தமிழக கேரள காடுகளில் மட்டும் 40க்கும் மேலான தொல்குடி இனங்கள் வாழ்கின்றன. அடர் வனங்களுள் இருக்கும் இவர்களது பெரும்பான்மையான குடியிருப்புகளுக்கு நவீன சாலை வசதிகள் கூட கிடையாது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நம் வனங்களை காத்து வருபவர்கள் இவர்கள். நம் நாடு விடுதலை பெற்ற பின்பும் இவர்களது பணி தொடர்ந்து வருகிறது. வேட்டையாடி இனங்களாய் வாழும் இவர்களை நம் நாகரிக உலகம் மெல்ல தொடர்பு கொண்டு, 'காட்டிலிருந்து நாங்கள் கேட்பவற்றை கொண்டு வா, பண்டமாற்றாய் உனக்கு வேண்டிய நாகரிக பொருட்களை நாங்கள் தருகிறோம்' என மெல்ல பழக்கி, தேன், மூலிகைகள் என தொடங்கி விலை உயர்ந்த மரங்கள் வரை இவர்களைக்கொண்டே நம் காடுகளிலிருந்து சமவெளிக்கு இறக்குமதி செய்கின்றன. இத்தனை தொல்குடி இனங்கள் வாழும் காடுகளில் விலங்குகளால் கொல்லப்பட்டவர்கள் என யாருமில்லை என்பதே சில பத்தாண்டுகளுக்கு முன் வரை நிலவிய உண்மை. சமவெளி நுகர்வோரின் தூண்டுதலால் தொல்குடியினருக்கு தேவையில்லாத அல்லது தேவைக்கு அதிகமான காட்டு விளைச்சலை எடுக்கச்சென்ற தொல்குடியினர் எப்போதாவது விலங்குகளால் தாக்கப்படுவது நிகழும், குறிப்பாக தேனெடுக்கையில். ஆனாலும் உயிர்ச்சேதம் அரிதாக...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!