அதிகாலை வேலையில் பெங்களூரு பெருநகர சாலைகளில் பரவிக்கிடக்கும் மலர் இதழ்கள் கொள்ளை அழகு. விழுந்த மலர்கள், வெயில் ஏற ஏற வாகன இரைச்சல் கூட கூட மெல்ல காணாமல் போகும் மலர்கள், மறுநாள் காலையில் மேலும் புதிதாய், மேலும் மெருகு கூடி குவிந்து கிடக்கின்றன அதே ஒரங்களில். நகரின் பெரிய பூங்காக்களை விட சிறிய பூங்காக்களில் இன்னும் நெருக்கமாய், சிநேகமாய் இயற்கை. எத்தனையோ புதிதாய் கற்று காசு பண்ணும் பேரூர் நம்முடைய தமிழ் சாம்பாரை மட்டும் இன்னும் முழுதாய் செய்ய கற்கவில்லை! மரக்குடை பிடித்த சாலை ஓரங்களும் மத்திய தடுப்பு மர வரிசைகளும் வெப்பத்தை உள்வாங்கி நமக்கு குளுமையை மட்டும் வழங்குகின்றன பெரும்பாலான இடங்களில். ஏனோ மற்ற பெரு நகரங்கள் இதை முயலவில்லை இன்றுவரை... குப்பை குவியல்கள், குடலைப்பிரட்டும் நாற்றங்கள் - அறவே இல்லை. எல்லா வணிக நிலையங்களிலும் அவசர அவசரமாக ஆங்கில பெயர்களுக்கு இணையாக கன்னட பெயர்களும் கல்லடிக்கு பயந்து பெருகிக்கொண்டிருக்கின்றன. மருந்துக்கடைகள் பெட்டிக்கடைகள் போல ஏராளமாய்... காலை மாலை வேளைகளில் உணவகங்களில் இளசுகளின் கூட்டமென்றால் இடைப்பட்ட பொழுதுகளில் ஏனைய சனத்திரளும் நகரின் அனை...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!