முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அனுமாரும் சகாராவும்!


சம்பந்தமே இல்லாத ரெண்டு விசயத்தை இணைச்சி பேசினா, 'மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதே'ம்பாங்க நம்மூர்ல. ஆனா நாம வாழ்ற பூமி என்னடான்னா இதப்போல பலப்பல முடிச்சுகளாலதான் இன்னமும் சுத்திகிட்டிருக்காம். வாங்க, இதில் ஒரு முடிச்ச கொஞ்சம் டீடெயிலா பாப்போம்.


ஆப்பிரிக்க கண்டத்தோட வடக்குப்பகுதில சகாரா சகாரான்னு ஒரு பாலைவனம் இருக்கு. உலக பாலைவனங்கள்லயே ரொம்ப பெரிசு இந்த பாலைவனம்தான். பல ஆயிரம் வருசம் முன்னாடி ஒரு பெரிரிரிரிய ஏரியாக இருந்த நிலப்பரப்பு, பருவ மாற்றங்களால வத்திப்போயி பாலைவனமாச்சாம்.

இந்த பாலைவனத்தின் காலடியில், அதாவது தென் எல்லையில், கிழக்கு மேக்கா ஒரு மிகப்பெரிய புல்வெளி நிலப்பரப்பு இருக்குதுங்க. சகேல் என அறியப்படும் இந்தப்புல்வெளிதான் சகாராவ தெக்கால வளரவிடாம தடுத்துகிட்டு இருக்குது. இந்த சகேல் புல்வெளிதான் வடக்கு ஆப்பிரிக்காவையும் தெக்கு ஆப்பிரிக்காவையும் பிரிச்சு தெக்க காப்பாத்துற குலசாமி. இந்த சகேல் நிலப்பரப்புல ஒன்பது நாடுகள் இருக்கு. எல்லாமே மேய்ச்சல் வாழ்வியல் சார்ந்த நாடுகள்.

1970-80கள்ல சகேல் + சகேலுக்கு தெக்கேந்து மக்கள் இன்னும் கொஞ்சம் பெரிசா இடம் வேணும் கொமாருன்னு சகேல்ல இருக்கிற மரம் மட்டையெல்லாம் வெட்டவும், 'ஐயா ஜாலி'ன்னு சகாரா பாலை தெக்கால விரியத்தொடங்க, உலக நாடுகளல்லாம் கவலையாகி, 'கட்றா ஒரு பச்ச சுவர'ன்னு கிழக்கு மேக்கா கோடிக்கணக்கில மரங்கள நடத்தொடங்கி... நாப்பது வருசத்தில கொஞ்சூண்டு ஏரியாவதான் கவர் பண்ண முடிஞ்சுதுன்னு அங்கலாப்பு பட்டுகிட்டு இன்னும் வேகமா மரம் நட்டுகிட்டிருக்காங்க.


மொட்டத்தல மொழங்காலுன்னு மொழங்கிபுட்டு தொடங்கி ரெண்டயும் காணோமேன்னு பதறாதீங்க மக்கா. இதோ கனெக்சன் தாரேன் :-)

அதாவது, சகாராதான் மொட்டத்தலைன்னு வச்சிக்குவம் (அது கரெக்டுதானே!), மொழங்காலு அமேசான் காட்டுல இருக்குதுன்னா நம்பமுடியல இல்லயா? ஏன்னா அமேசான் காடுங்கிறது ஆப்பிரிக்காலேந்து பல ஆயிரம் மைலுக்கு அப்பால அட்லாண்டிக் கடலை எல்லாம் தாண்டினாதான் வரும். அங்க எப்படி முழங்காலு? 


இங்கதான் நேச்சர் வச்சிருக்குது ஒரு ட்விஸ்ட்டு!

வருசா வருசம் சகாரா பாலைல மணல் புயலெல்லாம் புழுதி கிளப்ப, அந்த புழுதியெல்லாம் அப்டியே காத்தில ஏறி சொய்ங்ணு அட்லாண்டிக் கடலு மேல பறந்து தாண்டி, ராமருக்கு சஞ்சீவி மலைய இட்டாந்த அனுமாரு போல புழுதிய கொண்டுபோயி அமேசான் காட்ல எறக்குது!

அமேசான் காட்டுக்கு அந்தப்புழுதி கிட்டத்தட்ட சஞ்சீவி மூலிகை மாதிரிதானாம்! 22,000 டன்னு பாஸ்பரஸ், (மரங்கள் வளரத்தேவையான தலையாய உரம்), அந்த புழுதில இருக்குதாம்!!!!!

சகாரா ஒரு காலத்தில ஏரியா இருந்ததால தண்ணில கரைஞ்ச பாறைப்படிமங்கள்ல இருந்து பாஸ்பரஸ் அங்க டெபாசிட் ஆயிருக்கா, அத நேச்சரு அலேக்கா தூக்கி ஆமேசான் கொண்டு வந்து டெபாசிட் பண்ணி மரம் வளக்குதாம்!


