அண்ணலும் நோக்க, அவளும் நோக்க செம்புலப்பெயல்நீர் போலவே...
'எங்க ஊரு காதல பத்தி நீ இன்னா நெனைக்கிற?' என ஒரு வெளிநாட்டுப்பெண் கேட்க,
'எங்க ஊரு காதல் போல அது ஆழமில்லம்மா' ன்னு இளையராஜா தொடங்க,
"ஆழமுன்னா என்னா?' என வெ.நா.பெண் கேட்க,
" அது ரொம்ப டீப்பும்மா' ங்கிறார் ராஜா.
நம் இன்றைய தலைமுறை இந்த கான்வர்சேஷனை உள்ளூருக்கு கொண்டு வந்தாச்சி.
காணாமலே காதல்,
கண்டதும் காதல்,
மோதலினால் காதல் என பல பரிமாணங்களை தாண்டி பயணிக்கும் காதல் எனும் பேருணர்வு, வளர்ந்த நாடுகள் நம் சிறார்கள் மீது நடத்தும் சமூக வலைதள தாக்குதல்களால் உருமாறிக்கொண்டிருக்கிறது வெகுவேகமாய்.
காதல் கைகூடாது போவதும், கனிந்து கடிமணமாவதும், சமூக ஏற்புடன் திருமணமாவதும் தொல்காப்பிய காலத்திலிருந்து தொடர்வது இப்போது எப்படி மாறிக்கொண்டிருக்கிறது?
நட்பு அல்லது காதல் என்கிற இரண்டே கட்டங்களில் பாண்டியாடிப்பழகிய பல தலைமுறைகளின் வழி வந்த நம் மண்ணின் இளைய எதிர்காலம் இப்போது காதலை ஊடறுத்து எழுப்பியுள்ள Maze ஐ எட்டிப்பார்ப்போம் இப்போது:
Situationship - நட்புக்கு மேலே, காதலுக்கு கீழே, ஆனால் காமம் உண்டு. சூழல் மாறினால் இதுவும் மாறிப்போகும்.
Fling - காதலற்ற காமம், அரித்தால் சொரிந்துகொள்வது போல.
Casual relationship - டீக்கடைகளில் தோணும்போதெல்லாம் டீ குடிப்பது போல, தோணும்போது தோணுபவருடன் காமம்.
Friends with benefits - Situationship க்கு இன்னொரு பெயர்.
Boyfriend / Girlfriend - கல்யாணம் செய்யும் உறுதியோடு பழகுபவர்கள். சேர்ந்து வாழ்வது திருமணத்திற்கு முன்பும்.
Boy Bestie / Girl Bestie: Boyfriend / Girl Friend க்கு மேல, ஆனா லவர் கெடையாத்! ஆகவே முடியாத்!சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர். ஜே. பாலாஜி விளக்குவது போல: அதாவது, பரோட்டாவிற்கு குருமாதான் மேட்ச் என்றாலும் பக்கத்தில் வைக்கப்படும் தயிர்பச்சடி போல.
காதல் தேசத்துக்கே இத்தன ரூட்டா? அப்பால கண்ணாலமாச்சின்னா?
அங்கேயும் இவர்களது பார்வை விரிகிறது...
Poly Amore - கணவனும் மனைவியும் வெவ்வேறு ஊர்களில் பணி நிமித்த வாழ்வு. தனியே வாழும் இடத்தில் வா.துணையின் அனுமதியுடனே இன்னொருவருடன் 'வாழ்க்கை' நடத்துவது. பணி இட மாறுதல் வந்தால் இதில் உள்ள நபர்களும் மாறுவர்!
Monogamus - ஒருவரே வாழ்வின் இணை என உறுதியாய. வாழ்வது. அப்பாடா! இது மட்டுமே மாறாதிருக்கிறது :-)
ஆட்டத்த கலச்சிட்டு ஆரம்பத்தில இருந்து மறுபடி ஆரம்பிக்கலாமா? என செயற்கை அறிவு நிரம்பிய இயந்திர காதலர்கள் / காதலிகள் மலிவு விலையில் உங்களுக்கு அருகிலுள்ள கடைகளில் விரைவில் கிடைப்பார்கள்!
எதே? ரொம்ப டீப்பா? போங்கப்பு!
பேரன்புடன்,
பாபுஜி
(PC: Freepik website)
கருத்துகள்
கருத்துரையிடுக