அதிகாலை குளிர் காற்றில் விரையும் லாரி. லாரியின் திறந்த முதுகில் நின்றவண்ணம் பயணிக்கும் மூவர்; தொழிலாளர்கள். குலுங்கி நகரும் அந்த லாரியில் மூவரில் ஒருவன் தன்னைச்சுற்றி இரைச்சலோடு விரையும் வாகன புகை, ஓசையின் ஊடாக கைபேசியினை தன் முகத்திற்கு முன்னே உயர்த்தி தன்னைத்தானே படம் எடுக்கிறான் உலகை வென்ற புன்னகையணிந்து. சிவப்பு பச்சையாகி லாரி வேகமெடுப்பது கூட அவனது தவத்தை கலைக்கவில்லை. பெரு நகர சாலையோரம் சுகாதார பணியாளர் ஒருவர் கையில் தரை பெருக்கும் நீள்குச்சி துடைப்பத்தை தரை தட்ட இழுத்துக்கொண்டே மெல்ல நடக்கிறார் சன நெரிசலில். குப்பைகள் எதையும் நகர்த்தாமலே தரைமீது தவழ்ந்து செல்கிறது துடைப்பம். 'நகரு நகரு' என குரல் கொடுத்துக்கொண்டே சுமக்க முடியாத காய்கறி கூடையை சுமந்து சந்தையின் சேற்றுப்பாதையில் வெளியேறுகிறான் ஒரு திடகாத்திர இளைஞன். 'எதை நகரச்சொல்கிறாய்? இந்த உடலையா அல்லது ஆன்மாவையா?' என யாரும் கேட்கவில்லை. அவன் சுமையை வாங்கிக்கொள்ள வெளியில் காத்திருக்குது பல கூடைகள் சுமந்த வாகனம் ஒன்று. காலை அலுவலகம் செல்லும் வழியில் சந்தையில் நுழைந்து, இரவு உணவுக்கென கரிசனமாய் காய்கறிகள் வாங்கி அல...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!