'அமேசானே காடுதானே! அங்கயே பட்டுப்போன மரங்கள்லேந்து பாஸ்பரஸ் கெடைக்குதே... அப்பால. எதுக்கு இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் பாஸ்பரஸ் புழுதி எல்லாம்?' என குழம்பிய அறிவாளிங்களுக்கு இந்த வருசம்தான் அதுக்கான தீர்வு கெடச்சதாம். அதாவது, வருசா வருசம் அமேசான் காட்லேந்து மழைல கரைஞ்சி வெளியேறுகிற பாஸ்பரசின் எடையும் அதே 22,000 டன்தானாம்!

இந்த வருசம், லேடஸ்ட் ஆய்வுக்கருவிகள சாட்டிலைட்ல அனுப்பி சகாரா புழுதிய ஒளிக்கதிர்கள் வழியே ஆய்வு செஞ்சதால அறிவாளிங்களுக்கு இந்த உண்மை வெளங்கிச்சாம்!

கூட்டி கழிச்சி பாத்தா மயிர்க்கூச்செறியும் அளவுக்கு இயற்கையின் கணக்கு துல்லியமா இருக்காம்!!!!!


இயற்கை போடற இந்த மொட்டத்தல முழங்காலு முடிச்சு புரிஞ்சதால இப்போ அறிவாளிங்களுக்கெல்லாம் பயத்தில தூக்கமே வர்லயாம்!

ஏன்னா, இதே அறிவாளிங்கள்லாம் சில வருசம் முன்ன பூமிய காப்பாத்துறதுக்காக தந்த சூரிய (இயற்கை) மின்சார உற்பத்தி பரிந்துரைகளால பெரிய பெரிய கம்பெனிங்கள்லாம் 'சகாராலதான் வருசம் முச்சூடும் வெயிலு பட்டய கெளப்புதாம் பாண்டியா. நாம பங்குச்சந்தைல பணம் பொரட்டறோம், அரசாங்கத்தில மானியம் வாங்குறோம், சோலார் பேனல வச்சே சகாராவ மூடுறம்' என போட்டி போட்டு செயல்படுத்தத்துவங்க, இப்ப அங்கண புழுதிக்காத்து கெளம்பறதே தடைபடப்போகுதாம்!

சகாரா நலப்பரப்பில் 20% சோலார் தகடுகளால் மூடப்பட்டாலே போதுமாம், சங்கிலிக்கண்ணியின் தொடர் அதிர்வு போல அது அங்கு நிகழும் இயற்கை சுழற்சி மேல கடப்பாறய வீச! அப்படி ஆனால் என்ன மாற்றங்களெல்லாம் நிகழும் என ஒரு Simulation experiment சொன்னவற்றில் இரண்டு முக்கியமான விளைவுகளை பகிர்கிறேன்:

1. இந்த புழுதிவழி_பல்லாயிரம்_மைல்_பாஸ்பரஸ்_பயணம் தடைப்பட்டு அமேசான் காட்டின் மரங்கள் அடிபட்டு, காடு குறுகத்தொடங்கும்.


2. சூரிய சேமிப்பு தகடுகளால் சகாரா நிலப்பரப்பு குளிர்ந்து, அதன் ஆகாசம் கொதிக்கத்தொடங்கி.... அங்கு மழைப்பொழிவு அதிகரிக்கும்.

எந்த அளவு அதிகரிக்குமென்றால்... அமேசான் காட்டில் எந்த அளவு மழைப்பொழிவு குறையப்போகிறதோ அதே அளவு!!!!!


கூட்டி கழிச்சி பாத்தா மயிர்க்கூச்செறியும் அளவுக்கு இயற்கையின் கணக்கு எப்பயுமே தப்பாது பாஸ்!!!!!


இந்த இரண்டு இடங்களையும் தாண்டி இந்த மாற்றத்தின் விளைவுகள் உலகெங்கும் எதிரொலிக்குமே என உலக நாடுகள் பல கவலை கொள்ளத்தொடங்கியிருக்கின்றன. ஏனெனில்:

1. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.


2. We the whole of humanity is living under the same, 'connected' sky and everything underneath.


3. Business will find 'more and more harmful innovations as solution and push them through governments that will antagonise the very people these governments intend to govern.


4. இயற்கை ஒருபோதும் தவறுகள் செய்வதில்லை. Nature never errs and countries have begun to realise the scale and speed of punishments that Nature unleashes on them when they err. துபாயும் ஐக்கிய அரபு அமீரகமும் போன மாதம் திடீரென தண்ணீரில் மூழ்க நேர்ந்தது - just a sample of Nature's balancing Math!


We are all living in a world connected not by greed but by Nature!

பேரன்புடன்,

பாபுஜி


அனுமன்: 'பாபுஜி நம்மல mention பண்ணிட்டாப்ல. அதனால் நம்ம படத்தயும் சேத்துடுவோம்!'



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்