட்ட விருந்தும் அந்தக்கூட்டம் போலவே காணாமல் போனது. ஏனென்று தெரியாமல் நாங்கள் அனைவரும் மன உளைச்சலுடன் எங்களை தரையுடன் பிணைத்திருந்த சங்கிலிகளில் இருந்து விடுபட போராடிக்கொண்டிருக்கிறோம். உணவும் நீரும் கடைசியாக எப்பொழுது கிடைத்தது என்பதையே நாங்கள் மறந்துவிட்டோம்... இப்படியே போனால் பசியால் உடல் வாடி மெலிந்து சங்கிலிகளில் இருந்து எங்கள் கழுத்துகள் விடுபட்டால்தான் விடுதலை கிடைக்கும். ஆனால் அதுவரை உயிரோடிருக்கவேண்டுமே என்கிற கவலையே எங்களை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. பல காலம் முன்பு வெகு தூரத்துக்கு அப்பால் நாங்கள் பிறந்து மகிழ்வாய் உறவுகளோடு விளையாடி வளர்ந்த எங்கள் ஆப்பிரிக்க, மத்திய கிழக்காசிய கானகங்களில் இருந்து எங்களை பிடித்து வந்தது ஒரு மனிதக்கூட்டம். அதுவரை பசிக்கு மட்டுமே இதர விலங்குகளை வேட்டையாடி உண்ட எங்களது உணவுப்பட்டியலில் மனித மாமிசம் இடம் பெறவில்லை. ஆனால் அடிமை வாழ்க்கையில் மனிதர்களின் அடக்குமுறையில் கட்டுண்...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!